மு.சாதிக்அலி,
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
சதக்கத்துல்லாஹ்
அப்பா கல்லூரி.
திருநெல்வேலி.
முன்னுரை :
தமிழ்ச் சிறுகதை இலக்கியம் பரந்த வெளிகளைத் தனதாக்கிக் கொண்டது என்றால் அது மிகையல்ல. செவிவழிக் கதைகளில் தொடங்கி இன்றுவரை தனக்கான எல்லைகளை தொடர்ந்து பரப்பிக்கொண்டே இருக்கின்றது.
“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே.”
என்னும் நூற்பாவிற்கேற்ப சிறுகதை இலக்கியமும் காலம் தோறும் தன்னை மாற்றி நவீனப்படுத்திக் கொண்டே வருகின்றது. அத்தகைய நவீனப்படுத்துதலின் வளர்ச்சி எதிர்காலத்தில் எப்படி அமையும் என்பதைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கதை இலக்கியம்
:
கதை மனித சமுதாயத்தின் மிகப் பழமையான சொத்து. கதை சொல்லும் பண்பு மனிதர்களுக்கு மட்டுமே உரியது. அதிலும் குறிப்பாக முதியவர்கள் தங்கள் குழந்தைகளோடும் பேரன் பேத்திகளோடும் அமா;ந்து உண்ணும் போதும் , அவர்களோடு உறங்கும் போதும், குழந்தைச் செல்வங்களோடு நேரங்களை செலவிடும் போதெல்லாம் அவர்களுக்கு வாய்மொழி கதைகளைச்சொல்லி அவர்களை நல்வழிப்படுத்தும் பழக்கம் நம் தமிழ் சமூகத்தினரிடையே மிகவும் அதிகமாக இருந்தது. அக்கால நீதி அவ்வாறு வாய்மொழிக் கதைகள் மூலமாகவே குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது.
(அதனை பின்பற்றி எழுந்ததுதான் இன்றைய நீதிக்கதைகள்,
சிறுவர் கதைகள்) கதை கேட்கும் ஆர்வத்தில் குழந்தைகளும் தான் செய்யும் செயல்களை மிகச் சிறப்பாகவே செய்யும். ஓருசில வீடுகளில் கதை சொல்வதற்காகவே தனி நேரம் ஒதுக்குமளவிற்கும்,
ஓருசில சிற்றூர்களில் பொதுவான இடங்களில் குழந்தைகளைச் சந்தித்து அவர்களுக்கு நீதிக்கதைகளை சொல்லுமளவிற்கும் கதை இலக்கியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. அத்தகைய கதை கேட்கும் ஆர்வமே பிற்காலத்தில் அவர்களே கதை எழுதும் அளவிற்கு அழைத்துச் சென்றுள்ளன.
கதை இலக்கியத்தின் தோற்றம் :
1920களில் தமிழ் சிறுகதைகள் சிறுகதைக்குரிய இலக்கணப்படி தோன்றினாலும் அதற்கும் முன்பே காவியங்களில் புராணங்களில் பழந்தமிழர்கள் கதைகளை அமைத்து வந்தனர். அக்கதைகள் இக்காலங்களைப் போல நாவலாகவும்,
சிறுகதையாகவும் இல்லையென்றாலும் கதை இலக்கியமாகக் காணப்பட்டன.
சிலம்பு,
மணிமேகலை போன்ற காப்பியங்களில் தேவந்தி கதை, ஆதிரை கதை, ஆபுத்திரன் கதை, எனப் பல கிளை கதைகள் அளவில் சிறியவையாகக் காணப்படுகின்றன.
படிக்கும் ஆர்வம்
:
சிறுகதைக்குரிய இலக்கணத்துடன் வீரமாமுனிவர்,
பாரதியார்,
கு.ப.
ராசகோபாலன்,
ந.பிச்சமூர்த்தி,
கல்கி,
புதுமைப்பித்தன்
, மௌனி,
பிஎஸ்
. ராமையா,
ராஜாஜி,
கு.அழகிரிசாமி,
சி.சு செல்லப்பா, வல்லிகண்ணன் போன்றோர் சிறுகதைகளை எழுதி வந்தனர்.
“சிறுகதை என்பது அரைமணி முதல்
இரண்டு மணி நேரத்திற்குள் படித்து
முடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் “
என்று எட்கர் ஆலன்போ சிறுகதையின் இலக்கணம் பற்றி கூறுகிறார்.
அவரின் கூற்றிற்கேற்ப மேற்கண்ட சிறுகதையாசிரியர்கள் நிறையப் பக்கங்களில் சிறுகதை எழுதியுள்ளனர். ஆனாலும் அக்கால வாசகர்களிடையே சிறுகதைகளைப்படிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சிறுகதைகள் மீது கொண்ட மோகத்தினாலும்
, பொழுது போக்கிற்காகவும் பேருந்துகள்,
தொடர்வண்டிகள் விமானப் பயணங்களிலும் ஓய்வறைகளிலும் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறுகதைகள் வாசிப்பதை பழக்கமாக்கிக் கொண்டனர். அவர்களின் வாசிப்பு பழக்கம் சிறுகதை இலக்கியத்தை மென்மேலும் வளர்த்தது. 1920களில் சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் காந்தியச் சிந்தனைக் கொண்ட பத்திரிகைகளும்,
வார இதழ்களும் சிறுகதைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்குமளவிற்கு வளர்ச்சிபெற்றது. தமிழ்நாடு, தேசபக்தன்,
நவசக்தி சுதந்திரச்சங்கு , ஆனந்த போதினி,
அனுமன்,
பாரத தேவி, பாரதமணி, சுதேசமித்திரன், கலைமகள் எனப்பல பத்திரிகைகள் சிறுகதைகளை வெளியிட்டன.
அவ்வாறு வளர்ந்த சிறுகதை இலக்கியத்தை மேலும் வளரச்செய்வதற்காக ஆனந்தவிகடன்,
குங்குமம்,
ராணி,
கல்கி,
தினமலர்,
தினமணி,
போன்ற நாளிதழ்களும், வார, மாத இதழ்களும் சிறுகதைப் போட்டிகளை நடத்துகின்றன.
ஆண்டுதோறும் பெரும்பாலான இதழ்களும்
, இலக்கிய அமைப்புகளும், எழுத்தாளர் சங்கங்களும்,
பள்ளிகள்,
கல்லூரிகள் போன்ற நிறுவனங்களும் சிறுகதைப் போட்டிகளை நடத்துகின்றன. போடடியில் வெற்றிபெறும் மாணவமாணவிகளை மாவட்ட அளவிலும் மாநில அளவில் என வகைப்படுத்தி பரிசுகளைக் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகின்றன. இளம் தலைமுறையினரிடையே சிறுகதை இலக்கியத்தை அறிமுகப்படுத்துவதற்காகவும் சிறந்த சிறுகதையாசிரியர்களை அடையாளம் காண்பதற்காகவும் இத்தகு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தற்கால சிறுகதைகள்:
தற்காலத்தில் சிறுகதைகள் பெரிதும் வளர்ச்சியடைந்து விட்டது.
ஆரம்பக்கட்டத்தில் இருந்ததைப் போலல்லாமல் தற்காலச் சிறுகதைகள் உருவத்தை மாற்றிக் கொண்டே வருகின்றன.
ஐம்பது பக்கங்கள் நூறு பக்கங்கள் என்றிருந்த சிறுகதைகள் பத்து பக்கங்கள், இருபது பக்கங்கள் கொண்டதாக மாறிவிட்டன.
ஒரு சிறுகதைக்கு ஒரு புத்தகம் என்னும் நிலமை மாறி ஒரு புத்தகத்தில் ஒரு சிறுகதை தொகுப்பு முழுவதும் அடங்கிவிட்டன. மேலும் சில நாளிதழ்கள், வார இதழ்களில் ஒரு பக்க, ஒரு நிமிடக் கதைகளும் வெளிவருகின்றன. ஷ்ஷ்ஷ்.tணீனீவீறீsலீஷீக்ஷீtstஷீக்ஷீவீமீs.நீஷீனீ போன்ற இணையத்தளங்களிலும்
, வளைப்பூக்களிலும்
, வாட்ஸ் அப்பிலும் சிறுகதைகள் வெளிவரத் தொடங்கி விட்டன. சில குறிப்பிட்ட வலைப்பூக்களிலும், இணையத்தளங்களிலும் சிறுகதைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் சிறுகதைகள் தொடர்பான அறிவிப்புகளும் வெளியிடப்படுகின்றன.
முடிவுரை :
பயணங்களிலோ பிற சமயங்களிலோ சிறுகதைகள் படிக்க வேண்டுமென்றால் கட்டாயம் சிறுகதைப் புத்தகத்தை கையில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நிலமை மாறி ஆண்டராய்டு அலைபேசி நம் கையில் இருந்தால் ஆரம்பகால சிறுகதைகள் முதல் தற்கால சிறுகதைகள் வரை அனைத்தையும் படித்து விடலாம் என்னும் நிலைக்கு வந்துவிட்டோம் நாம், இனிவரும் காலங்களிலும் சிறுகதை இலக்கியங்கள் மேலும் தன்னை நவீனப்படுத்திக் கொள்வதுடன், வாசிப்பையும் எளிமையாக்கும் என்பதுடன் தொடர்ந்து தன் கிளைகளைப் பரப்பிக்கொண்டே இருக்கும் என்பது திண்ணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக