அ. முபாரக் அலி
மொழியியல் துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலை நகர்.
முன்னுரை
தமிழ் மிகத் தொன்மையான மொழி என்ற சிறப்பினைப் பெற்றது. இம்மொழி அனைத்து வகைகளிலும் மிகுந்த வளம் கொண்டது. உலகம் வியக்கும் இலக்கிய மற்றும் இலக்கணச் செல்வத்தைக் கொண்டது. கால்டுவெல் தமிழைப் பண்பட்ட மொழிகளுள் ஒன்றாக பட்டியலிட்டுள்ளார்.
இத்தமிழைப் பேசும் மக்கள் இடையே உள்ள வேறுபாட்டின் காரணமாக ஒவ்வொருவரும் தமிழை ஒவ்வொரு வகையாகப் பேசுகின்றனர். பேசும் இனத்தார் அல்லது வகுப்பார்க்குள் வேறுபாடு இருந்தால்,
ஒவ்வொரு வகுப்பு அல்லது இனமும் ஒவ்வொரு வகை தமிழ் பேசுவதைக் காணமுடிகிறது.
இவ்வாறு வேறுபடும் பேச்சினைப் பேச்சு வழக்கு என்பர். மொழியியல் பேராசிரியர் கோ. சீனிவாசவர்மா அவர்கள் இப்பேச்சு வழக்கினைக் கிளைமொழி என்றும் அதற்கானச் சொற்பொருள் விளக்கத்தினையும் தம் நூலில் கொடுத்துள்ளார்.
“கிளைமொழி என்பது “ஞிவீணீறீமீநீt” என்ற ஆங்கிலச் சொல்லுக்கேற்றத் தமிழ் வடிவமாகும். இது ஒரு மொழியிலிருந்து பிரிந்த அல்லது கிளைத்த மொழி என்ற பொருள் தருவதன்று.
கிளை மொழி என்ற கலைச் சொல் ஒரு குறிப்பிட்ட பேச்சு மொழியின் வகையைக் குறிக்கும்”.
இதனை நினைவில் கொண்டு தமிழ்ப் பேச்சு வழக்கில் காணப்படும் மொழியியல் கூறுகளை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பேச்சு வழக்கு
மொழி பலராலும் பேசப்படும் பொழுது அதனுடைய தன்மையிலும் வடிவிலும் இடத்திற்கு இடம், செய்தொழில்,
மக்களின் இனம், சமூகம் ஆகியவற்றிற்கேற்ப ஓரளவு மாற்றங்களுடன் வழங்குவதைக் காண்கிறோம்.
அவ்வாறே,
தமிழும் வட்டார வழக்கு (ஸிமீரீவீஷீஸீணீறீ பீவீணீறீமீநீt) சாதி வழக்கு
(அ)
இன வழக்கு (சிணீstமீ பீவீணீறீமீநீt)
தொழிலுக்கு ஏற்ப சிறப்புச் சொற்களடங்கிய தொழில் வழக்கு (றிக்ஷீஷீயீமீssவீஷீஸீணீறீ பீவீணீறீமீநீt)
நகர வழக்கு (ஹிக்ஷீதீணீஸீ பீவீணீறீமீநீt)
கிராம வழக்கு (ஸிuக்ஷீணீறீ பீவீணீறீமீநீt)
கல்வித் தன்மையிலான உயர்வழக்கு
(ணிபீuநீணீtவீஷீஸீணீறீ ஷிஷீஜீலீவீstவீநீணீtமீபீ ஞிவீணீறீமீநீt)
கொச்சை வழக்கு (ஹிஸீமீபீuநீணீtமீபீ பீவீணீறீமீநீt)
எனப் பல வகையான பேச்சு வழக்குகள் தமிழ்ச் சமூகத்தில் வழங்குவதைக் காணமுடிகிறது.
இருநிலை வழக்கு
தமிழ்மொழி இருநிலை வழக்கு மொழியாகும். மொழியியல் பேராசிரியர் கோ. சீனிவச வர்மா அவர்கள் தம் நூலில் இருநிலை வழக்கினை “ஒரு மொழியின் இரு கிளை மொழிகள் ஒரு சமயத்தில் நிரந்தரமாக ஒன்றுக்கொன்று துணையாகவும்,
தனித்தனி சமூகச் சூழ்நிலையில் பயன்படுமானால் அந்த நிலையை இருநிலை வழக்கு (ஞிவீரீறீஷீssவீணீ)’’ என விளக்கியுள்ளார்.
மேலும் தமிழ்மொழியின் இருநிலை வழக்குகளிலிருந்து சில எடுத்துக்காட்டுகளையும் கொடுத்துள்ளார்.
உயர்வழக்கு தாழ்ந்த வழக்கு
இன்று இண்ணைக்கி
உயர்வு ஒசத்தி
உயரே ஒசக்கெ
எண்பது எம்பளது
நோய் காயலா
“இ’’கர
> “எ’’கர / “உ’’கர > “ஒ’’ கர மாற்றங்கள்
தமிழல் உள்ள “இ’’கர உயிர் “எ’’கர உயிராகவும் “உ’’கர உயிர் “ஒ’’கர உயிராகவும் பேச்சு வழக்கில் மாறுவதைக் காணமுடிகிறது. சான்றாக
இடம்
> எடம்
இலை
> எல
இச்சொற்களில் சொல்லின் முதலில் உள்ள “இ’’கர உயிர் “எ’’கர மாக மாறுவதைக் காணமுடிகிறது. அதே போல்
உடல்
> ஒடல்
உரல்
> ஒரல்
இவ்விரு சொற்களிலும் சொல்லின் முதலில் உள்ள “உ’’கர உயிர் “ஒ’’கரமாக மாறுவதைக் காணமுடிகிறது. இம்மாற்றம் சொல்லின் இரண்டாவது அசையில் “அ’’கர உயிர் பெற்றிருக்கும் சொற்களில் நிகழ்வதாக மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஒலியன் இடம்பெயரல்
ஒரு சொல்லிலுள்ள ஒலியன் அச்சொல்லுக்குள்ளேயே இடம்பெயர்ந்து நிற்பதனை ஒலியன் இடம்பெயரல் என்பர். இவ்வாறு சொல்லினுள் இடம்பெயர்வதால் அச்சொல்லின் பொருளில் மாற்றம் ஏற்படுவதில்லை.
இத்தகையச் சொற்களை நாம் பேச்சுத்தமிழில் காணமுடிகிறது.
சான்றாக,
தசை
> சதை
பத்தை
> தப்பை
மூக்கின உயிர்கள்
தமிழில் பத்து உயிரொலிகள் உள்ளதாக மொழியியல் அறிஞர்கள் கூறுவர். அவர்கள்
“ஐ’’காரம்
“ஔ’’காரம் ஆகிய இரு ஒலிகளையும் கூட்டொலிகளாகவே கருதுகின்றனர்.
முன்ணண்ன
இடையண்ண பின்ணண்ண
உயிர் உயிர் உயிர்
உயிர் (பிவீரீலீ) இ உ ஊ ஈ
இடை (விவீபீபீறீமீ) எ ஒ ஓ
ஏ
தாழ் (லிஷீஷ்) அ ஆ
இந்நிலையில் தமிழ்ப்பேச்சு வழக்கில் சில சொற்களின் இறுதி மெய்கெட்டு அதற்கு முன் உள்ள “அ’’கர உயிர் மூக்கொலிச்சாயல் பெறுகிறது.
சான்றாக
வந்தான்
> வந்தா
க்ஷிணீஸீtணீ:ஸீ
> க்ஷிணீஸீtணீ
தமிழில் மூக்கின உயிர்கள் இல்லையென்றாலும் தமிழ்ப் பேச்சு வழக்கில் இவைகளைக் காணமுடிகிறது. மேலும் இடையின ஒலிகளைக் கொண்டு முடியும் சில சொற்களில் அந்த ஒலிகள் பேச்சு வழக்கில் கெட்டு உயிரீறு பெற்றச் சொற்களாக அமைவதைக் காணமுடிகிறது சான்றாக.
பந்தல்
> பந்த
கந்தல்
> கந்த
உயிர்விடு ஒலி
தமிழில் பெரும்பான்மையானச் சொற்கள் உயிரெழுத்துக்களைக் கொண்டே முடிகின்றன. மெய்யைக் கொண்டு முடியும் சில சிறுபான்மைச் சொற்களின் இறுதியில் ஒலித்துணையாக
“உ’’கர உயிரைக் கொண்டு உச்சரிக்கும் வழக்கத்தினைத் தமிழ்ப்பேச்சு வழக்கில் காணமுடிகிறது. சான்றாக
நாள்
> நாளு
பால்
> பாலு
மேலும் இந்தத் தாய்மொழியின் தாக்கம் தன்மயமாக்கப்பட்ட பிறமொழிச் சொற்களிலும் காணமுடிகிறது.
ரயில்
> ரயிலு
சைக்கிள்
> சைக்கிளு
விகுதி
தமிழ்ப் பேச்சு வழக்கில் அஃறிணைப் பன்மை விகுதியைச் சில நேரங்களில் காணமுடிவதில்லை.
சான்றாக,
பத்து மாடு வாங்கனே
பத்து ஆடு வாங்கனே
மெய்யொலிக்கொத்து
தமிழில் சொல்லின் முதலில் (ஊடரளவநச)
இரு மெய்கள் ஒன்றிணைந்து வருவதில்லை. ஆனால் தமிழ்ப் பேச்சு வழக்கில் பிற மொழியிலிருந்து கடன்பெற்று தன்மயமாக்கப்பட்ட சொற்களில் இதனைக் காணமுடிகிறது. சான்றாக,
ப்ரயோஜனம்
> பிரயோஜனம்
க்ராம்பு
> கிராம்பு
த்ருப்தி
> திருப்தி
சிறப்புச் சொற்கள்
பேச்சுத் தமிழில் சில சமூகத்தினர் தங்களுக்கே உரிய சில சிறப்புச் சொற்களைக் கையாளுகின்றனர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இசுலாமியர்களின் தமிழ்ப்பேச்சு வழக்கில் காணப்படும் சொற்கள் பிற சமூகத்தவரின் பேச்சு வழக்கில் காணப்படவில்லை. சான்றாக,
மட்டி - நத்தை
பொட்டு மூக்குத்தி
தலஓடு - மண்டை ஓடு
புள்ளம்மா - அத்தை
அன்தூரு - வெளிநாடு
மேலும் செட்டி நாட்டில் வழங்கும் பேச்சுத்தமிழில் காணப்படும் சிறப்புச் சொற்கள்.
அந்தாசு - ஏறத்தாழ
அரசு - ஆண் குழந்தை
இஞ்சி - கஞ்சன்
கடவு - இடம்
கமை - பெருமை
முடிவுரை
தமிழ்ப் பேச்சு வழக்கில் இருநிலை வழக்கு, “இ’’கர
“எ’’கர மாற்றம் “உ’’கர “ஒ’’கர மாற்றம், ஒலியன்கள் இடம்பெயரல், சொல்லின் இறுதியில் உள்ள ஒலியைத் தவிர்த்து விட்டு முன்உள்ள உயிரை மூக்கின உயிராக மாற்றுதல், உயிர்விடு ஒலியான “உ’’கரத்துடன் மெய்யொலிகளில் முடியும் சொற்களை உச்சரித்தல்,
பன்மை விகுதியை பேச்சு வழக்கில் தவிர்த்தல்,
தன்மய மாக்கப்பட்ட பிற மொழிச் சொற்களின் முதலில் உள்ள மெய்யொலிக் கொத்துக்களைப் பயன்படுத்தல் போன்ற நிலையினைக் காணமுடிகிறது.
இவையனைத்தும் மொழியியலில் உள்ள கூறுகளாகவே உள்ளதால் இத் தமிழ்ப் பேச்சு வழக்கு கருத்துப் பரிமாற்றம் சிறப்புற நடைபெற, திறம்பட நடைபெற உதவும் ஒரு கருவியாக உள்ளது. மேலும் இன்றைய நவீன உலகில் புதுமையாக்கத்தின் காரணமாகத் தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் பிறமொழிச் சொற்களின் எண்ணிக்கை, புதுச் சொல்லாக்கத்தின் காரணமாகப் புதிய தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
ஆனால் பேச்சுத்தமிழ் அறிவியல் அடிப்படையில் அமைந்துள்ளதால் தனது சிறப்பினை என்றும் இழக்காமல்,
அதன் அமைப்பு எம்மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் நிலைத்து நிற்கும் என்பதே உறுதி.
உதவிய நூல்கள்
1977 ணிபீஷ்ணீக்ஷீபீ கீவீறீறீவீணீனீs.
ஜி,
ஹிபீணீஹ்ணீக்ஷீ ஞிவீணீறீமீநீt ஷீயீ ஜிணீனீவீறீ,
கிஸீஸீணீனீணீறீணீவீ ஹிஸீவீஸ்மீக்ஷீsவீtஹ், கிஸீஸீணீனீணீறீணீவீ ழிணீரீணீக்ஷீ.
1980 சீனிவாச வர்மா. கோ.,
இருமொழியம்,
அனைத்திந்தியத் தமிழ் மொழியியற் கழகம், அண்ணாமலை நகர்.
1986 சீனிவாச வர்மா, கோ.,
கிளைமொழியியல் அனைத்திந்தியத் தமிழ்மொழியியற் கழகம், அண்ணாமலை நகர்.
2005 சீனிவாசன். ரா., மொழியியல், முல்லை நிலையம், சென்னை.
2008 ஜான்சாமுவேல். ஜி., திராவிட மொழிகளின் ஒப்பாய்வு
(அறிமுகம்)
முல்லை நிலையம், சென்னை.
2016 மகாதேவன். ச., மரபுத்தமிழ், சதுக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி)
திருநெல்வேலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக