திங்கள், 18 டிசம்பர், 2017

தமிழின் பண்டைய மேன்மையும் இன்றைய அவலநிலையும்


முனைவர் கு. ஹேமா,
உதவிப் பேராசிரியர்,
ஆங்கிலத்துறை,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
திருநெல்வேலி

                உலக நாகரிகங்கள்அனைத்திற்கும் தாயாக விளங்குவது சிந்து சமவெளி நாகரீகம். இந்தச் சிந்துசமவெளி நாகரீகம், திராவிட நாகரிகமே என தக்க சான்றுகளுடன் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. திராவிட மொழிகளுக்குத் தலைமை மொழி தமிழ். தமிழே முதல்மொழி, ஆதிமொழி என உலகெங்கும் நடைபெற்று வரும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

  இம்மொழியில் போற்றுதலுக்குரிய எத்தனையோ இலக்கிய இலக்கணங்கள் தோன்றியுள்ளன. இத்தகைய தொன்மையும் மேன்மையும் உடைய தமிழின் இன்றைய நிலை கவலையளிப்பதாக உள்ளது. தமிழ் தன் இயல்பு நிலையையும் தனித்தன்மையையும் இழந்து அன்னிய மொழியும் பயிற்று மொழியுமான ஆங்கிலத்தின் ஆதிக்கத்தில் மாசுபட்டு பொலிவிழந்து காணப்படுகிறது. இந்த அபாயத்திலிருந்து தூயத் தமிழை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

                செவ்வியில் மொழிகளெனக் கூறப்பட்ட பல மொழிகள் கால ஓட்டத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வழக்கதிலிருந்து அழிந்து விட்டன. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய எகிப்தில் வழங்கப்பட்ட எகிப்திய மொழி இன்றில்லை. இதைப் போல பாபிலோனிய மொழி சுவடின்றி மறைந்துவிட்டது. சாக்ரடிஸ், அரிஸ்டாட்டில் போன்றோர் தம் எண்ணங்களைப் பரிமாறிக் கொண்ட கிரேக்க மொழி உருமாறி புதிய கிரேக்கமாக உருவெடுத்துவிட்டது

வெர்ஜில் இயம்பிய பண்டைய இலத்தீன் மொழி இன்றைக்கு மக்களிடமில்லை, கோயில்களிலேயே வல்லமை பெற்றுள்ளது. இவ்வாறாக உலக மொழிகளில் பழமை வாய்ந்தனவாகக் கருதப்படும் மொழிகளில் பல இன்று வழக்கத்தில் இல்லை. இந்நிலையில் இவற்றிற்கெல்லாம் முற்பட்ட மொழியான தமிழ்மொழி இன்று 50மூ பேச்ச வழக்கிலும் 95மூ எழுத்து வழக்கிலும் உள்ளது. தமிழுக்கு உரிய தனித்தன்மையால்தான்.

                தமிழின் தொன்மை உலகம் ஒத்துக் கொண்ட ஒன்று. மொழியின் தொன்மை மட்டுமன்றி இலக்கியத்தின் தொன்மையும் செம்மொழி அந்தஸத்துக்குத் தேவையான கூறுபாடுகளுள் ஒன்றாக அமைந்துள்ளது. தமிழில் அந்தத் தகுதியைக் கொண்டவை சங்க இலக்கியங்களாகும். சங்க இலக்கியத்தின் காலம், பெரும்பான்மையான ஆய்வாளர்களால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி கி.பி. மூன்றாவது நூற்றாண்டின் நடுப்பகுதிவரை என கணிக்கப்படுகிறது.

 3000 ஆண்டுகட்கு முற்பட்டது தொல்காப்பியம் நூல் ஆகும். எம்மனார் புலவர், யாப்பென மொழிபயாப்பறி புலவர், தோலென மொழி தொன்மொழிப் புலவர் என தொல்காப்பியர் புகழ்ந்துரைக்கப் பெறுகிறார். 2600 ஆண்டுகளுக்கு முந்தைய வால்மீகி காலத்திலேயே தமிழில் அகமும் புறமும் தோன்றியிருக்கின்றன. உலக வாழ்க்கைக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் அவை நமக்குக் கூறும். இலக்கண இலக்கியச் செழுமைக் கொண்ட தமிழிலிருந்து தோன்றியமையே கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு, குடகு, போன்ற திருந்திய செம்மை மொழிகளும், துதம், கோதம், கோண்ட், கூ, ஒரியன் போன்ற திருந்தா மொழிகளும் ஆகும்.

                இவ்வளவு தொன்மையும் மேன்மையும் வாய்க்கப் பெற்ற தமிழ் பல சோதனைகளை எதிர்கொண்டிருக்கிறது. இந்தியத் துணைக் கண்டம் முழுமையும் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் வந்தபோது பயிற்றுமொழி ஆங்கிலமாகியது. ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியக் கல்வி நிலையங்களில் ஆங்கிலமே ஆளுகை புரிந்தது

தாகூர், மகாத்மா காந்தி போன்றவர்கள் தாய் மொழிக்கல்வியின் தேவையை வற்புறுத்தி வந்தனர். அன்னிய போதனா மொழி காரணமாக நம் மாணவர்கள் நம் சொந்த நாட்டிலேயே அன்னியர்கள் போலாகிவிட்டார்கள் என்றுயங் இந்தியாவில் 01.09.1921ல் எழுதினர். எனினும் நடைமுறையில் ஆங்கிலக் கல்வி முறைதான் இன்றும் இருக்கின்றது. மேலும் இன்று பாதியளவே வழங்கப்படும் தமிழ் இன்னும் ஒரு நூற்றாண்டில் தனது முழுத்தன்மையையும் இழந்துவிடும் நிலையுள்ளது

உலகில அறிவியலிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய ஜப்பான், ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல், ஜெர்மனி போன்ற நாடுகளில் தாய்மொழி வாயிலாக மட்டுமே அனைத்து வகை கல்வியும் கற்பிக்கப்படுகின்றன. அருகிலுள்ள கர்நாடகாவில் தொடக்கக் கல்வி வரை பயிற்று மொழியாக அம்மாநில அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால் ஆறு கோடி தமிழர்கள் வாழும் நமது நாட்டில் தமிழ்வழிக் கல்விக்காக இன்னும் போராட வேண்டியுள்ளது.

                தமிழின் இத்தகைய பின்னடைவுக்குக் காரணங்கள் பலவாகும். தமிழை வளர்ப்பத்தில் பத்திரிக்கைத்துறைக்குப் பெரும்பங்குண்டு. 1950-களில் கல்கியில் வெளியான அதன் ஆசிரியரான கிருஷ்ணமூர்த்தியின்பொன்னியின் செல்வன்தன் தீந்தமிழால் அதே கல்கி பத்திரிக்கையில் 13 முறை வெளிவந்துவிட்டது

மேலும் அன்றைய நாளிதழ் மற்றும் வார, மாத இதழ்களின் பெயர்களில் தமிழ் மணம் கமழ்ந்தது -குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், அம்புலிமாமா, மாலைமதி. ஆனால் இன்று? மாதிரிக்குச் சில இதழ்களின் பெயர்கள்: ஜுனியர் விகடன், ரிப்போர்ட்டர், அவள் கிச்சன், இந்தியா டுடே, ஒன் இந்தியா தமிழ்.

                இவற்றிற்கு மகுடம் வைப்பது போல் குமுதம் பத்திரிக்கையில் வெளியாகும் ஒரு தொடரின் பெயர்-‘ஒரு சிஷீறீறீமீரீமீ ரீவீக்ஷீறீ--ன் பர்சனல் பீவீணீக்ஷீஹ்இதில்ஒருமட்டுமே தமிழ் வார்த்தை, சிஷீறீறீமீரீமீ ரீவீக்ஷீறீ மற்றும் பீவீணீக்ஷீஹ் ஆங்கில வார்த்தைகள் ஆங்கில எழுத்துக்களிலேயே, ‘பர்சனல்தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்ட ஆங்கிலச் சொல். தொடர் பெயர் இப்படியென்றால் தொடரின் உள்ளே பயன்படுத்தப்பட்டுள்ள நடையோ வேதனையின் உச்சம். 22.11.2017 அன்று வெளிவந்த குமுதம் வார இதழின் தொடரிலிருந்து ஒரு பகுதி:

                ‘பொதுவாக ஞிவீமீtவீtவீஷீஸீ நம்முடைய உணவு பழக்க வழக்கம் கேட்டு அத்துடன் இயைந்த னீமீtணீதீஷீறீவீsனீ பாதிக்காத வகையில் ஒரு பீவீமீt நீலீணீக்ஷீt- நம்மிடம் தருவார். ஆனால் புத்தகம் படித்துவிட்டு, ஷ்லீணீtsணீஜீஜீ இல் பகிர ஆரம்பித்து  உணவு முறையை மாற்றுவது மிகவும் ஆபத்தான விஷயம். றிலீஹ்sவீநீவீணீஸீ அல்லது பீவீமீtவீtவீஷீஸீ நீஷீஸீsuறீt செய்யாமல் எந்தவொரு புது பீவீமீt புகுந்துவிடக் கூடாது.

                அட்டையில்குமுதம்என்ற இதழ் பெயரின் மேல், ‘தமிழர்களின் இதயத் துடிப்புஎன்று அடைமொழியோடு வெளிவரும் வார இதழில் இவ்வாறு தமிழை அழிக்கும் முயற்சி அறியப்படாமலேயே நடப்பது வேதனைக்குரியது

இதை ஆங்கிலம் தெரியாத கிராமத்தார் எவ்வாறு படிப்பர்? தமிழர் படித்து புரிந்து கொள்ள முடியாத தமிழ் பத்திரிக்கையால் தமிழருக்கு யாது பயன்? தமிழர்களின் இதயம் தமிழில் துடிப்பதே தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை. இவ்வளவுக்கும், அந்த இதழ் தோன்றிய காலத்திலிருந்து தமிழ் வளர்ச்சியில் அது ஆற்றிய பங்கு அளப்பரியது.

                நாம் நம் வியாபார நிறுவனங்களுக்குப் பெயரிடுவதில் என்ன தவறிழைக்கிறோம் என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. உதாரணமாகப் திருநெல்வேலியில் (என்ன ஒரு தித்திக்கும் தமிழ் ஊர் பெயர்!) அமைந்துள்ள சில முன்னணி உணவகம் மற்றும் விடுதிகளின் பெயர்கள் இதோ: ஹோட்டல் இம்பீரியல் ஏஜென்சி, ஹோட்டல் சவுத் அவென்யூ, ஹோட்டல் ஆப்பிள் ட்றி, ஸ்ரீஅண்ணாமலையார் பார்க், ஹோட்டல் லாரா பாரடைஸ் இன், ஹோட்டல் சியான் ரெசிடன்ஸி, ஹோட்டல் சகுந்தலா இன்டர்நேஷனல், ஹோட்டல் புளு ஸ்டார், ஆர் ஆர் இன், ஆர். ஆர், ராயல் பார்க், மற்றும் பல. மேலும் துணி நிறுவனங்களின் பெயர்களும் இதே ரகத்திலேயே உள்ளன

கலர்ஸ், பேசிக்ஸ் லைஃப், ட்ரண்ட்ஸ், பேன்ட்லூம்ஸ், அன்னை கிரான்ட் மற்றம் அத்திஸ் பொட்டீக். பன்னிரண்டு ஆழ்வார்களில் நான்கு ஆழ்வார்கள் தாமிரபரணி நதிதீரத்தில் தோன்றி தமிழும் அறமும் ஒருங்கே வளர்த்த பெருமையுடைய நகரம் நம் திருநெல்வேலி. இதனிடத்தில் அமைந்த ஊர்களின் பெயர்களில் தமிழின் ஆளுமை அதிகம்: ஆழ்வார்திருநகர், திருக்கோளுர், செய்துங்கநல்லூர், தென்திருப்பேரை, திருக்குறுங்குடி, ஆனால் இன்றோ என்ஜி.. காலனி, எஸ்பி. காலனி, ..பி. காலனி, டார்லிங் நகர் மற்றும் பல தமிழர்களின் மேம்பட்ட உணவு முறைகளை மேற்கத்திய ஒவ்வாத உணவுகள் ஆக்ரமித்ததில் ஒரு சந்ததியினரே நோய் நொடிகளுக்கு ஆட்பட்டு, பாடம் கற்று இன்று மீண்டும், சிறுதானியம், ரசாயனமற்ற உணவுகள் என்று மீண்டிருப்பதை போன்று தமிழை புறக்கணிப்பதும் அதற்குரிய எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.

                தமிழில் அறிவியல் செறிவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கலைச் சொற்கள் இல்லை என்ற வாதம் களையப்பட வேண்டும். ‘ஐஸ்கீரிம்என்பதைபனிக்குழைவுஎன்றும், ‘பிளசர் கார்என்பதைமகிழ்வுந்துஎன்றும், சிடி என்பதைகுறுந்தகடுஎன்றும் நயமிக்க வகையில் புதிய கலைச்சொற்களால் வழங்கியது போன்று தமிழக அரசு அறிஞர்களைக் கொண்டு எந்திரவியல் துகிலியல், உலோகவியல், மருத்துவயியல் ஆகிய துறைகளுக்குத் தேவையான கலைச்சொற்களை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தமிழர்களாக நாமும் நம் பயிற்று மொழியான ஆங்கிலத்தில் பயிலும் ஒவ்வொரு அறிவியல் சார்ந்த சொல்லுக்கும் தமிழில் என்ன இணைச்சொல் என்பதை ஆர்வமுடன் தெரிந்து கொண்டு அதை வலைத்தளங்களில் பகிர்ந்து பழக்கத்துக்குக் கொண்டு வருவதன் மூலம் தமிழும் வளரும், நமது இருமொழி புலமையும் மேம்படும். நம் மொழிக்கு நாம் செய்யும் தொண்டு இதுவாகும்.

                வேதனையளிக்கும் இன்னுமொரு சூழல்-இன்றைய யதார்த்த சூழ்நிலையில் தமிழிலக்கியக் கல்வி கேள்விக்குறியாயிருப்பது உலக பழக்க வழங்கங்கள் பலவற்றில் தமிழாய்வுத் துறைகள் மூடப்பட்டு வருகின்றன. ஜெர்மனியிலுள்ள ஹேம்பரிக் பல்கலைக்கழகம், நெதர்லாந்திலுள்ள லீடன் பல்கலைக்கழகம், இங்கிலாந்திலுள்ள ஸ்கூல் ஆஃப் ஆஃரிக்கன் அண்ட ஓரியன்டல் ஸ்டடீஸ் மற்றும் இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகம் ஆகியவற்றிலுள்ள தமிழாய்வு மையங்கள் மூடப்பட்டுவிட்டன. இன்னும் சில அவ்வழியில் தொடரவிருக்கின்றன. புதிய புதிய அறிவியல் கோட்பாடுகளுக்கும் மாறிவரும் புதிய புதிய இலக்கிய போக்குகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றி புனரமைத்துக் கொள்ள வேண்டும்.

                நம் மொழியின் அருமையை உணர்ந்து அதைப் பெருமைப்படுத்துவதிலும் அதன் தனித்துவத்தைப் போற்றிக் காப்பதிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழியைச் சிறப்பிக்கும் விதத்தில் இருக்கை அமைக்கும் முயற்சியை முன்னெடுத்து வருகிறார்கள். உலக அளவில் வாழும் தமிழர்களை மொழி அடையாளத்தின் கீழ் ஒருங்கிணைக்கிற விதத்தில் நடக்கும் இந்த இருக்கை உருவாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய பழமை கொண்ட நம் மொழிக்கு நாம் ஏற்படுத்தித் தரும் மகத்தான மரியாதை. உலக அளவில் தமிழுக்கான இருக்கை உருவானால் உலகளாவிய அளவில் தமிழை எடுத்துச் செல்ல முடியும். ‘யாதும் ஊரேஎன்று அன்றே சொன்ன மரபையும், நம் மண்ணின் அபூர்வமான சித்தர்களின் மகவத்துவத்தையும் வளமான சங்க இலக்கியத்தையும் மொழித் தடைகளைத் தாண்டிப் பரப்ப முடியும். மொழியின் வேர்களை நம் மனதில் தாங்கியிருக்கிறோம் என்பதையும் உணர்த்த முடியும். நம் மொழியின் அருமையை நாம் உணர்ந்தால் வலிமையாக நம் தமிழ் வாழும்.

                தமிழர்களாகிய நாம் நம் மொழியை நேசிக்க வேண்டும். இதன் இனிமையையும் செழுமையையும் நம்மை துன்பங்களை மறக்க செய்து விடும் வல்லமை படைத்தன. பொதுமறையாம் திருக்குறளை உலகுக்கு நல்கிய பெருமை கொண்ட மொழி நமது தமிழ் மொழி. ஷ், ஸ் போன்ற சிரத்தையெடுத்து உச்சரிக்கும் எந்த எழுத்தும் இல்லாத காரணத்தால் எத்தனை மணித்துளி இம்மொழியைப் பேசினாலும் கேட்டாலும் பேசும் உறுப்புகளோ, கேட்கும் உறுப்புகளோ சோர்வு கொள்வதில்லை. இதன் நயமும் கவித்துவமும் நம்மை மெய்மறக்கச் செய்து விடும். ‘செம்புலம் கலந்த நீர்ப்போல்’, ‘திருவேங்கடச் சுனையில் மீனாய் கடவேன்போன்ற வரிகள் எத்தனை கவித்துவம் நிறைந்தவை! இத்தகைய தமிழின் பெருமையானது சங்க காலத்தில் சங்கப் புலவர்களையும் பின் நாயன்மார்கள் ஆழ்வார்களையும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியையும், இடைக்காலத்தில் பாவேந்தரையும் சார்ந்தது போல, நிகழ்காலத்தில் தமிழைப் போற்றிய பெருமை நம் ஒவ்வொருவரையும் சார வேண்டும்.  

துணைநூற்பட்டியல்
                குமுதம் வார இதழ், மலர்9, மதி72, நாள் : 08.11.2017



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக