முனைவர்க.ஜோதிமுருகன்,
உதவிப் பேராசிரியர்,
தமிழியல்துறை
மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி- 627 012.
முன்னுரை:
உலக இலக்கியங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படும் மொழிகளில் தமிழ் மொழியும் அடங்கும். தமிழர்தான் மனித இனத்திற்கு மூத்தகுடி என்பதை ஔவையார் பாடல்வழி அறிய முடிகிறது. நமக்கு இன்றுகிடைக்கும் பழமையான நூல்கள் எனக் கருதக்கூடிய தொல்காப்பியமும் ,சங்க இலக்கியமும் ஆகும். இது அகம், புறம் எனப் பகுக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் எவ்வாறு தமிழர் வாழ்வியலைச் சொல்லியதோ அதுபோல் புறநானூறும் தமிழர் வாழ்வியலைச் சொல்லியுள்ளது.
அப்பண்புகள் தான் தமிழர்களின் உயர்ந்த பண்பாடாகக் கருதப்பட்டது. இக்கட்டுரையில் பண்பாட்டுநோக்கில் தமிழ் இலக்கியத்தில் எவ்வாறெல்லாம் மாற்றம் ஏற்படும் என்பது பற்றி ஆராயலாம்.
பண்பாடு
பண்பாடு என்பது பக்குவப்பட்ட,
ஒழுங்கான,
சீரான வாழ்க்கை முறையினைக் கொண்டதே பண்பாடு எனக் கொள்ளலாம்.
இப்பண்பாட்டு வரையிலான வாழ்க்கை முறையினை நம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளனர்.
இவ்வாழ்க்கை முறையினைச் சங்ககால இலக்கியங்கள் வாயிலாகநாம் அறியமுடிகிறது.
எல்லோரும் ஒரேகுலம்
சங்ககாலமக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையினை வாழ்ந்துள்ளனர். மனித இனம் முழுமையும் ஒன்றாக எண்ணினர். நாம் வாழும் பூமி அனைவருக்கும் சொந்தமானது. எல்லோரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்.
அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றும், நன்மையும், தீமையும் நாம் செய்யக் கூடிய செயல்களின் மூலம் தான் வருகின்றது என்றும் சமூகத்தில் வாழும் அனைவரையும் சமமாக மதித்துப் போற்றிவாழும் வாழ்க்கைமுறை அமைந்துள்ளன. இக்கருத்தினைப் புறநானூற்றுப் பாடல் மெய்ப்பிக்கின்றது.
இதனை,
யாதும் ஊரேயாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தரவாரா
பெரியோரை வியத்தலுமிலமே
சிறியோரை இகழ்ததுமிலமே புற.
192
என்று புறநானூறு எடுத்துரைக்கின்றது.
மேலும் திருமூலரும் தம் கருத்தினை,
‘ஒன்றேகுலம் ஒருவனேதேவன்” என்று எடுத்துரைக்கின்றார்.
பண்பாட்டின் வாழ்க்கைநிலை:
சமுதாயத்தில் வாழும் மனிதனுக்குத்துன்பம்,
இன்பம் என்ற இரண்டும் வருவது இவ்வுலகின் இயற்கை. எல்லோரும் துன்பப்படமாட்டார்கள்.
இன்பத்தை மட்டுமே எண்ணி வாழ்க்கை முறையினை அமைப்பர். இவர்கள் வாழ்க்கையின் நோக்கம் பொருளீட்டுவதும்,
கிடைத்த பொருளை அனைவரும் பங்கிட்டுக் கொள்வதும் என்கிற கொள்கை உடையவராக இருந்துள்ளனர்.
வாழ்க்கையில் நாம் துன்பப்பட்டாலும் மற்றவர்களுக்குத் துன்பம் தர எண்ணியதில்லை.
இதனை நரிவெரூஉத் தலையார் பாடலின் மூலம் அறியமுடிகின்றது.
‘நல்லதுசெய்தல் ஆற்றீர்ஆயினும்
அல்லதுசெய்தல் ஓம்புமின் அதுமன்
எல்லோரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார்அதுவே” புற.:195
என்ற பாடலில் அறியலாம்.
பிறர்நலம் பேணல்:
மனிதர்களைத் தவிர பிற உயிரினங்கள் பொருட்களைச் சேமித்து வைப்பதில்லை.
அவ்வாறு சேமித்து வைத்தால் தான் மட்டும் உண்ணாது கூட்டமாக உண்ணும். எறும்பும், தேனியும் அவ்வகையில் இயங்கும். ஆனால் மனிதன் மட்டும் தான் சேமித்து வைத்தப் பொருளைத் தான் மட்டும் அனுபவிக்க நினைக்கின்றான். இது இன்றையநிலை.
ஆனால் பழங்காலத்தில் அவ்வாறில்லை.
ஒருபுலவன் தான் பெற்றப் பரிசினை அனைவருக்கும் பகிர்ந்து கொடு என்னைக் கேட்காதே என்று தன் மனைவிக்குக் கட்டளையிடுகின்றான்.
மேலும் தன்னிடம் இருக்கும் பொருளைக் கொடுப்பதுதான் உயர்ந்த பண்பாடு என்று கீழ்க்காணும் பாடலால் தெளிவுறுத்துகின்றான்.
அதனை,
‘ஈயென இரத்தல் இழிந்தன்றுஅதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்றுஅதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று” புற.
204
எதிர்காலத்தில் தமிழ் இலக்கியம் பெறும் மாற்றம்:
* சமுதாயமக்களின் ஒழுக்கநெறி.
* செம்மொழியின் முன்னேற்றத்தால் தமிழ்மொழி உலகமெங்கும் பரவச் செய்தல்.
* சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள நூல்களுக்கெல்லாம் பன்னாட்டுஅளவில் அங்கீகாரம் கிடைத்தல்.
* தமிழருக்கான இருக்கை, என்பது தற்பொழுது தமிழகஅரசால் அறிவிப்பு செய்யப்பட்டு அது இங்கிலாந்து, ரஷ்யா போன்ற மேற்கத்திய நாடுகளால் ஏற்படுத்தப்பட்டு அதனை செயல்படுத்தி வருகிறார்கள்.
* உலகநாடுகள் அனைத்தும் மனித வாழ்வியலை நுட்பமாகப் புரிந்து கொள்ளத் தமிழ் இலக்கியம் பயன்பட்டது என்றால் அதுமிகையாகாது.
முடிவுரை:
இவ்வாறுதமிழ் மொழியில் தோன்றியுள்ள இலக்கியங்கள் அனைத்தும் மனிதனின் வாழ்வை செம்மைப்படுத்தின. மனித வாழ்க்கை சார்ந்து இருந்த அனைத்துக் கருத்துக்களையும் எடுத்துரைத்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக