திங்கள், 18 டிசம்பர், 2017

செந்நீர் நாவலில் தமிழ்த் தேசியச் சிந்தனைகள்


மா.சமுத்திரசெல்வி
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை, .தி.தா.இந்துக் கல்லூரி
திருநெல்வேலி - 627010.

                இலக்கியங்கள் அவை தோன்றிய காலங்களில் சமூகத்தில் காணப்பெறும் பிரச்சனைகளைப் பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடியாகும். அந்த வகையில் அன்வாபாலசிங்கம்கருப்பாயி என்ற நூலீஜஹான்’, ‘செந்நீர்ஆகிய இரண்டு நாவல்களைப் படைத்துள்ளார். இவ்விரு நாவல்களுள்செந்நீர்நாவலில் மூணாறு எஸ்டேட் தொழிலாளர்ளின் பிரச்சனைகளை மையமாக வைத்தும், தமிழ் ஈழப்போராளி பிரபாகரனின் தமிழ் ஈழம் வேண்டிப் போராடிய காலங்களில் தமிழ் நாட்டில் தமிழ் ஈழ ஆர்வலர்கள் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டவார்கள் மீது கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டது போன்ற பிரச்சனைகள் குறித்தும் பேசியுள்ளார். தமிழ்மொழியை, தமிழர்களை, தமிழ் நாட்டைப் பாதுகாப்பதும், தமிழ் உணர்வோடும், தமிழ்மொழியோடும் தொடர்புடையவையாகச் சிந்திப்பதும், எழுவதும் பேசுவதும் தமிழ்த்தேசியச் சிந்தனையாகக் கொள்ளலாம். இங்குசெந்நீர்நாவலில் காணப்பெறும்தமிழ்த்தேசியச் சிந்தனைகள்குறித்து இக்கட்டுரையில் ஆராயப்பெறுகின்றது.   
                                  
தமிழ்த்தேசியம்    
                       
                தமிழ் மொழியை, தமிழர்களை, தமிழ் நாட்டைப் பாதுகாக்கவேண்டும் என்ற சிந்தனையுடைய தமிழ் ஆர்வலர்கள் தமிழ்த்தேசியம் குறித்து வரையறை செய்துள்ளனர். அவை: “எமது தேசிய இனம் தமிழர், எமது தேசிய மொழி தமிழ், எமது தேசம் தமிழ்த் தேசம், இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பதே எமது இலக்குஎன்பதே தமிழ்த் தேசியம் ஆகும். இவற்றுள் ஒன்று குறைந்தாலும் அது தமிழ்த் தேசியம் ஆகாதுஎனத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் (2014:27) தமிழ்த் தேசியம் என்பதற்கான வரையறையைத் தந்துள்ளது. “தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்தாற் போல் வாழும் எல்லைவரை உள்ள நிலப்பகுதியை  “தமிழ்த்தேயம்என்றும் பிற மொழி பேசப்படும் நிலப்பகுதியைமொழி பெயர் தேயம்என்றும் சங்ககாலத் தமிழர் குறிப்பிட்டனர் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் (2014:27) குறிப்பிடுகின்றது. “தமிழ்த் தேசியம் என்பது ஒரு கட்சியின் முழக்கமல்ல, ஓலி அமைப்பின் முழக்கமல்ல! அது தமிழினத்தின் முழக்கம்! தமிழ்த் தேசியம் என்பது தமிழ் இனத்தின் கொள்கலன் ஆகும்என்று பெ.மணியரசன் (2015:58) குறிப்பிடுகின்றார் இத்தகையதமிழ்த் தேசியம்குறித்த வரையறைகளை உள்வாங்கிக்கொண்டு இக்கட்டுரை அணுகப்படுகின்றது.       
                                 

                பண்டைத் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்கள் ஆகிய மூவரும் ஆண்டனர். பாண்டியர்கள் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு தமிழகத்தின் தென்பகுதியை ஆண்டனர். பாண்டியர்களின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில் வாழும் மக்களைபாண்டிக்காரன்என்று அழைத்தனர். பண்டைக் காலத்தில் சேர மன்னர்கள் ஆண்ட கேரள மாநிலத்தில் வாழும் மக்கள் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களைப்பாண்டிக்காரன்என்று அழைத்தனர். “தமிழன் என்பவன் அவன் எத்தனை பெரிய முதலாளியாய் இருந்தாலும், ஒரு கூலிக்கார மலையாளிக்குக் கூட அவன் ஒரு பாண்டிக்காரன் அவ்வளவுதான். அதைத் தாண்டி அவர்கள் எந்த நிலையிலும் சிந்திப்பதில்லைஎன்று ஆசிரியர் மலையாளிகளைச் சாடுகிறார். தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருந்தாலும் கூலிக்கார மலையாளிக்கு அவன், ஒருபாண்டிக்காரன்என்றே கருதுகின்றான்

இதைத் தாண்டி அவன் சிந்திப்பதில்லை என்று கூறுகிறார் ஆசிரியா.  “1979 ன்னு நினைக்கிறேன் நம்ம ரத்தத்திலயும், வேர்வையிலயும் அந்தப் பிரிட்டிஷ் மகராசன் பென்னி கட்டின முல்லைப் பெரியாறு டேமு உடையப் போகுதுன்னு முதல்ல சொன்னதே அந்தக் கட்சிக்கார குர்ரியன் தான் அந்தக் கட்சினா சி.பி.. அவரு பீர் மேட்டுல எம்.எல். வா இருந்தப்ப தான் கேரள சட்டமன்றத்திலே டேமு உடையப் போகுதுன்னு பேசின முத ஆளுஞ் ஜெயிச்சதெல்லாம் அங்க இருக்க தமிழன் போட்ட ஓட்டுலஞ் ஆனா பேசினது அதே தமிழனுக்கு எதிராகஞ் அவரு அப்படிப் பேசினதுக்கு அவங்க பார்ட்டிலயிருந்த தமிழ் ஆளுக யாரு எதிர்ப்புத் தெரிவிக்கலியா சித்தப்பா. இன்னைக்கு பேசமுடியலியே மக்களே.. அன்னைக்கு பேச முடியுமா என்ன” (பக்.45,46) என்று ஆசிரியர் கேள்வி கேட்கிறார். பீர்மேட்டுத் தொகுதியில் தமிழர்களால் சி.பி.. கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பெற்ற அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர். கேரள சட்டமன்றத்தில் தமிழர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தான். அதே கட்சியில் இருந்த தமிழர்களில்ஒரு தமிழன்கூட கேள்வி கேட்கவில்லை. ஆனால், அன்று பொது மக்களும் ஒருவர் கூட, கேள்வி கேட்க முடியவில்லை. அன்றே கேட்க முடியவில்லை. இப்பொழுது கேட்கமுடியமா? என்று ஆசிரியர் வாசகர்களிடம் கேள்வி கேட்கிறார்.   


                சின்னச்சாமி காங்கிரஸ் கட்சி உறுப்பினர். இவர் கிட்டுவைத் தேடிக்கண்டு பிடிப்பதில் பங்கு பெற்றும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் முனியாண்டியை விடுதலை செய்யக் கோரியும், காவல் துறையினருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர். “சின்னச்சாமிக்கும் பழைய வரலாறுகளை திரும்பிப் பார்ப்பதில் ஒரு சுகம் இருந்தது. ஏன்னா 1956ல் தேவிகுளம் தாலுகா நம்ம தேனி பெரியகுளத்துல இருந்திச்சு. மொழிவாரியா, பிரிக்கிறப்போ அது கேரளாவுக்குப் போயிருச்சு. அத தமிழ்நாட்டோட சேர்க்கணும்னு போராடிய ஆட்களிலே இந்தச் சின்னச்சாமியும் ஒரு ஆளு” (.47) என்று ஆசிரியர் சுட்டுகிறார். சின்னச்சாமி 1956 &- லேயே மூணாறில் உள்ள தேவிகுளம் தாலுகாவை தமிழ்நாட்டோடு சேர்க்கவேண்டும் என்று போராடியது அவரது தமிழ்த்தேசியச் சிந்தனையை உணர்த்துகின்றது.  

  
                காங்கிரஸ்காரர்கள் கட்சியில் இருந்தவர்கள் கூட, அக்கட்சியிலிருந்து விலகி தேவிகுளம் தாலுகா கேரளாவோடு சேர்ந்ததை எதிர்த்துள்ளார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது தமிழ்த் தேசியச் சிந்தனையை உணர்த்துகின்றது. “அதுக்குப் பெறகு மொழிவாரியா தேவிகுளத்த கேரளாக்காரன் வஞ்சகமா நம்மகிட்டயிருந்து புடுங்கிட்டதும் பய கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் உள்ள வந்தான்

வந்தவன் நேராப் போயி பார்த்தது  நம்ம சுப்பையா நாடாரை, அவரு காங்கிரஸ் கட்சின்னாலும் தேவிகுளத்த கேரளாவோட சேர்த்ததை அவரால ஜீரணிக்க முடியல. அதனால இந்தக் கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்கள பாக்க ஒத்துக்கிட்டாரு. அவங்களும் நாங்க உலகக் கட்சியாக்கும். இந்த தேவிகுளம் தாலுகாவில இருக்கிறது அம்புட்டும் தோட்டத் தொழிலாளிகதான். அதுலயும் அத்தனை பேரும் தமிழ் ஆளுங்கதான். அதனால இந்த பூமிய தமிழ்நாட்டோட சேர்க்க நாங்க குரல் கொடுப்போம்னு கதையை விட்டு அவர அவங்க வசம் கொண்டு போய்ட்டாங்க” (.47) என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். “தலைவரேஞ்   நூத்தம்பது வருசத்துக்கு முன்னால நம்ம தாத்தனும்.. பூட்டனும் வரும்போது இங்க எந்த மலையாளி இருந்தான். மொழிவாரியா இதப் பிரிச்சு நாசம் பண்ணி கேரளாவோட சேத்த பிறகுதான் தலைவரே மலையாளி உள்ள வந்தான். தேவிகுளத்தையும், பீர்மேட்டையும், நம்ம ஆளுக விட்டுக் கொடுக்காம இருந்திருந்தா இன்னைக்கு இந்த உப்புப் பெறாத விஷயத்தை அவங்க இம்புட்டு பெரிய விசயமா மாத்துவாங்களா என்னஞ்” (.56) என்று தேவிகுளம், பீர்மேடு ஆகிய இரண்டு பகுதிகளையும் கேரளாவிற்கு விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் மலையாளிகள் உள்ளே வந்திருக்க முடியாது. இன்று இத்தகைய பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்திருக்கும் என்று நம் தமிழ்நாட்டின் எல்லையைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம் என்ற கருத்தை ஆசிரியர் தம் நாவலில் பதிவு செய்துள்ளதைக் காணமுடிகின்றது. “நாங்க வேற கலெக்டர் கிட்ட தம்பியப் பத்தி நிறையப் பேசிட்டோம். இப்ப நீங்களும் போயி அதையே சொன்னா அந்தாளு எப்பிடி எடுத்துக்கப் போறானோ தெரியலியேஞ் அதுலயும்ஞ் நம்ம தமிழ் அவனுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. பிறகு என்ன பாசையில நீங்க அவர் கிட்ட பேசுவீங்கஞ் பாஷைதான் பெரிய பிரச்சினைண்ணே” (.15) என்று நாம் நம் தமிழ்நாட்டின் எல்லையைக் கடந்து சென்றால் மொழிப் பிரச்சனையைச் சந்திக்கின்றோம் என்பதை நாவலில் சுட்டுகின்றார். “இந்த மூணாறு டவுண்ல தமிழனுக்கு முதல் எதிரின்னா அது இந்த காட்டுராஜாதாம்ணே” (.73) என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். ‘காட்டுராஜாதமிழன் இவன் காவல் துறையினாரின் கையாளாகச் செயல்பட்டதால் ஒரு பாத்திரத்தின் கூற்றாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.  

       
                சுப்பன் கிட்டுவைத் தேடிக் கிடைக்காததால், அவரின் தம்பி மகன் இன்பராஜ் மலையாளப் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கலாமா? என்று கேட்கின்றான். கிட்டு தமிழ் ஈழம் ஆர்வலர் என்பதற்காகக் கேரள காவல் துறையினரால் விசாரனை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவன். “பெரியப்பாஞ் மலையாளப் பேப்பர்ல எதுலயாவது தம்பி படத்தப் போட்டு விளம்பரம் கொடுக்கலாம்லா பெரியப்பா.. மேப்பிரட்டு இன்பராஜ் மெதுவாய்க் கேட்டான்”  (.26.) என்று இன்பராஜ் என்னும் பாத்திரத்தின் வாயிலாகக் கூறியுள்ளார். “கிட்டு என்ன பெரிய தப்ப பண்ணிட்டான். பிரபாகரன் போட்டோவ வீட்டுக்குள்ள வச்சிருந்தது பெரிய தப்பா. நானும் காங்கிரஸ்காரன் தான்

என்னயால கூடத்தான் தலைவரு ராஜீவ் காந்திய மறக்க முடியல” (.78) என்று ஒரு காங்கிரஸ் கட்சி உறுப்பினர் வாயிலாகக் கேள்வி எழுப்பியுள்ளார் ஆசிரியர். இங்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என்பதைவிட தமிழன் ஒருவன் பாதிக்கப்பட்டுள்ளான் என்றதமிழுணர்வைநாவல் வழி வெளிப்படுத்தியுள்ளதைக் காண முடிகின்றது.    

                தமிழ்நாட்டுக் காவல் துறையினர் தமிழ் மொழியையோ, தமிழ் மாநிலத்தையோ அவர்கள் பார்ப்பதில்லை. ஆனால், கேரளக்காரர்களிடம் மொழி, மாநிலம் என்ற சிந்தனை வெளிப்பாட்டைக் காணமுடிகின்றது. “என்னதான் தமிழ்நாட்டுப் போலீஸ் துப்பாக்கியைத் தூக்கி சுட்டாலும், அவர்கள் மொழியையோ, மாநிலத்தையோ பார்த்து யாரையும்கவனிப்பதில்லைஇதில் கேரள போலீஸ்காரர்கள் சற்று மாறுபட்டிருந்தார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மலையாளிகளுக்கும்பாண்டின்னா ஒரு இளக்காரம் தான். செருக்கு மிகுந்த ஒரு மலையாளியிடம் மாட்டிக் கொள்ள நேரும் தமிழனின் கதியை நினைத்துப் பார்க்கவே அச்சமாயிருக்கிறது. நான் திராவிடனாக்கும்னு சட்டையை சிலிப்பிக்கிறதெல்லாம் கேரளா பார்டர் வரைக்குந்தான். அங்கிட்டு எதும் செல்லும்படியாகாது. கேரளாவில் மூட்டை தூக்குற ஒரு மலையாளி கூட குறைந்தபட்ச மரியாதைய எதிர்பார்ப்பான். நேத்து மொளச்ச ஊருதான். ஆனாலும் எதுலயும் சரியாக இருக்கிறாங்க..” (.83) என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்

மலையாளிகளுக்குபாண்டிஎன்றாலே அவர்களுக்கு இளக்காரமாகப் பார்க்கும் பழக்கத்தை உடையவர்களாக உள்ளனர். ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளிகள் கூட குறைந்த பட்ச மரியாதையை எதிர்பார்க்கக் கூடியவர்கள் என்பதை ஆசிரியர் சுட்டுகின்றார். “சாயாக்கடை அல்லிராஜ் தான் ஆரம்பித்து வைத்தான். முனியாண்டியண்ணே நம்ம கிட்டுவப் பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சுதாணேஞ் இருக்குப்பா.. எனக்கொன்னமோ இந்தக் கேரள போலீஸ் மேலதான் மொத்தச் சந்தேகமும் இருக்கு. நம்மளப் பாத்தாலே ரெம்ப இறுக்கமாயிடுறானுக. இதுல இந்த எம்.எல். வாவது கை கொடுப்பார்னு பார்த்தா அவரும் நம்மள நட்டாத்துல விட்டுட்டாரு. அவருதான் விட்டுட்டாருன்னு, ராமசாமி தலைவர் கிட்ட போனா மொழிப்பிரச்சனைக்கு எங்கிட்டே வராதேனு அடிச்சு விரட்டுறார். இது அவருக்கு இந்தப் மொழியப் பத்தி என்ன தெரியும். முனியாண்டியின் யதார்த்தமான பதிலால் சாயாக்கடையைச் சூழ்ந்திருந்த மௌனம் தானாகவே கலைந்தது”  (பக்.88,89) என்று சாயாக்கடையைச் சார்ந்த அல்லிராஜ் என்ற பாத்திரத்தின் வாயிலாக ஆசிரியர் சுட்டுகிறார். இங்கு கிட்டுவின் பிரச்சினையில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டதற்கு மொழிப்பிரச்சனையைக் காரணமாகக் காட்டுவது புலனாகின்றது.       


                கேரளத்தில் தமிழன் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும், அவன் நம் கட்சிக்காரன் என்று கட்சியைப் பார்க்க மாட்டான். அவன் பார்ப்பது எல்லாம், தமிழன்பாண்டிக்காரன்என்றுதான் பார்ப்பான். இதனை,  “அண்ணாஞ். ஒரு விசயத்தை மட்டும் தெரிஞ்சுக்கோங்க.. என்னதான் நாங்காங்கிரசு அவன் கம்யூனிஸ்ட்டுன்னு உங்களுக்குள்ள பிரிஞ்சு நின்னு அடிச்சிக்கிட்டாலும், ஒரு மலையாளியோட பார்வையில் நீங்க காங்கிரசு மில்ல  கம்யூனிஸ்ட்டுமில்லஞ் நீங்க பாண்டிஞ் அவ்வளவுதான். உங்களுக்கு என்னமாதிரி மரியாதை கொடுக்கணும்னு அவங்களுக்குத் தெரியும்” (.90.) என்று சுட்டுகிறார். அவனுக்குத் தமிழன் என்றால் எத்தகைய மதிப்பைக் கொடுக்கவேண்டும்? என்பது அவனுக்குத் தெரியும் என்கிறார் ஆசிரியர்.      


                ஒரு மலையாளி தம் மொழியின் பெருமையை எவ்வாறு பேசுகின்றானோ? அவன் பெருமைப்பட்டுக்கொள்கிறானோ? அதேபோல் ஒரு தமிழன் தன் மொழியையும் பேச முடியும் என்பதை, “நம்மளு அடிச்சு அயாளு மரிச்சுப் போயிருக்க மாட்டான். வைசன் ஆயில்ல புள்ளிஞ் அதுதாம் போயி.. சிரித்துக் கொண்டார்கள். இனி கிட்டு வேணுன்னு யாரும் கேக்குமா.. மறுபடியும் சிரிப்பு வந்தது அவர்களுக்கு. ‘சிரிப்பைக் கூட மலையாளத்தில் சிரிக்க முடியுமாஎன்று கூட அவர்கள் யோசித்திருக்கக் கூடும். அதே டி.எஸ்.பி ஆபிஸில் டூட்டி பார்க்கும் போலீஸ்கார வினுவுக்கு இதே சுப்பன் மீது சரியான கோபமுண்டு. ஒரு முறை சாரே எங்க தமிழ்நாட்டுல போலீஸ் வண்டில தமிழ்ல காவல்னு போட்டிருக்கும். அதப் போல  மலையாள பாஷையில போலீசுக்கு எதும் உண்டான்னு மூணார்லே ஒருஜாதாவில வச்சு சுப்பன் கேட்டிருந்தான். திருதிருவென விழித்த வினுவுக்கு சுப்பன் பதில் சொன்னான். சாரே மலையாளத்துல போலீசை போலீஸ்னுதான் எழுதணும்ஞ் விழிக்கணும் அறியுமாஞ் மனசுலாக்கணும்ஞ் தமிழ் ஏற்றங்கூடிய பாவீயாக்கும்ஞ்” (.110) என்று சுப்பன் என்னும் பாத்திரத்தின் வாயிலாக ஆசிரியர் விளக்குகிறார். ‘சிரிப்பைக் கூட மலையாளத்தில் சிரிக்க முடியுமாஎன்று கூட அவர்கள் யோசித்திருக்கக் கூடும்என்பது, அதேபோல், தமிழ் மொழிஏற்றங் கூடிய பாஷைஎல்லாவற்றிற்கும் பொருள் உணா;த்தும் என்று குறிப்பிடுகிறார்.  
     
முடிவுரை  
         
                தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருந்தாலும், கூலிக்கார மலையாளிக்கு அவன், ஒருபாண்டிக்காரன்என்ற நிலையிலேயே இருப்பான். இதைத் தாண்டி அவன் சிந்திப்பதில்லை என்பது புலனாகின்றது. ‘நம் தமிழ்நாட்டின் எல்லையைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம் என்பதை இவ்வாய்வு உணர்த்துகின்றதுதமிழன் ஒருவன் நம் தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பால் சென்றால் மொழிப் பிரச்சினையைச் சந்திக்கின்றான் என்பதை இவ்வாய்வு மூலம் அறிந்துகொள்ளமுடிகின்றது. தமிழன் ஒருவன் பாதிக்கப்பட்டுள்ளான் என்றதமிழுணர்வைஒரு தமிழன் கொண்டுள்ளான் என்பது புலப்படுகின்றது. கேரளத்தில் ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளி கூட குறைந்த பட்ச மரியாதையை எதிர்பார்க்கக் கூடியவர்கள் என்பதை இவ்வாய்வு மூலம் புலனாகின்றது. தமிழ் மொழிஏற்றங் கூடிய பாஷைஎல்லாவற்றிற்கும் பொருள் உணர்த்தும் தன்மை கொண்டவை என்பதை உணர்த்துகின்றது.                            
துணைநின்ற நூல்கள்         
1.            அன்வர் பாலசிங்கம், 2012: “செந்நீர்”, சென்னை: கொற்றவை பதிப்பகம் வெளியீடு.
2.            மணியரசன்,பெ.,   2015: “இந்துத்துவா அரசியலுக்கு மாற்று தமிழ்த் தேசியமே”,                     சென்னை: பன்மை வெளி வெளியீடு.                                        
3.            தமிழ்த் தேசியப் பேரியக்கம் கொள்கை அறிக்கைசென்னை: தமிழ்த் தேசியப்                        பேரியக்கம் வெளியீடு.              














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக