திங்கள், 18 டிசம்பர், 2017

எதிர்காலத் தமிழ்
முனைவர் .விஜி,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
.பி.சி. மகாலெட்சுமி மகளிர் கல்லூரி,
தூத்துக்குடி.

                மாந்தருக்காக மாந்தர் உருவாக்கிய அற்புதக் கருவி மொழிஅது மாந்தரின் போக்குகளுடன் இணைந்தும் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும் தேவைக்கு ஏற்பத் தன்னைச் மாற்றிக் கொள்ளும் தன்மையுடையதுஅத்தன்மையைப் பேணினால் மட்டுமே ஒரு மொழி உயிர்ப்பும் பயனுமிக்க மொழியாய்ச் சீரிளமைத் திறத்தோடு வளர இயலும்தமிழ் மொழியைப் பயன்படுத்துவோர் காலங்காலமாக இப்பொதுத்தன்மையைப் போற்றி காத்து வந்துள்ளனர் என்பதன் அடையாளமே இன்றைய தமிழ் மொழியின் வளப்பம்எதிர்காலத் தமிழ் மொழியின் வாழ்வும் வளர்ச்சியும் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பழங்காலத்தமிழ்  

     தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழிஎன்றுமுள தென்றமிழ்என்று இதன் காலத் தொன்மையினைக் கம்பர் போற்றியுள்ளார்.இம்மொழி, தான் தோன்றிய காலம் தொடங்கி இன்றளவும் செய்யுள் வழக்கிலும் உலக வழக்கிலும் நிலைபெற்று விளங்குகின்றன. அகத்தியம், தொல்காப்பியம், திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, இரட்டைக் காப்பியங்கள், திருமுறைகள், திவ்வியபிரபந்தம் திருத்தொண்டர் புராணம் இராமகாதை முதலிய எண்ணற்ற உயர் இலக்கண இலக்கியங்கள் இம்மொழியின் அழியாச் செல்வங்கள் ஆகும்இம்மொழி முன்னைப் பழமைக்குப் பழமையாய் பின்னைப் புதுமைக்குப் புதுமையாய்க் காலத்தை வென்று கன்னித்தமிழ் என்னும் சிறப்புடன் விளங்குகிறது

  இன்று நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள் தொல்காப்பியமே தமிழர் வாழ்வின் பலதுறை பற்றி அறிவதற்குத் துணைபுரிவதாகும்இது இலக்கண நூல்தான் என்றாலும் ஏனைய மொழிகளின் இலக்கண நூல் போன்றதன்றுஅண்மை நூற்றாண்டில் தோன்றி வளர்ந்து வரும் மொழி ஆராய்ச்சியும் பண்பாட்டுக்கலைகளாம் உயிரியல், உளவியல், வாழ்வியல் முதலியனவற்றையும் தன்னகத்தே கொண்டு இலங்குகின்றதுமொழியியல் ஆய்வுகளில் தொடர்ந்து புதிய புதிய உண்மைகள் தோன்றினாலும் தொல்காப்பியத்தின் பெருமை மேலும் தெளிவாகுமே தவிர ஒரு போதும் மங்காது மறையாது.1

இடைக்காலத்தமிழ்
                பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
                தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்:
                இறவாத புகழுடைய புதுநூல்கள்
                தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்:
                மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
                சொல்வதிலோர் மகிமை யில்லை:
                திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
                அதை வணக்கம் செய்தல் வேண்டும்.2 என்ற பாரதியின் வாக்கிற்கிணங்க,

                இத்தாலிய நாட்டினரான வீரமாமுனிவர் தமிழ்ச் சொற்களை அகர வரிசையில் தொகுத்துச் சதுரகராதி என்னும் நூலை எழுதினார். இந்நூலே பின்னெழுந்த அகராதிகளுக்கு முதல் நூலாக விளங்கியது.
                ஜி.யு. போப் திருக்குறளையும் நாலடியாரையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்க வழி காட்டினார்.

                அயர்லாந்து நாட்டினரான கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஆங்கில நூலை எழுதி ஒப்பிலக்கண ஆய்வுக்கு வழி வகுத்தார்.

                வேதநாயகம் பிள்ளை பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் தமிழின் முதல் புதினத்தை வெளியிட்டுத் தமிழில் புதின இலக்கியம் வளர வழி காட்டினார்.

                பிற மொழிப் புதினங்களை கா.ஸ்ரீ.ஸ்ரீ.யும் புதுமைப்பித்தனும் .நா. குமாரசாமியும் சுத்தானந்த பாரதியும் தமிழில் வெளியிட்டனர்இவ்வகையில் சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், தாகூர் போன்றோரின் வங்கப் புதினங்களும் டால்ஸ்டாயின் ருஷ்யப் புதினங்களும் வெளிவந்தன.

                ‘ஆறில் ஒரு பங்கு’ ‘சுவர்ண குமாரிபோன்ற கதைகளை எழுதியும் தாகூரின் கதைகளை மொழி பெயர்த்தும் பாரதியார் தமிழ் மொழியில் சிறுகதை தோன்றும் சூழலை உருவாக்கினார்.

                .வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள், மாதவையாவின் ருசிகர் குட்டிக்கதைகள் தமிழில் தோன்றிய முதல் சிறுகதைகளாகும்தமிழின் சிறுகதை மன்னன் என்று பாராட்டப் பெறும் புதுமைப்பித்தன் தன் கதைகளில் புதிய வடிவங்களையும் உத்திகளையம் புகுத்தினார்.

                மராட்டிய எழுத்தாளர் காண்டேகரின் படைப்புகளைத் தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ. வழங்கினார்தாகூரின் கதைகளை சேனாதிபதியும் குமாரசாமியும் தமிழில் வெளியிட்டனர்.

                ‘காட்சிகள்என்ற இலக்கணம் மீறிய புதிய கவிதைப் படைப்பை உருவாக்கித் தமிழில் முதன் முதலில் புதுக் கவிதையின் தோற்றத்திற்குப் பாரதியார் வழிகோலினார்.

                ஆப்துல் ரகுமான், நா. காமராசன், மு.மேத்தா, மீரா, சிற்பி போன்றோரும் சிறந்த புதுக்கவிதைகளைத் தமிழுக்கு வழங்கினர்.

                தகவல் தொடர்பு சாதனங்களில் தமிழ் இதழ்கள் ,திரைப்படங்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையம் போல்வன உலகம் முழுவதிலுமுள்ள நாட்டு நடப்புகளை மக்களிடையே உடனுக்குடன் தெரிவிக்கும் ஆற்றல் வாய்ந்த ஊடகங்கள் ஆகும்ஆறிவியல் வளர்ச்சியால் விரைவான வளத்தைப் பெற்றுவரும் மொழிகளின் வாழ்வில் இவற்றின் பங்கு அளவிடற்கரியதுஇவை ஏற்கனவே உள்ள இலக்கணம், இலக்கியம் போன்ற மொழி வளங்களை அழியாது பாதுகாப்பதோடு பாமர மக்களிடையே அவற்றைக் கதைகள், கட்டுரைகள், நாடகங்கள், துணுக்குகள் எனப் பல்வேறு வடிவங்களில் எடுத்துச் செல்கின்றன. இக்காலப் புத்திலக்கியங்களைப் படைத்ததற்கும் இவை சிறந்த களங்களாகவும் விளங்குகின்றன.

                கணினியும் தமிழ் வளர்ச்சியும் கணிப்பொறியின் பயன்பாட்டினால் மொழிகளில் இலக்கியவளம் பேரளவில் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறதுமிகக் குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் மிகப் பேரளவில் நூல்களை அச்சிட்டு வெளிக்கொணர முடிகிறதுபல்வேறு காலத்தைய நூல்களையும் கணிப்பொறியில் பதிவு செய்து அழியாது பேணிக்கொள்ள முடிகிறதுஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட இலக்கியங்களை எல்லாம் மிகச் சிறிய குந்தகடுகளிலும் சுண்டுவிரல் அளவிலுள்ள பெண்டிரைவ் என்னும் கருவியிலும் பதிவு செய்ய முடியும்.

                கணிப்பொறியின் பயன்பாட்டிற்கு ஏற்பத் தமிழில் யுனிகோட், அமுதம், பவானி, பாமினி, அனிதா, பரணி, தீபா, ஸ்ரீலிபி, அலங்காரம் எனப் பல எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

                இணையத்தைப் பயன்படுத்துகின்ற மொழிகளுள் ஆங்கிலமே முதலிடம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடம் உலக அளவில் தமிழுக்குத்தான் உள்ளதுஇந்திய மொழிகளுள் தமிழே முதலிடத்தில் உள்ளது.

                தமிழ் இணைய தளத்தை முதன் முதலில் உருவாக்கிய பெருமை சிங்கப்பூரைச் சேர்ந்த நா. கோவிந்தசாமியையே சாரும்இவரைத் தொடர்ந்து பிற அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் தளங்களை அமைத்தனர்தமிழக அரசு 1999 இல் இணைய மாநாடு ஒன்றினைக் கூட்டியது. இம்மாநாட்டில் தமிழக அரசு தமிழ் விசைப்பலகை அமைப்பதற்கு உதவியதுதமிழ் எழுத்துக்கள் சீராக்கப்பட்டு, ஜிகிவி, ஜிகிஙி தமிழ் தளத்திற்கு அறிவிக்கப்பட்டனதமிழ் இணையப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

                தமிழ் இணையத்தில் இப்போது இலக்கணம், இலக்கியம், கட்டுரை, ஆய்வேடு எனப் பல வகைப்பட்ட செய்திகளும் பதியப்பட்டுள்ளனதகவல்கள் செய்திகளின் அடிப்படையில் மட்டுமன்றி, ஆசிரியரின் பெயரைக் கொண்டும் பதியப்பட்டுள்ளனஇதனால் குறிபிட்ட ஒரு தளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட மொழிக் கூறினை விரிவாகத் தொகுத்து அறிய முடிகிறது.

                தென்றல், தமிழ்ச் சோலை, தமிழ் உலகம் போன்றவை இணையம் நடத்தும் இதழ்களாகும்.

                கணினி, இணையம் உள்ளிட்ட தகவல் தொடர்புத்துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. சென்னையில் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் 2001 இல் அமைக்கப்பட்டு, அது இலக்கிய மொழிக் கல்விக்கும் அயல்நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களின் உறவுக்கும் பெரிதும் பயன்பட்டு வருகிறதுஅடிப்படை முதல் இளநிலைப் பட்டம் வரையிலான தமிழ்க்கல்வியை இதன் வழிப் பயிலலாம்நானூறுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் இணையத்தளங்களில் பதியப் பெற்றுள்ளன. கலைச்சொல்லகராதி பன்னிரெண்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன.

                தமிழ் இணையதளங்களில் தகவல்கள் தமிழில் மட்டுமன்றி, ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளனபிற மொழியாளர்கள் தமிழை அறிந்து கொள்ள ஆங்கிலத்தில் உள்ள தகவல்கள் பயன்படும்இதனால் உலகளாவிய நிலையில் தமிழின் பெருமை பரவ வழி ஏற்பட்டுள்ளது.

                சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் றிவீஷீஸீமீமீக்ஷீ மிஸீபீஷீறீஷீரீஹ் ஷ்ஷ்ஷ்.tணீனீவீறீ ஷ்மீதீ/ணீக்ஷீநீலீவீஸ்மீ என்ற தளத்தை அமைத்துள்ளது.

                ஜெர்மனியில் கோலோன் பல்கலைக் கழகத்தில் மிஸீstவீtutமீ ஷீயீ மிஸீபீஷீறீஷீரீஹ் ணீஸீபீ ஜிணீனீவீறீ ஷிtuபீவீமீs என்ற தளம் உள்ளது.

                அமெரிக்கக் கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஞிமீஜீணீக்ஷீtனீமீஸீt ஷீயீ ஜிணீனீவீறீ ஷிtuபீவீமீs என்ற தளத்தில் தமிழ்த் தகவல்களைத் தருகிறது.
                உலகத் தமிழர்களின் பயன்பாட்டிற்காக இணையத் தமிழ் வரிவடிவங்களில் மிழிஜிகிவிவி என்ற தளம் அமைக்கப்பட்டுள்ளதுலீttஜீ/ஷ்ஷ்ஷ்.வீஸீtணீனீனீ/வீt/றீவீtமீக்ஷீtuஜ்3.லீtனீறீ என்பது அத்தளத்தை அறிய உதவுகிறது.

                பெங்களுரில் வாழும் டாக்டர் கீதா ராமசாமி ஒரு தமிழ் தளம் அமைத்துள்ளார்இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியங்களைப் பற்றிய தகவல்களை அதில் அறிந்து கொள்ளலாம்.4

மொழி வளர்ச்சி

                கடந்த நூறு ஆண்டுகளில் தமிழ்மொழியைப் பயன்படுத்துவோரின் வாழ்க்கை மட்டுமன்றி, மொழிச் சூழலும் மொழியின் பயன்பாடும் பெரிதும் மாறிவிட்டனகுறிப்பாக, கடந்த ஐம்பதாண்டுகளாக மாற்றங்களின் வேகம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறதுஎப்போதையும் விட இப்போது தமிழ் பேசும் மக்கள் பல நாடுகளில் பரவி வாழ்கின்றனர்அங்கெல்லாம், குறிப்பாக இளைய தலைமுறையினர் வெவ்வேறு மொழிகளின் செல்வாக்குக்கிடையே தமிழைக் கற்கின்றனர்.  

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பாலர் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் வரை தமிழ் கற்பிக்கப்படுகிறதுஆஸ்திரேலியாவிலும் ஐரோப்பா நாடுகள் சிலவற்றிலும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் தமிழைக் கற்கவும் ஆராயவும் வாய்ப்புகள் பெருகியுள்ளன.   மிக முக்கியமாகத் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராதவர்கள் பலர் இப்போது தமிழ் மொழியைக் கற்கிறார்கள். ஆங்கிலம் போன்ற உலக மொழிகளில் ஏறத்தாழ நூறு கலைக்களஞ்சியங்கள் உள்ளன.

  அவை பல துறைகளுக்கும் உரிய பல்லாயிரக்கணக்கான கலைச்சொற்களைக் கொண்டு உலகளாவிய செய்திகளைத் திறம்படத் தருகின்றனஆனால் தமிழ் மக்கள் அனைவரும் அவற்றைப் படித்தறிய வாய்ப்பில்லைதமிழ் மக்கள் அனைவருக்கும் பயன்தரத்தக்க வகையில் 1949&1968 இல் சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் பத்து தொகுதிகள் அடங்கிய தமிழ்க் கலைக்களஞ்சியம் ஒன்று திரு. தி.சு. அவினாசிலிங்கனார் தலைமையில் திரு.பெ.தூரன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டது.

இனித் தமிழுக்குச் செய்ய வேண்டியவை

1.            பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ் மொழியில் பெயர்க்க வேண்டும்.
2.            சங்க நூல்ககளான தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, தொடங்கி                     தற்காலத் தமிழ் இலக்கியங்கள் வரையில் பிற மொழிகளில் மொழி பெயர்க்க                         வழி வகுக்க வேண்டும்.
3.            பொறியியல், மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளில் புதுநூல்கள்                              தமிழ் மொழியில் இயற்ற வகை செய்ய வேண்டும்.
4.            பொறியியல், மருத்துவம் ஆகிய துறைப்படிப்புகளைத் தமிழிலேயே நடத்த ஏற்பாடு                        செய்ய வேண்டும்.
5.            பொறியியல், மருத்துவம் ஆகியவற்றிற்குத் தனி அகராதிகள் வெளிவர வகை                       செய்ய வேண்டும்.
6.            தமிழ் மாணவர்களைப் பிற மாநிலங்களுக்கும் பிற நாடுகளுக்கும் அனுப்பிப்                            பல்வேறு புதிய துறைகளில் படித்து வந்து, அவர்கள் பெற்ற அனுபவத்தை நம்                        தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்க வழி செய்யவேண்டும்.
7.            எளிய நடையில் தமிழ் நூல்கள் எழுத வாய்ப்பளிக்க வேண்டும்.
8.            உலகின் பல்வேறு பகுதிகளில் புதிது புதிதாகத் தோன்றும் கருத்துக்களை                 விளக்கும் நூல்களைத் தமிழில் உருவாக்க வேண்டும்.
9.            பல்வேறு துறை நூல்களைப் பிறர் துணையின்றி எல்லாரும் படித்தறியும் வகையில்                     தமிழில் வெளியிட வேண்டும்.
10.          சிறுவர் முதல் முதியோர் வரையில் தமிழ் மக்கள் யாவர்க்கும் தமிழ் வழிக்                              கல்வி வழங்கிட வழி செய்ய வேண்டும்.
11.          இலவச நூல் நிலையங்கள் ஊர் தோறும் ஏற்படுத்தித் தமிழ் மக்கள் யாவரும்                          அவற்றால் பயன்பெற  வழி செய்ய வேண்டும்.
12.          இணையம் மற்றும் கணினியைத் தமிழ் கற்பிக்கப் பயன்படுத்த வேண்டும்.
13.          தொலைக்காட்சி வாயிலாக எல்லா ஊர் மக்களுக்கும் தமிழ்க் கல்வியை வழங்க                                 வேண்டும்.
14.          ‘உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
                ஓது கற்பல நூல்வகை கற்கவும்
                இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
                யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே’7
                சேர்க்கவும் தமிழ் நாட்டுப் பெண்களுக்குச் சிறந்த முறையில் கல்வி வழங்க வகை செய்ய வேண்டும்.

தமிழருக்கான உறுதிமொழி

                தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழ் சமுதாயத்தின் உயர்விற்கும் என்றென்றும் பாடுபடுவேன் என்று உளமார உறுதி ஏற்கிறேன்.

                தமிழரின் தாயகமான தமிழ்நாட்டின் மண்ணையும் மக்களையும் தன்மானத்தோடு நிலைபெற என்றும் போராடுவேன்

                சாதி மத மறுப்பாளனாக வாழ்ந்து பெண்களுக்கான உரிமைகளை என்றும் மதித்து நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

                தலைமுறைகள் கடந்தும் நம் கலாச்சாரத்தின் அடையளமாக நம் உயிராய் நம்முள் வாழும் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை என் அன்றாடவாழ்வில் ஆழமாய் பயன்படுத்துவேன் என்று உளமார உறுதி ஏற்கிறேன்.

                அடுத்த தலைமுறைக்குத் தமிழைச் சீர்குலையாமல் எடுத்துச் செல்வது என்பொறுப்பு என்பதை உணர்ந்து என் குழந்தைகளைத் தமிழில் எழுத மற்றும் பேச வைப்பேன் என்று உளமார உறுதி ஏற்கிறேன். என்ற மனோன்மணியம் சுந்தரனாரின் உறுதி மொழியை நாமும் ஏற்றால் இனித் தமிழ் இனிக்கும் தமிழாகும்.

                மேற்குறித்த பல்வேறு வழிகளில் தமிழுக்குத் தொண்டாற்றினால் இனிதமிழ் வாழ்வாங்கு வாழும். பார் போற்றப் புகழுடன் வளரும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.

மேற்பார்வை நூல்கள்

1.            வாழ்வியற் களஞ்சியம், தொகுதி ஒன்று, முன்னுரை, தமிழ்ப் பல்கலைக்கழகம்,                 தஞ்சாவூர், 1991
2.            பாரதியார் கவிதைகள், தமிழ் வரிகள் 9-12, பக். 61, பூங்கொடி பதிப்பகம்,                                              சென்னை, பதிப்பாசிரியர் சீனி.விசுவநாதன், மே 1998.
3.            தமிழ் இலக்கிய வரலாறு, அடைக்கலசாமி பக்.312 - 317
4.            தமிழ் இலக்கிய வரலாறு, பாரதி பதிப்பகம் முனைவர் சுயம்பு, பக். 448, 459 -                    463, 2016
5.            இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம், சித்தார்த்தன், அணிந்துரை, நர்மதா                                பதிப்பகம், சிங்கப்பூர் ஜுன் 2003
6.            வாழ்வியற் களஞ்சியம், தொகுதி ஒன்று, முன்னுரை, தமிழ்ப் பல்கலைக்கழகம்,                 தஞ்சாவூர், 1991
7.            பாரதியார் கவிதைகள், புதுமைப் பெண் பாடல்பூங்கொடி பதிப்பகம்சென்னை                      பதிப்பாசிரியர் சீனி.விசுவநாதன் , மே 1998
8.            மனோன்மணியம் பெ. சுந்தரனார்  மெட்வே தமிழ் சங்கம் மூன்றாம் ஆண்டுவிழா                               மற்றும் புத்தாண்டு விழா. லீttஜீ://ஷ்ஷ்ஷ்.sறீவீபீமீssலீணீக்ஷீமீ.ஸீமீt

  
    

    



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக