திங்கள், 18 டிசம்பர், 2017

கணினித்தமிழ்


நா. சுதா லெட்சுமி,
உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை (சுயநிதி)
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி,
பிள்ளையன்மனை, நாசரேத்.

முன்னுரை:

                கல்வெட்டுகள், ஓலைகள், காகிதங்கள் எழுதிய காலம் காணாமற்போய் பத்து விரல்களிலும் தமிழைத் தொட்டு எழுதுகிற நிலையை இன்றைக்குப் பெற்றிருக்கிறோம்.தொல்காப்பியம் தொட்டுச் சொன்ன புகலிட வாழ்வை ஆறாம் திணையென்றும், மின் வெளியான இணையவெளியை ஏழாம் திணையாகவும் இன்றைக்குப் பெற்றிருக்கிறோம் என்றால் அது மிகையல்ல. தமிழர்கள் அறிவியல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்பம் இவற்றுடன் அலுவலங்களில் பயன்பாட்டுத் தமிழோடு சேர்ந்து பயணம் செய்ய வேண்டியது கட்டாயம்.கட்டாயம் என்பதை விட இன்றைய நெருக்கடி என்றே கூட குறிப்பிடலாம். இவ்வாறு கணினியை உற்றுநோக்கும் விதத்தில் இக்கட்டுரை அமைகிறது.

                உலகில் தோன்றுகின்ற புதிய கண்டுபிடிப்புகளில் பல மொழியின் வழியாக வெளியிடப்படுகின்றன. பல மொழிகளின் பயன்பாட்டிற்கும் செயல்பாட்டிற்கும் வளா;ச்சிக்கும் உதவுகின்றன. எழுத்து, வானொலி, தொலைக்காட்சி, முதலியவை மொழியின் வாயிலாக வெளியிடப் பெற்றும் மொழியை வளர்த்தும் வருகின்றன. இவற்றைப் போலவே மொழியால் வளர்ந்து மொழியை வளர்ப்பது கணினி.

                தகவல் தொழில்நுட்பம் இன்றையக் காலக்கட்டத்தில் கணினியை முன்னிறுத்தியதாக அமைந்துள்ளது. குணினி பயன்பாட்டினால் இரண்டாயிரம் ஆண்டுகாலப் பழமையுள் தமிழ்மொழி தன் இலக்கிய இலக்கண வளத்தினால் ஆட்சித்தமிழ், அறிவியல் தமிழ் அன்று வளர்ச்சி பெற்று இப்போது கணினித்தமிழ் என்னும் பரிமாணத்தையும் அடைந்துள்ளது.


                “ இணையமென் றறிஞர் கண்ட
                  ஏற்றமே இறைவனும் றின்
                  துணையினை நாடத் தக்க
                  சூக்குமப் பொருளாய் நிற்கும் விந்தையே புதுயுகத்து
                  விடியலின் வித்தும் வேரும்
                விழுதும் நின்கொடை ஆனாலும்
                வடிவினில் அனுநீ
                ஆற்றும் வலிமையில் அண்டம் நீ                                         (வா.செ.குழந்தைசாமி)


                என்று இணையத்தின் ஆற்றலையும் அளவையும் வியந்து பாடுகின்ற கவிஞர் வா.செ.குழந்தைசாமிதெருவெங்கும் தமிழோசை முழங்கச் செய்வீர்  (பாரதியார் கவிதைகள்) என்று சொன்ன பாரதி இன்றிருந்தால் ஒரு சொல்லைக் கூட்டி  இனையத் தெருவெங்கும் தமிழோவை முழங்கச் செய்வீர்  என்று பாடியிருப்பான். ஏனெனில் எந்த மொழி கணினியின் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லையே அது வீழ்ச்சியைக் காணும் அபாயம் தற்காலத்தில் உள்ளது. அது மட்டுமல்லாமல் அறிவியல் கண்டுபிடிப்புகளை உள்வாங்கிக் கொண்டு வளரும் மொழியே நாளும் வளரும் மொழியாகவும் தம் நாகரீகத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காத்துக் கொள்ளும் மொழியாகவும் அமையும். உலகமயமாக்கலில் தமமைத் தகவமைத்துக் கொள்ளாத மொழி அழிந்துபடும் நிலைமை உள்ளதும் மற்றம் ஆங்கில மொழியின் மேலாண்மையும் வர்த்தக மொழியாக அது பெரும்பான்மையும் இருப்பதாலும் அதனை எதிலீ;த்து அல்லது அதனுடன் போட்டியிட்டு வளர வேண்டிய கட்டாயம் பிறமொழிகளுக்கு ஏற்பட்டுள்ளதும் இதற்கு முக்கியக் காரணம்

கணினியின் ஆதிக்கம்:-

                கணினி மொழியாகத் தமிழ் வளரவேண்டும் என்னும் அவாவிற்கு மற்ற காரணங்கள் நேரச்சிக்கனம், உலகறியச் செய்யும் ஊடகம் அழியாப்பதிவு என்று பலவற்றைச் சொல்லிச் கொண்டே போகலாம்.தமிழ் மொழியின் மீது, ஆர்வம் கொண்ட பொறியியலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துக்களைத் தயாரித்து, தமிழில் தட்டச்சுச் செய்வதை எளிமையாக்கித் தந்துள்ளனர். யுனிக்கோட், என்னும் எழுத்துரு அந்தக் கணினியும் ஏற்றுக் கொள்ளும் அளவிலும் தமிழுக்காக் பிரத்தியேகமாகப் பயிற்சி எதுவும் செய்யாமல் தட்டச்சும் விதத்தில் அமைந்து தமிழார்வலர் அனைவரின் கணினியில் தமிழ்ப் பயன்பாட்டிற்கு உதவுகின்றது. எழுத்துருக்களை மேலும் எளிமையாக்கும் முயற்சி, முதலியவற்றுக்கான ஆய்வு மாநாடுகள் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தாலும் தமிழ் அமைப்புகள் பலவற்றாலும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.

மொழிப்புலத்தில் கணினி பயன்பாடு:-

                கணினி செயலாக்கம் பல்வேறு துறைகளில் அதன் தேவைச்களங்களில் நுணுக்கமாக செயல்படுவது போல் தமிழாய்வுக் களத்திலும் மிக எளிய முறையில் பயன்பட்டு வருகின்றது.எழுத்துப் பிழைகளைக் காட்டுதல், சொல்லாய்வு செய்தல் மற்றும் வோ;ச்சொற்களை வரிசைப்படுத்துதல், பிற மொழிச் சொற்களோடு ஒப்பிட்டு சொற்களுக்கான தனித்தன்மையை மதிப்பீடு செய்தல். இலக்கணப் பிழைகளைச் சரிசெய்தல் மற்றும் இலக்கணச் குறிப்புக் காணுதல். சொற்களை அகர வரிசைப்படுத்துதல். கலைச்சொற்களை அமைத்தல். இனப்பெயர் சார்ந்த சொற்களைக் கூட்டமைத்தல் என்றும் தமிழின் விரிவாக்கம் தொடர்ந்து நின்று நம்மை வியக்கும் அளவிற்கு எதிர்காலத்தமிழ் செல்லும் என்றால் அது மிகையாகாது.


முடிவுரை:-



                வளர்ந்து வரும் நாகரீகவுலகில் மொழி பேச்சு வழக்கிலும் கருத்து விளக்கத்திலும், பண்பாட்டு நிலையிலும் அரசியல் மற்றும் அறிவியல் தொழில் நுட்ப துறையிலும், சமூக மாற்றங்களுக்கு ஏற்ப காலந்தோறும் தம்மை தகவமைத்துக் கொண்டு வளர்ச்சி கண்டு வருகின்றது. தமிழ்மொழித்துறை சார்ந்த அணுகுமுறையில் மட்டும் அல்லாது உலகலாவிய இணைய தளத்தில் மக்கள் தொடர்பு சாதனமாகப் பயன்பெற்று வருகின்றது. ஊலகளாவிய தமிழர்களின் உறவுநிலைக்கான கலங்கரை விளக்கமாக ஒளிவீசுகின்றது அன்னைத் தமிழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக