திங்கள், 18 டிசம்பர், 2017

எதிர்காலத் தமிழில் புதிதாக தோன்றச் சாத்தியமுள்ள வகைமைகள் மொழித்தூய்மை - ஒரு சமுதாய மொழியியல் பார்வை


.குமரேசன்
உதவிப் பேராசிரியர்
மொழியியல் உயராய்வு மையம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

முன்னுரை:

                எந்த ஒரு மொழியும் தனக்கென ஒரு வரலாறும் வாழ்வும் கொண்டுள்ளன. இதற்குத் தமிழ் மொழியும் விதிவிலக்கல்ல. ஏறத்தாழ ஆண்டுகளாக பல்லாயிரம் எத்தனையோ மாற்றங்களையும் வளர்ச்சியையும் கண்டு வாழ்ந்து வருவது தமிழ்மொழி.

                இந்நிலையில் இன்று தமிழ்மொழி ஓர் இரட்டை வழக்கு மொழியாக உள்ளமை நாம் நன்கறிந்தது. சாதரண முறையில் தமிழ் மக்கள் பேசும் மொழிக்கும், மேடையிலும், வகுப்பறையிலும், மற்றும் எழுதுவதிலும் காணப்படுகின்ற மொழிக்கும் இடையே வேற்றுமை உண்டு. இந்த வகையில் முதல் வகையையைப் பேச்சு மொழி என்றும் பின்னதை எழுத்து மொழி என்றும் கூறலாம்.

                இதில் பேச்சு மொழியால் தமிழ்மொழியில் ஏற்பட்டுள்ள நிலையையும், எதிர்காலத்தில் தமிழ்மொழியில் ஏற்படப்போகும் சாத்தியமுள்ள வகைமைகளை இக்கட்டுரையில் காணலாம்.

                இன்றைய காலச்சூழலில் அறிவியலின் வளர்ச்சி தவிர்க்க முடியாத ஒன்றுஎங்கும், எதிலும், எந்திர ஆளுமை மேலோங்கியுள்ளது. இக்காலக் கட்டத்தில் எதிர்கால மொழித் தூய்மையின் தேவை, பங்களிப்பு, பயன்பாடு பற்றிய மதிப்பீடாக இக்கட்டுரை அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மொழியின் இன்றியமையாமை:

                மொழி என்பது தொடக்கத்தில், கருத்துப் பரிமாற்றத்திற்கானக் கருவியாக மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால் காலப்போக்கில் அது தன் பங்களிப்பைப் பல்வேறு தளங்களில் அளிக்கத் தொடங்கியது.

                ஒரு மொழியைப் பேசுகிற இனம், காலம், காலமாகத் தொடர்ந்து வாழும் இடம், நாளடைவில் அவ்வினத்தின் நாடாக ஆகிறது. மொழிவளர்ச்சி - அவ்வின மக்களின் அறிவு, கலை, நாகரிகம், பண்பாடு என்று பலவற்றின் வளர்ச்சிக்கும் துணை செய்கிறது. தவிர இவற்றை அடுத்தடுத்த தலைமுறையினர் பெற்றுக் கொள்ளவும் அவற்றை அவர்கள் வளர்க்கவும் - மொழி வழிகோலுகிறது. மொழி இல்லையானால் உலகம் தன் இயக்கத்தின் ஒரு பகுதியை இழந்துவிடும்என்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

பிறமொழிக்கலப்பு:

                ஒரு மொழியில் பிறமொழிச் சொற்கள் பின்வரும் சில காரணங்களால் ஏற்படுகின்றன.
1.            அயல் நாட்டினர் ஆட்சி

                ஆங்கிலேயர் ஆட்சியில், ஆங்கிலம் தமிழில் கலந்தது.

2.            அயலாரின் பண்பாட்டு தாக்கம்:

                ஆரியரின் பண்பாட்டுப் படையெடுப்பால் தமிழக மக்கள் முதல் மன்னர்கள் வரை வாழ்வியல் கூறுகளில் சமஸ்கிருத மொழி கலந்தது.

3.            பிறநாட்டு வாணிகத் தொடர்புகள்:

                அரேபியர், யூதர், பாரசீகர், சீனர், ஐரோப்பியர்கள் இந்தியாவில் வாணிகம் நடத்தியபோது அவர்களது மொழிச்சொற்கள் தமிழில் கலந்தது.
4.            கண்டுபிடிப்புகள்:

                புதுக் கருவிகள் கண்டுபிடிக்கும்போது அவற்றின் பெயர்கள் கண்டு பிடித்தவரின் பெயரிலேயே பயன்படுத்தும்போது பிற மொழிச் சொற்கள் கலக்கின்றன. (-டு) மொபைல், டீசல்.
5.            கல்வி, வேலைவாய்ப்பு:

                கல்வியைப் பிறமொழியில் பயிலும்போதும், வேலை வாய்ப்புக்காக பிறமொழியைப் பயிலும் போதும் அம்மொழிச் சொற்கள் தாய்மொழியில் கலந்துவிடுகிறது.
6.            பிறமொழிக் கவர்ச்சி:

                ஆங்கிலத்தில் பேசப்படுவதைப் பார்த்து தாமும் ஆங்கிலச் சொற்கள் பேசுதல்  (-டு) வணக்கத்திற்கு பதில்ஹாய்’, ‘ஹலோ’, ‘குட்மார்னிங்போன்ற சொற்களைப் பயன்படுத்துதல்.
7.            ஊடகங்கள்:
                நாளேஏடுகளில் தரப்படும் செய்திகளில் பிறமொழிச் சொற்கள் கலந்து எழுதுதல் (-டு) தர்ணா, பந்த், புருஷன், வாஸ்தவம் முதலியன.

8.            மொழிபெயர்ப்புகள்:

                பிறமொழி நூல்கள், கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதுதல் (-டு) ஐனநாயகம், சோசலிசம்.
பிறமொழிக்கலப்பின் பாதிப்புகள்:

                ஓர் இனத்தை அழிக்க விரும்பும் எவரும் அந்த இனத்தின் மொழியை முதலில் அழிப்பர். உன் தாய்மொழியைக் காத்தால் உன் தாய் நாட்டைக் காத்திடலாம் என்கிறார், “ஏமன்டிவேயரா ஐரிசு”.
            பிறமொழி கலப்பினால் ஒரு மொழி தன் தனிதன்மையை இழக்கின்றது; அம்மொழி சிதைந்து வேறொரு மொழியாக திரிபடைகிறது. (-டு) மொழிக்கலப்பினாலும், ஒலிக்கலப்பினாலும் தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலிய இருபதுக்கும் மேற்பட்ட மொழிகள் தோன்றின.
            இதனால் மூலமொழி பேசும் மக்களின் எண்ணிக்கை குறைகிறது அவர்கள், வழிவழியாக வாழ்ந்துவரும் நாட்டின் பரப்பும் குறைகிறது. திரிபடைந்த மொழியைப் பேசுவோர் நாளடைவில் தங்களின் மொழிக்குத் தாய் எது என்று அறிய முடியாமலே போகிறது.

            பிறமொழிக்கலப்பு மொழி அளவில் மட்டும் நிற்காமல், பிற இனத்தாரின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகளும் கலக்கும் நிலை ஏற்படுகிறது.
            பிறமொழியைக் கலக்க, கலக்க மூலமொழி அழிந்து போகக் கூடிய நிலை ஏற்படலாம்.
மொழித்தூய்மையம்:
                பிறமொழிக் கலப்பையும், தம் மொழியைக் காக்கவும் மேற்கொள்ளப்படும் செயலேமொழித்தூய்மையம்”. மொழியை தூய்மைபடுத்த பிற மொழிச்சொற்களை நீக்கும் முயற்சிகளேதூய்மையம்எனப்படுகின்றன. என்று அறிஞர்  குறிப்பிடுகிறார்.

                ‘தூய்மையம்என்பது மொழியை வளப்படுத்துவதும் பிறமொழி கலப்பின் வாயில்களை அடைத்தலும் எனலாம் - வெச்சுலர்பால்.

                பிறமொழிக் கடன் பேறுகள், பிறமொழிச் சொற்கள் ஆகியவற்றை இலக்கிய மொழியிலிருந்து நீக்குதல், மொழிக்குப் புறம்பான சொற்கூறுகள், இலக்கணக் கூறுகள் ஆகியன ஊடுறுவாமல், தடுத்தல் ஆகியவையே தூய்மையம் எனப்படும். - சோவியத் கலைக்களஞ்சியம் தொகுதி 21, பக்கம் -20.
தமிழில் தூய்மையம் தொடக்கநிலை:

                தமிழில் சமஸ்கிருதத் தாக்கம் கி.மு.1200- & 1000-ஆவது ஆண்டுகளில் ஏற்பட்டதாகக் கொள்ளலாம் என்பார் பெருஞ்சித்திரனார். திருக்குறளில் உள்ள ஆயிரக்கணக்கான சொற்களில் 11 சொற்களே சமஸ்கிருதச் சொற்கள். தொடக்கத்தில் மிகக்குறைவாக இருந்த சமஸ்கிருதச் சொற்கள் ஆரியர்களின் வருகைக்குப் பின் அதிகரித்து சிலப்பதிகாரம், மணிமேகலை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் நான்கு முதல் ஐந்து விழுக்காடு பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளதாக பேரா.மு.வரதராசனார் குறிப்பிடுகிறார்.

வளர்ச்சி நிலை:

                தமிழகத்தில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் சமண, புத்த மதங்களை சார்ந்தவர்களால் பிராகிருதம், பாலிமொழிக்குப் பெருந்துணை செய்தது. 7-ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் தமிழில் கிரந்த எழுத்து கலந்து எழுதினர். 9-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர் ஆட்சி ஏற்பட்டது. இருந்தாலும் சமஸ்கிருத வல்லாண்மை தொடர்ந்தது மன்னர்களின் பெயர்கள் கூட ராஐ ராஐசோழன் ரா«ஐந்திர சோழன் என்று சமஸ்கிருதம் கலந்த பெயர்கள் வழங்கப் பெற்றது. சமஸ்கிருதம் வல்லாண்மை பெற்றிருந்தபோது 11-ஆம் நூற்றாண்டில் தமிழ் உரை நடையில் சமஸ்கிருதத்தைக் கலந்து எழுதிமணிப்பிரவாளநடைஎன்று அதற்குப் பெயர் சூட்டி வலிந்து திணித்தனர். அந்த நடையில் எழுதுபவரே அறிஞர் என்று கருதினர். தொல்காப்பியர் சுட்டிய மொழி நெறிக்கு முரணாகப் பிறமொழிச் சொற்களைக் கிரந்த எழுத்தில் எழுதும் நிலை தோன்றியது. பிற்கால பாண்டியர் ஆட்சியிலும் தமிழைவிட சமஸ்கிருதமே மேன்மை நிலையில் இருந்தது.

                13-ஆம் நூற்றாண்டு பிற்பகுதி முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை பல ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. மதுரையில் இஸ்லாமியர் ஆட்சி ஏற்பட்டது. உருது, அரபு, பாரசீகம், இந்துஸ்த்தானி சொற்கள் தமிழில் கலந்தன. விசயநகரப் பேரரசின் ஆட்சி தமிழ் நாட்டில் ஏற்பட்டது. அதன் வீழ்ச்சிக்குப் பிறகு நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. இவர்களது ஆட்சியில் தெலுங்கு, கன்னடம் மராத்தி, சௌராஷ்ட்டிரம், என்று பல மொழிகள் தமிழில் கலந்தன.

                1835 - மார்ச் மாதம் இந்தியாவின் பெரும்பகுதியைத் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த ஆங்கிலேயேர், இந்தியாவில் ஆங்கில மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டுவந்தனர். இதனால் தமிழில் ஆங்கில ஆட்சித்துறைச் சொற்கள் அதிக அளவில் கலந்தன. ‘மெக்காலேகொண்டுவந்தக் கல்வித்திட்டத்தால் ஆங்கிலம் கல்வி மொழியாகவும் ஆனது. தமிழகத்தின் சிலபகுதிகள் பிரஞ்ச், டச்சு, போர்ச்சுகீசியர் முதலான பிறமொழிகளின் சொற்களும் தமிழில் கலந்தன (-டு) சாவி, ஐன்னல்.

தமிழ் - சமஸ்கிருத போராட்டம்:

                தமிழில் பிறமொழி கலக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே, பிறமொழியைத் தவிர்க்கும் மனவுணர்வும் முயற்சியும் பெற்றோரிடம்  தழைக்கத் தொடங்கியது. தொல்காப்பியர் உள்ளிட்ட சங்கப்புலவர்கள், திருவள்ளுவர், இளங்கோவடிகள், சாத்தனார், கம்பர், முதலிய புலவர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், முதலிய சமயப் புலவர்கள், இறையனார், அடியார்க்கு நல்லார், இளம்பூரனார், சேனாவரையர், நச்சினார்க்கினியர், முதலிய உரையாசியர்களிடையேயும் பிறமொழித்தவிர்த்தல் நடந்துவந்ததாக பெருஞ்சித்திரனார் கூறுகிறார்.

                தமிழ் புறக்கணிக்கப்பட்டுப், பிறமொழிகளின் ஆளுமை நிலவிய போது எதிர்ப்பு குரல்கள் எழத்தொடங்கின. சைவ நாயன்மார்களும்வைணவ ஆழ்வார்களும் பக்தியுடன் தமிழுணர்வையும் கலந்து இறைப்பாடல்களை இயற்றிப் பாடினர். 16-ஆம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவரும் 17-ஆம் நூற்றாண்டில் அருட்பிராகசரும் வடமொழிக்கு எதிரான முயற்சியில் ஈடுப்பட்டனர். 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்காராச்சாரியார்சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்என்று கூறிய போது, வள்ளலார் அதை மறுத்துஅவ்வாறாயின் தமிழ் எல்லா மொழிகளுக்கும் தந்தைஎன்று கூறி விளக்கினார்.

தமிழ்த் தூய்மையத்திற்கான தூண்டல்கள்:

                சமஸ்கிருத சார்பினர்  தமிழைச் சமஸ்கிருதப்படுத்துவதை விடாமுயற்சியாகவும், வலிவாகவும் செய்து தமிழை இழித்தும், பழித்தும்; வந்த போக்கு, தமிழைக் காக்க வேண்டும், அதில் பிறமொழிக் கலப்பை நீக்க வேண்டும், என்ற தமிழ்த்தூய்மை செயற்பாடுகள் தோன்றலாயின. 1856-இல் வெளிநாட்டு அறிஞர்இராபர்ட் கால்டுவெல்அவர்கள் தமிழ், சமஸ்கிருதச் சொற்களை முற்றிலும் தவிர்த்துவிட்டுத் தனித்தியங்க முடியும் என்று தன்திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்என்னும் நூலில் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்

பெர்சிவல”;, “வின்சுலோ”, “இராபர்ட் நொபிளி”, “எல்லீசு”, வீரமாமுனிவர், “போப்முதலான வெளிநாட்டு அறிஞர்கள் தமிழை ஆய்ந்தறிந்து அதன் சிறப்பை வெளிப்படுத்தி கட்டுரைகளும் நூலும் படைத்தார்கள். மனோன்மணியம் சுந்தரனார் தான் இயற்றிய மனோன்மணியத்தில்-தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் தமிழின் மேன்மையை உணர்த்தினார். இந்நிலை தமிழறிஞர்களிடையே  அரும்பியிருந்த தமிழ்த்தூய்மை எண்ணத்திற்கு வலுசேர்த்தன.

தனித்தமிழியக்கத் தோற்றமும் வளர்ச்சியும் :

                “கால்டுவெல்நூல் வெளிவந்த பின்னர் தூய தமிழ்ப்படுத்தும் முயற்சிகள் தமிழறிஞர்களிடையே படிப்படியாக வளர்ந்தது. தமிழறிஞர் சூரிய நாரயண சாஸ்திரியார்’, என்ற தன்பெயரைபரிதிமாற் கலைஞர்என்று தமிழில் மாற்றி சூட்டிக் கொண்டார். பாம்பன் சுவாமிகள் சமஸ்கிருத சொல் கலவாமல்சேந்தன் செந்தமிழ்நூலை இயற்றினார். அயோத்திதாசப் பண்டிதர்தமிழன்என்னும் இதழ் நடத்தித் தமிழுணர்வைப்  பரப்பினார். விருதை சிவஞான யோகிகள், பாரதியார், சுப்பிரமணிய சிவா, ..சி, என்று பலரும் தமிழில் பிறமொழிக் கலப்பை எதிர்த்து எழுதினர்.

                சமரச சன்மார்க்க நிலையத்தை நிறுவிய நீலாம்பிகை அம்மையார் தன் தந்தையாரின் சுவாமி வேதாசலம் என்ற வடமொழிப்பெயரைமறைமலை அடிகளார்; என்று மாற்றிக் கொண்டார். ‘சமரச சன்மார்க்க நிலையம்என்பதுபொதுநிலை கழகமானது’. அவர் நடத்தியஞானசாகரம்இதழ்அறிவுக் கடல்என்று பெயர் மாற்றப்பட்டது.

                மறைமலையடிகளுக்குப் பின் தனித் தமிழியியக்கத்திற்கு முதன்மையான பங்களித்து அடுத்த கட்டத்திற்கு வளர்ந்தவர்மொழி ஞாயிறு’, ‘தேவநேயப் பாவாணர்அவர்கள். தமிழே ஞால முதன்மொழி, அது ஆரியத்திற்கு மூலம், திராவிடத்திற்குத் தாயும் ஆகும், என்ற கோட்பாட்டை நிலை நிறுத்தியவர். அவருடைய அரிய ஆராய்சியினால் விளைந்த தமிழாய்வுகள், மொழியியல் நூல்கள், மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் தனித்தமிழ் இயக்கத்திற்கு நல்ல வளர்ச்சியைப் பெற்றுத்தந்தன.

எதிர் காலத்தமிழில் மொழித்தூய்மை ஏற்பட சாத்தியமுள்ள வகைமைகள்:

                1938-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழில் பிறமொழி கலந்து பேசும் எழுத்து நடைமுறை மாற்றம் பெற்றது. எண்ணற்ற இலக்கியங்கள், இலக்கண நூல்கள், கலை, அறிவியல் நூல்கள், மற்றும் பாட நூல்கள் தனித்தமிழில் படைக்கப்பட்டுள்ளன.

1.            தம் மொழி தொடர்பாகத் தமிழர்களிடையே உள்ள தாழ்வு மனப்பான்மையை அகற்ற வேண்டும்.

2.            தனித்தமிழ் பேசும், எழுதும் தமிழர்கள், தனித்தமிழ்க் குடும்பங்களின் எண்ணிக்கையை பெருக்க வேண்டும்.

3.            பிறமொழிச் சொற்களைக் கையாளுவதைச் சிறிதுசிறிதாக குறைத்துக் கொள்ளவேண்டும்.


4.            தமிழ் மக்களில் பெரும்பாலானோர், தாங்கள் தமிழில் பிறமொழி கலந்துள்ளதை உணராமலே பேசியும், எழுதியும் வருகின்றனர் என்ற உண்மையை தெரியப்படுத்த வேண்டும் (-டு;) சகோதரன், சகோதரி, வாக்கியம்

5.            ஆங்கிலம் மிகுதியாகக் கலப்பதைத் தவிர்க்க வேண்டும். தெரிந்தே பிறமொழி கலந்த தமிழில் பேசியும், எழுதியும் வருவதைத் தவிர்க்க வேண்டும். (.ம்) “போன் பண்ணு” , “டிபன் பண்ணு” “இந்த வருஷம் ஜாஸ்தி லீவ்
.
6.            தமிழ்ச் செய்தி ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் பிறமொழி ஆளுமையை கைவிட வேண்டும்.

7.            எல்லாத் தமிழ் மக்களும் தேவையற்றப் பிறமொழிக் கலப்பைப் பேச்சிலும், எழுத்திலும் தவிர்க்க வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக