திங்கள், 18 டிசம்பர், 2017

சங்க இலக்கியமும் பல்லவர்காலச் செப்பேடுகளும்




கா. சௌந்தரராஜன்                                                                                                              பி.ரஞ்சனி
முனைவர்பட்ட ஆய்வாளர்கள்                                                          
வரலாற்றுத்துறை                                                                                                                 வரலாற்றுத்துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்              
அண்ணாமலை நகர் - 608 002.
                                          
முன்னுரை

                உலக வரலாற்று மொழிகளுக்கு எழுத்துக்கள் உருவாக்கப்பட்ட பின்னரே இலக்கியங்கள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். வாய்மொழி இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். எழுத்துருக்கள் உலகில் வெவ்வேறு  நாகரிகங்களில் வெவ்வேறு ஊடகங்கங்களில் எழுதப்பட்டன. சீனத்திலும் சுமேரியத்திலும் மண்ணோடு எழுதப்பட்டன. பழந்தமிழினைப் பொறுத்தவரை இரும்புக்காலத்தில் எழுத்துருக்கள் தோன்றின. ஒரே காலக்கட்டத்தில் அவ்வெழுத்துக்கள் கற்பாறைகளிலும் பானையோடுகளிலும் வடிக்கப்பட்டன. தொடர்ந்து செப்புப்பட்டயங்களிலும் எழுதப்பட்டன. இரும்புக்காலத்திற்கு முன்பிருந்த வாய்மொழி இலக்கியங்கள், எட்டுத் தொகையிலும் பத்துப்பாட்டிலும் உள்ள செய்திகளும் வரலாற்றுக் குறிப்புகளும் ஒத்துப் போகின்றன. இக்கூறு தமிழகத்தின் சமூக, அரசியல் வரலாற்றினைப் புரிந்துகொள்ள உதவுகிறது, இக்கட்டுரையில்

இலக்கியமும் பல்லவர் செப்பேடுகளும்

                 தமிழகத்தில் அரசுருவாக்கம் ஓர் இயக்கமாக எழும்போதே  வாய்மொழி வடிவில் இருந்த தொகை நூல்களும்பாட்டும் எழுத்து வடிவததிற்கு வந்திருக்க வேண்டும். வடபுலத்தின் இலக்கியங்களிலுள்ள சில கூறுகள் தொண்டி வடிவில் பதியப்பட்டுள்ளன. ஏனென்றால். அதற்கானத் தேவை ஆட்சியாளர்களுக்கு இருந்தது. வெவ்வேறு திணைச் சூழல்களில் இயங்கி வந்த சீறூர் மன்னர்கள் குறுநில மன்னர்கள், வேளிர்கள் வேந்தர்கள் என்போர் தங்களுக்குள் நடத்திக்கொண்ட இனக்குழுச் சண்டைகளில் தம்குல அடையாளங்களை இழக்கத்துணிந்து ஒரு கற்பனை இல்லாத ஆளுமையோடு தம்மை இணைத்துக்கொண்டனர். இதன் மூலம், தங்களுக்கு ஒரு புதிய புகழ்வழிபாட்டினையும், தெய்வீகத் தன்மையினையும் உருவாக்கிக்கொள்ள விழைந்தனர்.

                வீரகுணத்தினை விட்டு விந்தையான கடவுள் குணத்தினைப் பெறத் துடித்தனர். அதன்மூலம் மக்களைத் தன்வயப்படுத்த முனைந்தனர், இவ்வீரபுருஷர்கள் தாம் தோழமையுடன் பழகிவந்த பாணர்குலத்தினைப்  புறக்கணித்துப் புலவர் கூட்டத்தினைத் தம்போருகளிப்புடன் திருத்திக்கொண்டனர். வடபுலத்துப்  பண்புகளைக் கொண்ட இப்புலவர்களை நம்பியவர் தானமளித்தனர்.

  பதிலுக்கு, புலவர்கள் வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும், புராணங்களிலும் வருணிக்கப்பட்ட கடவுள்களுடன் தமிழகத்துமன்னர்களை ஒப்பிட்டனர். இவர்களுக்கு  மக்களின் அறிந்தேற்பினைப் பெறத் தொன்மங்கள் தேவைப்பட்டனஎனவே ஆளவிரும்புவோர் தங்கள் குலத்தினரைத் தொன்மங்களுக்குள் இட்டுச் சென்றனர்.


தமிழகத்தில் தோன்றிய இனக்குழுத்தலைவர்களுக்கு மக்களின் அறிந்தேற்பினைப் பெறுவதற்குத் தொன்மங்களையும் புராணக்கதைகளையும் இலக்கியங்களில் பதிய வேண்டிய தேவை இருந்தன.

                தென்னகத்தின் ஆந்திரப்பகுதிகளிலுள்ள சாதலாகளர்களின் பிராக்கிருத மொழிக் கல்வெட்டுகள் போக, முற்பல்லவர்  (கி.பி 300 - 600 ) என்போர் பிராகிருத மொழியிலும் சமஸ்கிருதமொழியிலும் செப்புப்பட்டயங்களை வெளியிட்டனர்.

                அச்சான்றுகளின் மொழி சமஸ்கிரும் கலந்த பிராகிருதமாயிருக்க வேண்டும். எழுத்துக்கள் கிரந்த மாயிருந்தன. தமிழ்மொழியிலும் சான்றுகள் வெளியிட்டனர், இச்செப்புப் பட்டயங்களில் பல்லவர் சில தொன்மங்களைப் பதித்துள்ளனர், இத்தொன்மக் கதைகளில் தங்களின் முன்னோர்களாகப் புராணங்களில் சொல்லப்பட்ட கடவுள்களையும் முனிவர்களையும், அடையாளம் காட்டுகின்றனர். இவற்றுள் சொல்லப்பட்ட கடவுள் பாத்திரங்கள் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்ட கடவுளாக உள்ளனர்.

                பல்லவர்கள் தங்கள் முன்னோர்களாகக் காட்டியவற்றுள் சிவன், விஷ்ணு, பிரம்மா, போன்ற புரடக் கடவுளர்களும் துரோணர் போன்ற நிரபுருடர்களும் மீண்டும் மீண்டும் காட்டப்படுகின்றனர்.

                சமணம், தமிழகத்தில் பரவலாக ஆதரவு பெற்றதனைக் கல்வெட்டுச்சான்றுகள் உறுதிசெய்த போதிலும். அக்கல்வெட்டுகளில் சமணத்தத்துவங்கள் பதியப்படவில்லை. பல்லவ மன்னர்களில் சிலர் சமணரானர். ஒழக்கத்தினைப் போதிக்கும்கொல்லாமையை (பேரினைத் தவிர்க்கும்) வலியுறுத்தும் சமணச் சமயக் கருத்தினைப் பின்பற்ற மெல்ல எழும்பும் பல்லவர் தம் கட்சியினை விதிக்க முடியாது இதனை அறிந்தே காலத்தேவைக்கேற்ப மதம் மாறியிருப்பர்

ஆட்சிப்பரப்பினை விரிக்க வேண்டுமெனில் போரிட வேண்டும். அதற்கு வீரகுணத்தினை அரசுக் குடும்பங்களுக்கும் மக்களுக்குக்கும் ஊட்ட வேண்டும். எனவேதான் இதிகாசக் கதாபாத்திரங்களின் வீர புருஷர்களான துரோணரையும் அசுலதிதாமனையும் முன்னோராக ஏற்றுக்கொண்டனர் போலும். அரசுக் குடும்பத்தினர் மதம் மாறியதனைத் தமிழர் புறக்கணிப்பரோ என்று பல்லவர் எண்ணியிருப்பர். இது தமிழோடும் தமிழரோடும் தம்மைப் பல்லவர் இணைத்துக்கொண்ட உத்தியாகும். இதனால் வேங்கடத்திற்கு வட புலத்திலிருந்து பல்லவர் இடம்பெயர்ந்தனர்.

முடிவுரை

                பல்லவர் காலத்தில் - தமிழ் மண்ணோடு தமக்கு ஒரு தொப்புள்கொடி உறவு இல்லாத நிலையில் இத்தொன்மங்கள் உறவினை உண்டாக்கிக் கொள்ளலாம். இரத்தஉறவினை உண்டாக்குதற்குப் பிறிதொரு தொன்மம் உருவாக்கப்பட்டது. தமிழர்கள் வணங்கி வந்த கடவுளர்களைத் தாமும் வழிபடத் தொடங்கியதன் மூலம் தமிழரின் சமய வலயத்திற்குள் வந்துவிட்ட பல்லவர் நாகக்கன்னிககைக் கதையின் மூலம் தமிழரின் சமூக வட்டத்திற்குள் வந்தனர்.   தொன் மக்களில் தாலிகள் குறிப்பிட்டுக் கடவுளுக்குச் சிலை வைத்துப் போற்றிய பல்லவர் இரத்த உறவினைப் பெற்றுத் தந்த நாககன்னிகைக்கும் சிலை வைத்தனர்,

குறிப்புகள்

1.            சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும் பாவை பப்ளிகேஷன்ஸ்                            சென்னை , 2004 . 158
2.            வரலாற்று நோக்கத்தில் சங்க இலக்கியப் பழமரபுக்கதைகளும் தொன்மங்களும் தமிழ்ப்பல்கலைக் கழகம். தஞ்சாவூர், 2001 . 101
3.           3.          Krishnaswamy aiyangar, some contribution of india to Indian culture (first published 1923) cosmo publications, New Delhi, 1981.
4.        P.T. Srinivasan Iyangar, History of the tamils. Form the beginning to god a,b, New Delhi.
5.        Asian Educational Service, 1929.
6.        R. Gopalan studies in the history of the pallavas of Kanchi university of Madras, Madras.1929.
7.         Professor Y. Sbbarayalv feication volume penattu veliyittakam chennai 2001. p.407 en.1.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக