மு. செல்வக்குமார்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
வரலாற்றுத் துறை,
ம.சு. பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி,
முன்னுரை
நாவல்களின் வெளி விசாலமானது உலவுவதற்கும் வாழ்ந்த வாழ்வை மறுமுறை வாழ்ந்து பார்ப்பதைப் போன்றதொரு விளையாட்டை நடத்திப் பார்ப்பதற்கும் நிறைய இடமுண்டு. ஆனால் நாவலின் காலவெளியைக் கண்டு பயம்கொள்வோருக்குச் சொல்வதற்கேதுமில்லை,
படர்ந்த வெளியை அடர்த்தியாக்க இத்தகைய நீண்ட காலப் பரப்பு தேவையாகிறது. ஒவ்வொரு அசைவிலும் உயிரும் உணர்வும் குன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாவலின் விசாலமான வெளி இயங்கு பொருளாக இருக்கிற பொழுது அதிலே புதிய புதிய கருத்துக்கள் புதிய சிந்தனை முறை, புதிய தத்துவமுறை ஏற்கனவே இருந்த வாழ்வின் ஏற்ற இறக்கங்கள், கால ஓட்டத்தில் கரைந்து போன நம் பண்பாட்டின் தொடர்ச்சி போன்றவற்றை மீண்டுமொருமுறை புனைவின் வழி மீட்டுருவாக்கம் செய்து பார்த்து அதன் பிரதிபளிப்பு நிகழ்காலத்தில் நடைபெறும் சமூக, வரலாற்றுடன் எவ்வாறு வினைபுரிகின்றன என்பதை நிகழ்த்திப் பார்க்க முடியும். தமிழ் நாவல்களில் வாழ்வியல் அனுபவங்களை நெருக்கடி மிகுந்த பிரச்சினையாகச் சித்தரிப்பது மட்டுமின்றி அவற்றின் ஆணிவேர்களைத் தேடிச் செல்லும் பணியினையும் மேற்கொண்டுள்ளது. அனுபவங்களின் பின்னால்,
எதிர்வினை கொள்ளும் உணர்வுகளின் பின்னால் பின்னிப் பிணைந்து கிடக்கும்
‘வரலாறு’
வெறுமனே நிகழ்ச்சிகளின் அடுக்கு வரிசை அல்ல, மனித வரலாறு ஒவ்வொரு மனிதனிடம் நிழலாகவோ, நினைவில் உணர்வாகவோ, படிமமாகவோ, தொன்மமாகவோ, கதைகளாகவோ உறைந்து கிடக்கிறது.
மனித வாழ்வில் படிந்துகிடக்கும் கஷ்டங்கள்,
இயலாமைகள்,
ஏமாற்றங்கள்,
சூழ்ச்சிகள்,
ஏக்கங்கள்,
வீழ்ச்சிகள் போன்றவற்றை விரிவான காலங்களில் அடுக்கடுக்கான காலமடிப்புகளுடன் சொல்ல நாவல் என்னும் பெரும் பரப்பே ஆய்வாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும், வாசகர்களுக்கும் மிக நெருக்கமாக இருக்கிறது. இத்தகைய நாவல் இலக்கியம் காலத்தால் முன்னோக்கிச் சென்று அனைத்து மக்களையும் உள்வாங்கி அவர்களின் வாழ்வை அவர்களின் எண்ணத்தை வெளிப்படுத்த முனைகிறது.
“ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோனி, கடலுக்கு அப்பால்
காலத்தைத் தாண்டிச் செல்ல வேண்டீயதன் தேவை”
தமிழ் நாவல் என்பது ஒற்றைத் தன்மையுடன் கதைசொல்லும் பொதுப்போக்கு நிலவிய சூழலில் மாறுபட்ட கதை கூறலை முன் வைத்தவர் ப.சிங்காரம் இதுவே அவரது காலத்தில் வெளிவந்த நாவல்களில் கதைக் களங்கலும், காலங்களும், புனைவெளிகளிலும் மாறுபட்டு நிலைத்து நிற்கிறது.
சராசரித் தமிழரின் வாழ்வானது குடும்பம், வேலை, சேமிப்பு, எதிர்காலச் சந்ததி போன்றவற்றை முன்வைத்து இயங்குவதாக மட்டுமே இருந்தது பரந்துபட்ட வாழ்க்கைத் தளம் குறித்து அக்கறையற்ற தமிழரின் வாழ்வு இன்றுவரை போர் குறித்து அக்கறையின்றியே வாழ்ந்து வந்தனர். வருகின்றனர் இனியும் இப்படியே வாழ்வார்களா என்ற வினாவிற்குப் பதில் தேடும் தேவை ஏற்படின் அத்தேவைகளை நிறைவுசெய்யத் துணைபுரிவது நாவல்களேயாகும்.
இரண்டாம் உலகப் போரின் போது தெற்காசிய நாடுகளில் வாழ்ந்த தமிழரின் நிலையைப் ப.சிங்காரம் புனைவாக்கியுள்ளார். நாவலின் கதைக்களம் போர் அல்லது பாண்டியனைச் சுற்றி நிகழும் நிகழ்ச்சிகள் பாண்டியனைப் பற்றிய புனைவு கெட்டிதட்டிப்பேன தமிழர் வாழ்வியலின் மீது வீசப்படும் விமர்சனமாகும்.
பொதுப்புத்தி,
மதிப்பீடுகளைச் சிதைத்து உருவாகும்.
பாண்டியன் சாகசக்காரன், புரட்சிக்காரன், கலகக்காரன்,
அராஜகவாதி என்றும் தமிழரின் பண்பாடு என்று நினைவுகூறும் இடத்தில் மேல்தட்டு மக்களின் கருத்தியல் ஒழுங்குடன் வடிவமைக்கப் பட்டதாகி இருக்க வேண்டும் என்ற எண்ணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாண்டியன் ஒழுங்கற்ற விதிகளின் அடிப்படையில் எல்லாவற்றையும் தகர்த்துவிட்டுச் செல்கின்றான்.
பாண்டியனின் புனையுலகமானது செறிவான கோட்பாடுகளின் அடிப்படையிலும் தத்துவ நோக்கிலும் புனையப்பட்டுள்ளது. தேர்ந்த சாகசக்காரன் எவ்வாறு செயல்படுவான் என்றும் விதிகளற்ற வாழ்தலைத் தேடியலைதலும் எது குறித்தும் முன் தீர்மானம் இல்லாவிடினும் முடிவெடுத்து விட்டால் தீர்மானமாக இருத்தலும் பாண்டியனின் இயல்பாக இருக்கிறது.
பொதுப் புத்திக்கு எதிரான போக்கு, சாகசச் செயலில் ஈடுபடுதல் தொடர்ந்து மது அருந்துதல்,
அளவற்ற பெண்களுடன் தொடர்பு, மரணம் குறித்த அக்கறையின்மை இழப்பின் ஏக்கம் உணரப்படாமல் இருத்தல், தனித்துவம்,
தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருத்தல் பரபரப்பான மனநிலை போன்ற போக்குகளின் குவிமையமாக பாண்டியனின் உலகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
தென்கிழக்காசியாவில் செயல்பட்ட இந்திய தேசிய இராணுவத்தில் லெப்டினன்டாகப் பணியாற்றிய செல்லையா போர் முடிந்தவுடன் மீண்டும் வட்டிக்கடை வேலைக்குத் திரும்புகிறான். இளம் வயதில் செல்லையாவும் கடை முதலாளி வயிரமுத்துப் பிள்ளையின் ஓரே மகள் மரகதமும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர்.
அவர்களின் காதலை முதலில் ஆட்சி காமாட்சியம்மாலும் பிறகு பிள்ளையும் அங்கீகரிக்கின்றனர்.
ஆனால் தற்சமயம் பிள்ளையின் மனதில் மாற்றம் தோன்றுகிறது. போருக்குச் சென்று மீசையும் கால்சராயுமாகத் திரும்பியுள்ள செல்லையா வட்டித் தொழிலுக்கு உதவ மாட்டான் என்றும் மரகத்ததை வேரொருவருக்குத் திருமணம் செய்து வைக்கத் திட்டமிடுகிறார். இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொள்ளலாம என செல்லையா ஆலோசனை கூற மரகதமோ தன் பெற்றோரின் சம்மதம் வேண்டும் என்கிறாள்.
இதனிடையே உலக யுத்தத்தின் இருண்டகாலம் பர்மா முதலிய பகுதிகளையும் சூழ்கிறது.
இருண்ட கால கட்டத்தில் திக்குதிசை தெறியாமல் அலைக்கழியும் மனித மனங்களிடையே செல்லையாவும் மரகதமும் தனித்து நிற்கின்றனா;.
ஆண்,
பெண் மனங்களுக்கிடையில் தோன்றும் காதல் உணா;வானது சாதி, சமயம், பொருளியல் ஏற்றதாழ்வுகள்,
வாழ்க்கை சூழல் போன்ற கதைக்களங்களை வைத்தே புனை வெழுத்து தமிழ்ச் சமூகத்தில் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. போர்ச் சூழல் காதலுக்கு எதிர் நிலையில் இருக்கிறது என்பதை முன் வைத்து புனைவெழுத்து அரிதினும் அரிதாகவே காணப்படுகிறது. அதிலொன்று சிங்காரத்தின் செல்லையா கதாபாத்திரம்.
முன்னகர வேண்டிய புனைவின் தேவை
“பாண்டியன் பிறரைக் கொல்லும்போது என்ன வகையான மனநிலையில் இருந்தான் என்றும்” “சுந்தரம் உயிருக்காகக் கெஞ்சும்போதும் மரணத்தைக் கௌரவமாக ஏற்றுக்கொள் என்று அறிவுரை கூறுகிறான்”.
“மரணத்தைத் தொட்டு விட்டு மீறும் கட்டங்களில் கூட அதைப் பெரிதாக நினைத்துக் கொள்வதில்லை” இத்தகைய கதைக்களம் இனிவரும் புனை கதையாளர்களுக்காகவே விடப்பட்டதாக இருக்கிறது. வாழ்வு மரணம் இதற்கிடைப்பட்ட நிலையில் மனித இருப்பின் தேவை என்ன என்பது இயற்றப்படல் வேண்டும். மரணம் வாழ்வைக் கற்றுத் தருமா?
மரணம் வாழ்வின் மீது இருக்கும் ஏக்கத்தை, நம்பிக்கையை விதைக்குமா, சிதைக்குமா என்றும் பல்லாயிரக் கணக்கான மரணங்களைப் பார்த்த பின்பும் வாழ்வு எந்தச் சலனமுமின்றி இயங்கிக் கொண்டிருக்கையில் மரணம் எவ்வாறு வாழ்வின் மீது ஆதிக்கம் அல்லது தாக்கம் செலுத்த முடியுமா என்பதை ஆராயும் புனைவின் வெளியைக் கோரி நிற்கிறது ப.சிங்காரத்தின் மரணம் பற்றிய நினைவுச் சிந்தனை. ஏனெனில் மரணத்தை வைத்தே வியாபார அரசாட்சி நடத்தும் நடப்பியல் சூழலில் மரணம் கருப்புமையால் அச்சடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளாக மாற்றப்பட்டு காலத்தின் மீது கருமை ஏற்றியிருக்கிறது.
உலகை வென்றவன் என்ற நிலையில் தன்னை முன்வைத்தவன் ஒரு யோகி அல்லது ஞானி (உலகைத் துறந்தவனை என்ன பெயரிட்டால் அவனுக்கென்ன)
என்ற நிலையில் இருந்தவன் தன் ஆங்காரம் தரை தட்டி நிற்கையில் வாழ்க்கையின் தன்மை அல்லது உண்மை தெறியத் தொடங்கியவுடன் அவ்வரசன் தன்னை இவ்வாறு பிரகடனம் செய்ய வேண்டும் என்கிறான்.
“உலகை வென்றவன் இறந்த பின் வெருங்கையுடன் தான் இவ்வுலகை விட்டுச் சென்றான் என்பதற்காக சவப்பெட்டியின் வெளியே என் இருகைகளையும் வெளித் தெரியும்படி வைத்து எடுத்துச் செல்லுங்கள் என்றான்” இது வரலாற்றின் வெளிச்சமிடப்பட்ட பக்கங்கள் இதன் எதிப்பக்கம் அணைத்தின் மீதும் ஆதிக்கம் என்று அந்தப்புர அரசியாக வாழ்ந்த அரசிகளின் மண்மூடிய சமாதிகளைக் கிளைத்தெடுக்கத் துடிக்கும் காலத்தின் தேவையில் வந்து நிற்கிறது காலச்சக்கரம் மனிதம் விரிந்த கைகளில் இருந்து எதைக் கற்றது விரித்த கைகளில் இருந்து எதைக் கற்றது. ஒரு கை தூக்கி உலகுக்குணர்த்த நினைத்த தென்ன, இடக்கை வலதுகை உணர்த்த நினைத்தது என்ன இவையனைத்தும் ப.சிங்காரம் விட்டுச் சென்ற புனைகதை வெளியின் இடைவெளிகள் அல்லது விடுபடல்கள் இவைகளை எழுதுவது காலத்தின் தேவையாக இருக்கிறது
தத்துவ நோக்கில் முன்னோக்கி நகரவேண்டிய புனைவுகள்
இன்று நம்மக்களின் வாழ்க்கை நிலைகளை நம் மூதாதையருடன் ஒப்பு நோக்கும்போது நம் வாழ்வு விரைந்து முன்னேரியிருக்கிறதே தவிர முனைப்புடன் இருக்கவில்லை என்றே தோன்றுகிறது.
ஏனெனில் நாம் பெற்றதைவிட இழந்தது அதிகமாகவே இருக்கிறது. நம் தொப்புழ்கொடி வாழ்வின் கலாசாரம் அந்நியமாகத் தோன்றுகிறது.
அன்றாட வாழ்வில் உயிர் தரித்தலுக்கு வழிகாணும் முறைகளிலும் அங்கு எழும் பிரச்சனைகளிலும் அதைச் சீர் செய்ய முயல்வதுமே வாழ்க்கை நிலை என நினைத்து வாழ்கின்றனர். ஒரு புனைவு காலங்கடந்து, காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்கிறது என்பதை அதன் உண்மையும் உண்மைக்குப் பக்கத்தில் நடக்கும் நிகழ்வுகளுமே காரணமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் உண்மையை முழுவதும் உண்மையாகவே விளம்பிட முடியாது. அது பல சிக்கல்களையும் அதனால் அது காலத்தின் ஓட்டத்தில் கலந்து கொள்ளாமல் தணித்தே நிற்கவிடப்படும் சூழல் உருவாகும். எனவே புனைவு உண்மையைப் போலவும் உண்மையின் மேல் அமர்ந்திருக்கும் கர்ப்பனையாகவும் இருத்தல் வேண்டும். கர்ப்பனையை நீக்கினால் உரையை நீக்கினால் கூர்மையுடன் வெளிவரும் வாளினைப் போல் உண்மை கூர்மையுடன் வெளிவர வேண்டும். இந்த உண்மைக்கும் கற்பனைக்கும் இடையில் அணுவளவு இடைவெளியில் இருக்கத் தகுதியுடையது எதுவெனில் அது தத்துவமாகும்.
காலந்தோடும் மாறிக் கொண்டிருக்கும் சமூக மதிப்பீடுகளில் ஒரு புனைவு எந்த வகையில் பொருந்துகிறது என்பது முக்கியமான கேள்வியாக நம்முன் எழுந்துள்ளது. சங்க இலக்கியங்களின் மொழி, நடை, பாடுபொருள், காலம், அரசு, மக்கள் போன்றன நவீன வாசிப்பாளர்க்களுக்கு அந்நியமானவையாக இருப்பினும் அது தமக்கான வாசிப்புப் பரப்பை இன்றும் தக்க வைத்துக் கொள்வது அதன் செவ்வியல் தன்மையின் படியே என்பது புலனாகிறது.
“இலக்கியம் புரட்சியைத் துரிதப்படுத்தும் கிரியா ஊக்கி அல்லது ஞானத்தேடல் என்ற இருவேறு எதிர் நிலைகளின் ஒத்திசைவே தத்துவமாகக் கருதிக் கொள்ளலாம்”.
சமூக மதிப்பீடு என்பது பொதுப்புத்தி சார்ந்த மதிப்பீடு தானாக உருவாக்குவதில்லை. “திட்டமிட்ட முயற்சிகள் காரணமாக மதிப்பீடுகள் உருவாக்கப்படுகின்றன”. தனிநபரின் தனித்துவத்தினாலும் வரலாற்றில் அழுத்தமான பாதிப்புகளினாலும் மதிப்பீடுகள் உருவாக்கப்படுகின்றன.
சமூகத்தில் வழக்கத்தில் இருக்கும் மதிப்பீட்டிற்கும் புதிதாக உருவாகும் மதிப்பீட்டிற்கும் இடையில் தொடர்ந்து முரண் நிலவுகிறது.
வடிவமைப்பில் இருந்து விலகும் மதிப்பீடுகள் சமூகத்தில் பலத்த எதிர்ப்பை தாங்க வேண்டி இருக்கிறது. இதைப் போக்க தத்துவ நோக்கில் எழுதப்படும் புனைவுகள் எக்காலத்திற்கும் ஏற்ற நிலையில் வைத்துப் பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு புனைகதை வாசிப்பாளரும் வாசிப்பின் மூலம் தன்னை அடையாளம் காணும் வகையில் புனைகதை உருவாக்கப்பட வேண்டும் அதிலும் தத்துவம் பற்றியும், தத்துவக் கோட்பாடு பற்றியும் புனைகதைகளைக் கட்டமைக்கும்போது மிகவும் கவனமாக கருத்துக் களங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், சமயம் பற்றியும் பண்பாடு பற்றியும் வாழ்க்கை நெறிமுறை சார்ந்தும் தத்துவங்களை புனைகதைக் களங்களாகத் தேர்ந்தெடுத்தால் அவற்றின் ஒட்டுமொத்த சாரத்தையும் அத்தத்துவம் எழுதப்பட்ட காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் பொருத்தமான நிலையில் வைத்துச் சிந்தித்துப் பார்த்து அவற்றிலுள்ள முக்கிய சரடினை புனைகதையின் சரியான தளத்தில் பொருத்திப் பார்க்கச் சொல்வதற்கான நெறிமுறைகள். மொழிக் கலப்பு போன்றவற்றைச் சொல்ல ஒரு மொழியின் தத்துவ விசாரமே முன்நிற்கிறது.
சமூகத்தில் நிலவும் போலித்தனம், அற்ப மனநிலை, கழிவிரக்கம்,
பகட்டு போன்றவற்றுடன் பண்டிதத்தனம்,
பண்பாடு,
அரசியல்,
கோட்பாடுகள் போன்றவை குறித்தும் இதுவரைச் சொல்லப்பட்டவை இனி வரும் தலைமுறைக்கு ஏற்ப எவ்வாறு சொல்லப்பட வேண்டும் என்பதையும் இன்னும் கால மாற்றம் நிகழுமெனில் அத்தகைய சூழலில் வாழ்வின் நிலை, கலாச்சாரத்தின் நிலை, பண்பாட்டின் நிலை, மொழியின் வளர்ச்சி எவ்வாறு இருக்க வேண்டும் போன்றவற்றை தத்துவ நோக்கில் சிந்தித்து அதற்கு ஏற்றார்போல் புனைகதை உலகினையும் கதையில் வரும் மனிதர்களின் பேச்சு, மொழி,
உடல்மொழி,
தொழில்,
தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றை ஓட்டியே சிந்தித்து அதற்கு ஏற்றவாறு மொழிச் செழுமையை உருவாக்க வேண்டும்.
இன்று தமிழில் வாசிப்பு என்பது வெகுவாக மாறிவிட்டது அதிலும் கதை கூறலில் மையம் சிதைந்து கூறுதல், சிதரலான முறையில் கதைக்களங்களை விவரித்தல் போன்றவை பரவலான முறையில் வாசிப்பாளர்களிடையே காணப்படுகிறது. இவ்வாசிப்பு முறைக்கு ஏற்ற வகையிலும் இதிலும் மேம்பட்ட அல்லது வேறுபட்ட வாசிப்புத் தேவை வரும் காலங்களில் தேவைப்பட்டால் அதற்குத்தக்கவும் புனைகதைகளை உருவாக்கி தத்துவம், தத்துவக் கோட்பாடுகளைத் தெளிவான முறையில் முன்வைக்க வேண்டும். ஒரு காலத்தில் மிகவும் புனிதமாகவும், மேன்மையாகவும் கருதப்படும் பிரதிகளின் சமநிலையினைக் கலைப்பதன் மூலம் பிரதிகளின் இருப்பும் சமகாலத் தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. தத்துவ நிலையில் வைத்துக் கதை புனைவது மிகுந்த சவாலானதும் ஏற்கனவே இருக்கும் தத்துவத்தின் ஒட்டுமொத்த தன்மைகளையும் உள்வாங்கி மறு உறுவாக்காம் செய்யும் பணி சிரத்தையுடன் கையாளப்பட வேண்டும்.
இந்திய மண்ணில் மக்களின் வாழ்க்கை ஏதோ ஒரு நிலையில் தத்துவத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. மதத்திலிருந்து தனி மனிதனைப் பிரித்திட முயன்ற பெரியாரின் செயல் தமிழர் வரலாற்றில் புதிய அம்சம் அதற்கு முன்பு அயோத்திய தாசர் முன்வைத்த பௌத்த தத்துவக் கோட்பாடு முன்னத்தி ஏராக இருந்துள்ளது. மனித இருப்பில் உயர்வுக்கும் தாழ்வுக்குமான தலைவிதித் தத்துவம் பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. இதற்கு மாற்றாக அயோத்திய தாசர், பெரியார் போன்றவர்களின் தத்துவ சிந்தனைகள் ஒரு புனைகதைப் போக்கில் நிகழ்த்தப்பட வேண்டும். இது காலத்தின் தேவையைக் கருதி முன் வைக்கப்படுகிறது.
முடிவுரை
வாழ்க்கை அபத்தம் என்று எரிச்சலைடையும் போதும் எல்லாச் சமூக மதிப்பீடுகளும் மறுபரிசீலனைக்குள்ளாவதன் தேவையுள்ள காலத்தில் வாழும் தமிழன் உலக மயமாக்கள் காரணமாகத் தமிழ் அடையாளம் அழிந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழின் இருப்பு அர்த்தமிழந்து கொண்டிருக்கிறது. சுய சார்பு,
சுதேசியம் போன்ற சொற்கள் வழக்கிழந்த நிலையில், எங்கிருந்தோ திணிக்கப்படும் கருத்துக்களின் ஆளுமையின் கீழ் வாழப்பழகிடும் சூழல் இன்று ஏற்பட்டுள்ளது.
மனிதன் தனது அன்றாட வாழ்க்கை, உழைப்பு போன்றவற்றிலிருந்து அந்நியப்பட்டுக் கொண்டு,
தனக்குள்ளாகவே சுருங்கிக் கொண்டிருக்கிறான்.
தனிமனிதனுக்கான முக்கியத்துவம் என்ற போர்வையில், ஒவ்வொருவரின் அடையாளத்தினையும் அழித்துச் சுயமிழக்கச் செய்திடும் செயல் ஊடகங்களின் வழியாக அமைதியாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது காலந்தோறும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகள் அதற்கான பதில்கள் அவ்வப்போது மாறிக் கொண்டிருந்தாலும் அவற்றின் மீது ஏற்படும் மனச் சஞ்சலங்கள் ஆழமானவையாகவே இருக்கின்றது. நவீன வாழ்க்கை தத்துவக் கோட்பாடுகளை உருவாக்குவதே இனி வரும் படைப்பாளர்களுக்குச் சவாலாகவும் தமிழுக்கும் தமிழ்ப் புதினம் வாசிப்பாளர்களுக்குத் தேவையாகவும் இருக்கிறது.
நூலாதாரங்கள்
ந.முருகேசப் பாண்டியன், நவீனப் புனைகதைப் போக்குகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
* உயிர்மை,
* காலச்சுவடு
* உயிரெழுத்து
* குமுதம் தீராநதி
* தடம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக