புதன், 13 டிசம்பர், 2017

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் “எதிர்காலத்தமிழ்” தேசியக் கருத்தரங்கம்



எதிர்காலத் தமிழின் புதிய பரிமாணமாய் திகழப்போகும் தமிழ்ப் படைப்பிலக்கியங்கள், தமிழியல் ஆய்வுகள், தமிழ் மொழி வளர்ச்சி ஆகியவை தொடர்பான சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்த்தெடுக்கும் பொருட்டு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை 19.12.2017 செவ்வாயன்று காலை 10.30 மணிக்குக் கல்லூரி உரையரங்கில் “எதிர்காலத்தமிழ்” தேசியக் கருத்தரங்கினை நடத்தஉள்ளது. எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள் கலந்துகொண்டு ஆய்வுரைகள் நிகழ்த்த உள்ளனர்.

தொடக்கவிழா:

“எதிர்காலத்தமிழ்” தேசியக் கருத்தரங்கின் தொடக்கவிழாவில் தமிழ்த்துறைத்தலைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசுகிறார். கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி “எதிர்காலத் தமிழ்” எனும்  ஆய்வுக் கோவையை வெளியிட்டுத் தலைமையுரையாற்றுகிறார். ஆட்சிக்குழுத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, ஆட்சிக்குழுவின் பொருளாளர் அல்ஹாஜ் ஹெச்.எம்.சேக் அப்துல்காதர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் கே.ஏ.மீரான் முகைதீன், அல்ஹாஜ் வாவு எஸ். செய்யது அப்துர் ரகுமான், அல்ஹாஜ் எம்.கே.எம்.முகமது நாசர், பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முகமது நவாப் ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கல்லூரி முதல்வர்  முனைவர் மு.முகமது சாதிக் வாழ்த்துரை வழங்குகிறார்.

எழுத்தாளர் பொன்னீலன் பங்கேற்பு

சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவலாசிரியர் பொன்னீலன் கருத்தரங்கில் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்று கருத்தரங்கத் தொடக்கவுரையாற்றுகிறார். திருநெல்வேலி அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சித் தலைவர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்று “நாளைய தமிழ்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் அ.மு.அயூப்கான் அறிமுகவுரையாற்றுகிறார்.

முதல் அமர்வு

 முதலமர்வில் எழுத்தாளர் எம்.எம்.தீன், எதிர்காலத் தமிழ்ச் சிறுகதைகள்” எனும் பொருளில் ஆய்வுரையாற்றுகிறார்.

இரண்டாம் அமர்வு
 இரண்டாமமர்வில் கல்லூரி முதல்வரும் கணினி ஆய்வறிஞருமான முனைவர் மு.முகமது சாதிக் “இணையத்தமிழின் எதிர்காலம்” எனும் பொருளில் ஆய்வுரையாற்றுகிறார்

மூன்றாம் அமர்வு
மூன்றாமமர்வில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கி.பார்த்திபராஜா “எதிர்காலத் தமிழ்நாடகங்கள்” எனும் பொருளில் ஆய்வுரையாற்றுகிறார்

நான்காம் அமர்வு
நான்காமமர்வில் நாசரேத் மர்க்காஷியஸ் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சு. அந்தோணி செல்வகுமார் எதிர்காலத் தமிழ்க் கவிதைகள் எனும் பொருளில் ஆய்வுரையாற்றுகிறார்.

நிறைவு விழா:

மாலை 5.30 மணிக்கு நடைபெறும் நிறைவுவிழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக், அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர் முனைவர் ஏ.அப்துல்காதர் ஆகியோர் ஆய்வாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்குகின்றனர். அரசுதவி பெறாப் பாடங்களின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் இரா. அனுசியா நன்றியுரையாற்றுகிறார்.விழாவுக்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறை செய்துவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக