முனைவர் அ.சே.சேக்சிந்தா,
உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை
சதக்கத்துல்லாஹ்
அப்பா கல்லூரி, திருநெல்வேலி.
முனைவர் நெடுஞ்செழியன்,
மொழியியல் உயராய்வு மையம்,
அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.
ஆதித் தமிழனின் அற்புதக் கலைகளில் வர்மக்கலையும் ஒன்று. இவ்வரிய கலையை மர்ம விபாக சாரீரம், சூட்சம்,
அடக்கம்,
ஏமம்,
'தெற்கன் களரி” என்றெல்லாம் அழைப்பர். சீனாவில் வேரூன்றி இருக்கும் குங்ஃபூ, தூரக் கிழக்கு நாடுகளில் பயன்பாட்டிலிருக்கும் ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ போன்ற கலைகள் பிறரைத் தாக்கவும், தாக்க வருபவர்களைத் தடுக்கவும், தன்னைத் தற்காத்துக் கொள்ளவுமே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். ஆனால், நம் முன்னோர்கள் கண்டறிந்து பயன்படுத்தி வந்த வர்மக்கலை தற்காப்புக் கலையாக மட்டுமல்லாது உயிர்க்காக்கும் மருத்துவக் கலையாகவும் திகழ்ந்தது.
இவ்வரிய கலையை வளர்த்தெடுத்து வாழ்வளித்துப் பாதுகாத்த இனம் தமிழினம். வேறு எந்தக் கலைகளிலும் இல்லாத வகையில் தமிழனின் தற்காப்புக் கலையான வர்மக் கலையில் ஒளிவு, பூட்டு,
பிரிவு என்னும் முக்கியப் பிரிவுகள் உள்ளன. இந்த வர்மக் கலையினால் என்ன பலன் இருக்கிறது என்று சிலர் எளிதாகச் சொல்லி விடுவர். ஆனால் உண்மை நிலையை அறிந்தால் நாம் எவ்வளவு சிறப்பு மிக்க உயிர் காப்புக் கலையை மறந்திருக்கிறோம்! இல்லை! மறைத்து வைத்து விட்டோம்! அல்லது அழித்து விட்டோம் என்பதை அறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உடல் மொழியாக உயாந்து நின்ற மொழிதான் வர்மம்.
அறிய வர்மக் கலையின் அற்புதச் செயல் முறைகள்:
எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வெட்டுக் காயங்களிலிருந்து வெளிப்படும் உதிரத்தை எந்தக் கட்டும் போடாமல் வர்ம நரம்புப் பிடியைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தி விடலாம் என்றால் நம்ப முடியுமா? பிரைன் டியூமர், சைனஸ்,
ஒற்றைத் தலைவலி என எல்லாப் பிரச்சினைகளையும் நீக்க கணுக்காலில் நரம்பு அடங்களைப் பயன்படுத்தி சரி செய்து விடலாம் என்று சொன்னால் நம்மில் நம்புபவர்கள் இல்லை என்றே சொல்லி விடலாம். காரணம் நாம் நம் முன்னேர்களின் அறிவையும் அனுபவ வைத்திய முறைகளையும் அறிய வில்லை என்றே பொருள். உலகத்தில் வேறு எந்த இனத்திடமும் காணப்படாத அதிசய கலையான வர்மக் கலை இன்று அழிந்து வருகின்றது.
ஜிமீஸீழீவீளீu ஸீணீக்ஷீணீஸீஷீளீணீளீu என்னும் சீன வாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜிலீமீ திவீரீலீtவீஸீரீ
tமீநீலீஸீவீஹீuமீs
tஷீ
tக்ஷீணீவீஸீ
tலீமீ தீஷீபீஹ் யீக்ஷீஷீனீ மிஸீபீவீணீ என்பதாகச் சொல்கிறார்கள்.
மனித உடலுக்குப் பல நூறு வகையான உடற்பயிற்சிகள் உள்ளன. ஆனால் நம் உடலின் ஒவ்வொரு அசைவுகளையும் ஆட்டிப்படைக்கின்ற மூளையைச் செயல்பட வைக்க ஏதாவது உடற்பயிற்சிகள் உள்ளனவா என்று அமெரிக்காவில் ஆய்வு நடைபெற்றது.
அந்த ஆய்வின் அதிசய முடிவு நம்மை வியப்படையச் செய்துள்ளது.
ஆம் நம்முடைய ஆசிரியப் பெருமக்கள் படிக்காத மாணவ மாணவியர்களுக்குக் காதைப் பிடித்து இழுத்து தோப்புக் கரணம் போடச் சொல்வார்களே அந்தப் பயிற்சி தான் மூளையை சுறுசுறுப்பாகச் செயல்பட வைப்பதற்கான உடற்பயிற்சி என்று இன்று கண்டறிந்துள்ளார்கள். குறிப்பிட்டுச் சொன்னால் ஆச்சர்யம் ஏற்படும். காரணம் காதின் ஓரங்களிலும் அதன் தொங்கு சதைப் பகுதியிலும் பல்வேறு வர்மப் புள்ளிகள் உள்ளன. இந்த வர்மப் புள்ளிகள் மூளை நரம்பின் செயல்பாடுகளை ஓழுங்குப்படுத்துகின்றன. இதைத் தான் முன்னோர்கள் முன்பே அறிந்து சொல்லி இருக்கின்றார்கள்.
வர்மக் கலை ஆற்றலை மையமாகக் கொண்ட கலை, நரம்பு மண்டலத்தை மையப்படுத்திய சிகிச்சையாகவும் எலும்புகளை மையமாகக் கொண்டதாகவும்; தசைகளை மையமாகக் கொண்ட சிகிச்சையாகவும் உடல் உள்ளுறுப்புகளை மையமாகவும், உயிர்க் காற்றை அதாவது பிராணனை மையமாகவும் கொண்டு விளங்கக் கூடிய அரிய சிகிச்சை முறைதான் வர்ம சிகிச்சை முறையாகும். உலகை வெல்லக் கூடிய அரிய சிகிச்சை முறையான இவ்வர்ம சிகிச்சையை உலகம் அறிந்து புகழும் காலம் வெகு தொலைவில் இல்லை.
மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு எவ்வாறு மொழியைப் பயன்படுத்துகின்றானோ அது போலவே நம் உடல் சார்ந்த பிரச்சினைகளை உடல் வெளிப்படுத்துகின்றது.
இதையே நாம் நோய்கள் என்று கூறுகின்றோம். மனித உடலில்; ஏற்படும் நுட்பமான வேறுபாடுகளை அறிந்து அதற்கான தீர்வுகளைச் செய்வதே வா;ம மொழியிலாக அமைகின்றது.
நோய்க்குறியீடுகளும் அதற்கான வர்மத் தீர்வு முறைகளும்:
ஒரு மனிதனின் உடலில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது நோய்கள் பற்றி இப்பகுதி ஆய்கிறது. குளிர்ச்சியினால் ஏற்படும் சைனஸ் என்னும் நோயினை 'வலமூர்த்தி காலம்' என்ற புள்ளிகளைப் பயன்படுத்துவதன் மூலம் சரி செய்யலாம். அடிபட்டதாலோ அல்லது அதிர்ச்சியினாலோ சில வேலைகளில் தாடை பூட்டிக் கொள்ளும். இதன் காரணமாக முகவாத சன்னி ஏற்படவும் காரணமாக அமையும். இதனைச் சன்னி வர்மம் என்பர். பேசாத குழந்தைகளைப் பேச வைக்கவும் வர்மப் புள்ளிகள் உள்ளன. இதனை
”ஒட்டு வர்மம்” என்பர். உணவுக் குழாயின் பாதையைச் சீராக்கவும் இரைப் பையின் மூடியைச் சரி செய்யவும் வயிற்றின் அமிலத் தன்மையை குறைக்கவும் ”சங்குத் திரி”
வர்ம இழக்கு முறை முக்கியமாகச் செயல்படுகின்றது.
ஹைப்போ தைராய்டு பிரச்சினைகளுக்குத் தீர்வாக ”சுமை வர்மம்” என்று நம் முன்னோர்கள் ஆராய்ந்து நம் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைத் தந்துள்ளார்கள். தொட்டுக் காட்டாத வித்தை; சுட்டுப் போட்டாலும் வராது என்பது நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லிக் காட்டிய பழமொழியாகும்.
கழுத்து நடுக்கம், கழுத்து எலும்புத் தேய்மானம், ஆகியவற்றைச் சரி செய்ய கொண்டைக் கொல்லி வர்மம் பயன்படுகின்றது. இதே வர்ம தடவு முறையைப் பயன்படுத்தி தலை நிற்காத குழந்தைகளின் தலையையும் நிறுத்த முடியும். இதன் மூலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சியின்மை என்னும் நோயை ஆரம்பத்திலே கண்டறிந்து அதை சரி செய்து விடவும் முடியும். ஆரம்ப நிலையில் உள்ள ஆட்டிசம் என்னும் நோயினால் அவதியுறும் குழந்தைகளுக்கும் இதே வர்மத்தடவு முறை ஒரு வரமாக அமைகிறது.
நாற்பது முதல் நாற்பத்து ஐந்து வயதில் சராசரியாக ஏற்படக் கூடிய வாதக் கோளாறு அல்லது பார்வைக் குறைகளைச் சரிசெய்வதற்கு ”சீறும் கொல்லி”
என்னும் வர்மத் தொடுதல் முறை பயனளிக்கக் கூடியதாக அமைகின்றது. வர்மப் புள்ளிகளைத் தொடுவதன் மூலமும், தடவு முறைகள் மூலமும் சரி செய்யலாம். 'பட்சி வர்மம்” கர்ப்பப் பையின் செயல்பாடுகளைச் சீர் செய்ய உதவுகின்றது.
அதுமட்டுமல்லாமல் பிள்ளைப் பேற்றின் போது ஏற்படக் கூடிய சிக்கல்களை நீக்கி சுகப் பிரசவமாக இவ்வகை வர்ம முறைகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர்.
வர்ம மருத்துவத்தில் பிராணன் இயங்கும் இடங்களில் கண்ணிற்கு மேல் அமைந்துள்ள புருவமும் ஒன்றாகும்.
ஒரு மனிதனுக்கு மரணம் நெருங்குவதை அவன் புருவத்தில் உள்ள உரோமங்கள் உதிர்வதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம் என்பார்கள் நம் முன்னோர். ஆனால் இன்று நம் பெண்கள் புருவ முடிகளைத் திருத்துகின்றோம் என்ற பெயரில் (த்ரெட்) செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
பால வர்மம், பட்சி வர்மம், திலாத வர்மம், அடக்க வர்மம், நேர்ம வர்மம் என முக்கிய வர்ம நரம்புத் தொகுதிகள் நிறைந்த இப்பகுதியை நாம் எப்படித் தவறாகக் கையாளுகின்றோம்.
இதை நாம் புரிந்து கொள்ளாததற்குக் காரணம் நம் முன்னோர்களில் அறிவுப் பூர்வமான அறிவியலை உணராததுதான்.
”கொள்ளதற்கு வர்மத்தால் சன்னி வெட்டு
கொண்டு தென்றால் வெருவிரலி னிடையே தென்னி
விள்ளுவேன் ஓரிறைதான் தள்ளி மெள்ள
வெட்டியே பிடித்திடுவாய் சன்னி போகும்”
-வர்மத் திறவுகோல் - 9.
மனிதனின் உள்ளங்கையில் உள்ள கொம்பேறி வர்மப் பகுதியில் அடிபட்டால் சன்னி வரும். முடிச்சு வர்மப் பகுதியில் அடிபட்டால் முகத்தைக் கோணும்படிச் செய்யக்கூடிய கோணச் சன்னி தோன்றும். இதிலிருந்து குழந்தைகளைக் கண்டிக்கும் போது கூட மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும் என்பதை அறிய முடிகின்றது.
வர்மம் என்றதும் அது பிறரை வீழ்த்தும் கலை என்றே பலரும் நம்புகின்றனர்.
அது வீழ்த்தும் கலையல்ல. மாறாக அது வீழ்ந்து கிடப்பவர்களை எழுப்புகின்ற மகத்துவம் நிறைந்த மருத்துவக் கலை. உலகை வெல்லும் தமிழ் மருத்துவக் கலையைப் பாதுகாப்போம்!
பயன்படுத்துவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக