என்.எம்.சாந்தி எம்.எ., பி.எட்.,
பட்டதாரி ஆசிரியர்
ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மேல்மருவத்தூர்.
மதுராந்தகம் தாலுக்கா
காஞ்சிபுரம் மாவட்டம்.
முன்னுரை
தமிழ் மொழி மிக நீண்ட நெடிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது உலகில் பல மொழிகள் தோன்றி வழங்கி மறைந்தொழிந்தன என மொழியியல் அறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர். அவற்றுள் ஒரு சில மொழிகள் மட்டுமே இன்னும் அழியாமல் நிலைப்பெற்றுள்ளன. அவ்வாறு நிலைபெற்ற மொழிகளிலும் சில பேச்சு வழக்கு இழந்து வெறும் இலக்கிய மொழியாக மட்டுமே காட்சியளிக்கின்றன.
கால மாற்றத்திற்கேற்பப் புத்தம்புது மொழிகளும் தோன்றி வளர்ந்து வருகின்றன செல்வாக்குடன் வளர்ந்து இன்றளவும் வாழ்ந்து விளங்குவன.
தமிழ்,
சீனம் முதலிய மொழிகளேயாகும்.
அத்தகையத் தமிழ் மொழியில் வளர்ச்சி பெற்ற அல்லது மிகத் துரித முறையில் வளர்ச்சி பெற்று வரும் கணினியிலும் இணையத்தளத்திலும்
எவ்வகையில் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம் என்பதே இக்கட்டுரையின் தலைப்பாகும்.
தமிழ் மொழி வரலாறு
பழமைக்கும் பழமையாய் இலக்கிய வளமுடையதாய் நிற்பதோடு புதுமைக்கும் புதுமையாய் கருத்துச் செல்வம் நிறைந்ததாய் என்றும் இளமைப் பொலிவுடன் விளங்குவது நமது மொழியாகும்
தமிழ்மொழியின் காலக்கணக்கு & கி.மு.20000 க்குமுன் பேச்சுமொழி
கி.மு.20000&கி.மு.12000
சித்திர எழுத்துக்காலம்
கி.மு.12000
முதல் அசை எழுத்துக்கள்
சிந்து வெளி நாகரிக வகை எழுத்துகள் கி.மு.
9000&4000 வரை நடைமுறையில் இருந்தன. அதன் பின் வட்டெழுத்துகள் கி.மு. 4000 உருவாயின. கி.மு. 2000&1000 வரை நடைமுறையில் இருந்தன. கி.மு.1000 முதல் கி.மு.300வரை உள்ள காலக் கட்டங்களில் பிற்காலத் தமிழ் பிராமி எழுத்துகள் உருவாயின. நாகரீகத் தமிழ் எழுத்துகள் கி.பி 300 காலங்களில் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது பயன்படுத்தும் தமிழ் எழுத்துகள் கி.பி. 900 மேல் படிப்படியாக மாற்றம் பெற்று வளர்ந்தது.
தமிழ் வட்டார மொழிகள்
தமிழ் மொழிப் பேச்சுவழக்கில் இடம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து தொழில் சார்ந்து வழங்கும் மொழிகள் வட்டார மொழிகள் ஆகும்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, சென்னை ஆகியன மிகவும் குறிப்பிடத்தக்கவை. உலகளவில் “22”வட்டார மொழிகள் இருப்பதாகக் கூறுவர்.
இவ்வட்டார வழக்குகளில் சமூகம், தொழில்,
பண்பாடு,
சாதி,
மதம் அந்நியமொழி சார்ந்தும் தொலைக்காட்சி, இணையம் தொடர்பாக பெருமளவுக்கு ஆங்கிலம் கலந்த சொற்கள் புழங்கி வருகின்றன.
மேனாட்டுக் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி தொடர்பில் புதிய சொல்லாக்கம் கலைச்சொல்லாக்கம் போன்ற மொழி வழக்குகள் உருவாகியுள்ளன.
வட்டார வழக்குத் தமிழ் அகராதி வீரமாமுனிவர்
(கிடைக்கவில்லை)
தமிழ்மொழிப்பாகுபாடுகள்
சமூகங்கள் வாயிலாகப் பேச்சுத் தமிழ் சாதிசார் அல்லது சமயம் சார் சமூகங்கள் வகையாகவும் சில இடங்களில் பேச்சுத் தமிழ் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடுகிறது.
அரிசனப் பேச்சுத்தமிழ்
பிராமணத் தமிழ்
முஸ்லிம் தமிழ்
நகரத்தார் தமிழ்
பழங்குடிகள் மொழிகள்
தமிழ்
செந்தமிழ்
கொடுந்தமிழ்
தமிழிசை
முத்தமிழ்
நாடகத்தமிழ்
தனித்தமிழ்
இயற்றமிழ்
ஆட்சித்தமிழ்
கொங்குத்தமிழ்
சென்னைத்தமிழ்
தமிழ் வட்டாரத்தமிழ்
யாழ்ப்பாணத்தமிழ்
மலேசியத்தமிழ்
மணிப்பிரவாளம்
மலையாளம்
பேச்சு வழக்கு பொருள்
பைய
மெதுவாக
ஓசக்க மேலே
சீனி
சர்க்கரை
கருக்கல்
சாயங்காலம்
கொல்லை வீட்டின் பின்புறம்
புருஷன் கணவன்
பெஞ்சாதி மனைவி
போன்ற பல சொற்கள் புழக்கத்தில் கையாளப்பட்டு வருகின்றன.
கணினியின் தோற்றம்
:
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அபாகஸ் என்ற கணக்கிடும் முறையைச் சீனர்கள் பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட அபாகஸ் இயந்திரமே இன்றையக் கம்ப்யூட்டரின் முன்னோடி ஆகும். லீபினிட்ஸ் கணித மேதை கண்டறிந்த இயந்திரமே முதல் கணக்கிடும் கருவியாகப் பயன்பாட்டில் இருந்தது. பிறகு சார்லஸ் பாப்பேஜ் கண்டறிந்த கருவியே பயன்படுத்தப்பட்டது.
சார்லஸ் பாப்பேஜ் என்பவர் டிசம்பர் 26-- ந்தேதி 1791 -பிரிட்டானியப் பல்துறையறிஞர், கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர்,
தத்துவவாதி,
இயந்திரப்பொறியாளர் என்று பல பாரிமாணங்களைக் கொண்டவர். இன்றையக் கணினிகள் பயன்படுத்தும் எந்திரக்கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.
1991
& இல் பிரிட்டானிய விஞ்ஞானிகள் இவர் திட்டமிட்டபடி வித்தியாசப் பொறியினை வடிவமைத்தனர். அஃது சரியாக இயங்கியமை இவரது திறமையை நிரூபித்தது.
கணக்கிடுவதற்கு முதலில் எளிதான மனச்சட்டம் உருவாக்கப்பட்டது.
கணினி உருவாக இதுவே முதல் படிவமாக அமைந்தது. பாரிசு நகரைச் சார்ந்த பிளேஸ் பாஸ்கல் என்பவர் கணக்கிடும் கருவியைக் கண்டறிந்தார். பிறகு கி.பி
1833ல்- இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் பாப்பேஜ் கண்டறிந்த கருவியே பயன்படுத்தப்பட்டது.
ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகள் லவ்லேஸ் என்பவர் கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையானக் கட்டளைகளை வகுத்தமையால் இவர் முதல் திட்ட வரைவாளர் எனப் போற்றப்பட்டார்.
தமிழ் வளர்ச்சியில் கணினியின் பயன்கள்
அகத்தியர் வரலாறும் நூலும் நமக்கு முறையான வரலாறு கிடைக்கப் பெறவில்லை. அவரது மாயவருள் ஒருவரான தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் முதல் பதிப்பாக முதலியார் சிங்கார வேலு என்பவர் தமிழ் இலக்கியத்தில் என்செக்லோபிடியா (1931)ல் செய்ததை இரண்டாம் பதிப்பாக ஆசியன் கல்விக்கழகம் புதுதில்லி(1983)
ஆண்டு புதுப்பித்தது. இவர் கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவராவர்.
இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவாக இல்லை. பதஞ்சலி முனிவர் காலத்தினும்
(கி.மு.200
) முற்பட்டவர் என்று கே.எஸ்.சீனிவாசப்பிள்ளை தனது நூலான தமிழ் வரலாறு நூலில் குறிப்பிட்டுள்ளார். 1946இல் அறிமுகப்படுத்தப்பட்ட கணினிதான் உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி எனக் கருதப்படுகிறது.
ஜுன் மாதம் 1999 ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசு, தமிழ் 99 என்ற விசைப் பலகையை அறிமுகம் செய்தது. அது ஆங்கில எழுத்துகளுடன் ஒப்பிட்டுத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்தது.
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக கணினியிலும் புதுமையான அமைப்புகள் தோன்றிய வண்ணம் உள்ளன. இன்றைய நிலையில் பல்லூடக வசதிகள் கொண்ட கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி முதலிய பல வகைகள் வந்துவிட்டன.
கணினி பயன்படுத்துவோரின் தேவை அதிகரிக்கக் கணினியின் வளர்ச்சியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன.
இப்போது தமிழ் விசைப்பலகைகள் நிறையப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தமிழிலக்கிய நூல்களின் வரலாறு மற்றும் சங்க இலக்கிய நூல்களின் வரலாறு, சிற்றிலக்கிய வரலாறுகள் தெள்ளத் தெளிவாக அறியவும் இணையம் பயன்படுகின்றன.
இணையம் அறிமுகம்
இணையம் என்பதற்கு வித்திட்டவர் ஜதன் பாஸ்டல் என்னும் அமெரிக்கர் உலகெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்க இணையம் பயன்படுகிறது. இலக்கியம், அறிவியல், புவியியல்,
கணிதம்,
திரைப்படம் என எண்ணற்ற துறைகள் பற்றி இணையத்தின் வாயிலாகச் செய்திகள் அறிய முடிகிறது. தொலைத் தொடர்பு துறையில் ஈராயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட முன்றேற்றத்தை விட கடந்த இருபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பல நூறு மடங்காகும் இன்று ஒருவரை நேரடியாகப் பார்க்காமல்
மின்னணுத்தகவல் வீட்டிலிருந்தபடியே உலகத்தைப் பார்க்க, பழக வாய்ப்பைப் பெறவும் இணையம் உதவுகிறது.
கடந்த இருபதாண்டுக் கணினிப் பயன்பாட்டில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது. இந்த உலகம் முழுமையான வலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிம்பெர்னர் லீ என்னும் இயற்பியல் வல்லுநர் 1989ஆம் ஆண்டு இணையத்தளத்திற்கு உலகளாவிய வலைப்பின்னல் எனப் பெயரிட்டார். இதனை வையக விரிவு வலை எனவும் அழைக்கலாம்.
இவ்வையக வலைப்பின்னல் பல செய்திகளை அழியாமல் பாதுகாக்க உதவுகிறது.
இணையத்தளத்தின் வரலாறு
கணினியுடன் இணைத்தள இணைப்பு படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. 1960ஆம் ஆண்டில் ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர்.
இது மிகுந்த காலச்செலவை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்திற்குள் இருக்கும் கணினிகளை எல்லாம் கம்பிச்சுருளுடன் இணைக்க ஈதர் நெட் அட்டை என்னும் சிறு பலகைப் பொருத்திப் பயன்படுத்தினர்.
இந்த இணைப்பு குறும்பரப்பு வலைப்பின்னல் எனப்பட்டது.
இந்த வலைப்பின்னல் வழியாக உலகம் முழுவதும் உள்ள கணினிகளை ஓரளவுதான் இணைக்க முடிந்தது. முழுமையான இணைப்பைப் பெறச் செயற்கைக் கோள் வழியாகப் பயன்படுத்திப் புவியைச் சுற்றி நாடுகளின் மீது வலம்வரும் விண்வெளிக்கலன்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்த உலகம் முழுமையான வலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது.
தமிழ் வளர்ச்சியில் இணையத்தின் பயன்கள்
தமிழ் வளர்ச்சியில் கணினியைப் பயன்படுத்திக் கற்கும் கல்வி. வீட்டில் இருந்தபடியே பலமொழிப்பாடங்கள் கற்றுக் கொள்ள இயலும். தொலை தூரக் கல்வியை இணையத்தின் உதவியால் கணினி வழியாகப் பலரும் கற்று வருகின்றனர்.
இணையத்தின் வாயிலாக ஒருவருக்கு ஏற்படும் ஐயங்கள், சிக்கல்கள்,
தேவைகள்,
வழிகாட்டுதல்கள் பெறவியலும். மொழியின் அடிப்படைத்திறன்களானக் கேட்டல், பேசுதல், எழுதுதல், படித்தல் எனத் தொடங்கி உயர்நிலைத் திறன்களானக் கதை, கட்டுரை,
செய்யுள்,
பாடல்,
கடிதம் சுருக்கி வரைதல் விரித்தெழுதுதல், குறிப்பெடுத்தல், அகராதித் தேடல் என அனைத்தையும் இணையம் வாயிலாகக் கற்க இயலும். உலகெங்கும் வாழும் தமிழர்க்கும்
தமிழறிய விழைவோர்க்கும் இவ்வாய்ப்பினைத் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் வழங்குகிறது. தமிழ் என்னும் இணையத்தளம் தமிழ் எழுத்துகளை எழுதவும் ஒலிக்கவும் கற்றுத் தருகிறது.
உலகளாவிய இணைய வலையின் ஒரு சிறு பகுதி
ஜே.சி.ஆர்.
லிக்லைடர் இணையத் தந்தையாக அறியப்படுகிறார்.
இணையம் என்பதன் தமிழ்ச்சொல்லாகும் இணையம் எனப்படுவது பல கணினிகளை ஒரு மையக் கணினியுடன் இணைத்துச் செயற்படுத்துவதாகும்.
தமிழும் இணையமும்
இந்நூலின் ஆசிரியர் துரை.மணிகண்டன் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் திருச்சியிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
தமிழும் இணையமும் துரை.
மணிகண்டன் என்ற முனைவர் எழுதிய நூலாகும்.
இது 11 உள்ளடக்கங்களைக் கொண்டது.
* இணையம் ஒர்அறிமுகம்
* இணையத்தின் வரலாறு
* கணினியில் இணையத்தில் தமிழ்
* தமிழ் இணையம், - மாநாடு, கருத்தரங்கம்
* இணையத்தின் தமிழின் பயன்பாடு
* இணையத்தின் தமிழ்க்கல்வி, தமிழ் மின் இதழ்கள்
* இணைத்தில் தமிழ் மின் நூலகம்
* இணையம் கணினி வழி ஆய்வுகள்
* இணையம் அகராதி
* இணையத் தமிழ் இதழ்களின் முகவரி
உலகில் நடைபெற்றத் தமிழ் இணையம் தொடர்பான நடைபெற்ற மாநாடுகள் கருத்தரங்குகள் குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளன.
* 1994 இல் டிசம்பர் மாதம் தமிழும் கணிப்பொறியும்
* 1997 இல் மே மாதம் முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு (சிங்கப்பூர்)
* 1999 இல் பிப்ரவரி மாதம் (தமிழ்நாடு, - சென்னை)
* 2000 மூன்றாம் இணைய மாநாடு (சிங்கப்பூர்)
* 2001 நான்காம் தமிழ் இணைய மாநாடு (சிங்கப்பூர்)
* 2002 செப்டம்பர் மாதம் ஐந்தாம் தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டன.
முடிவுரை :
வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினிப் பயன்பாடுகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றது.
கணினிப் பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று கிராமங்களில் கூட இணையப்பயன்பாடு என்பது மிகச் சாதாரணமாக உள்ளது. கல்வித்துறையில் கணினியின் பங்கை யாரும் மறுக்க முடியாது. துற்போது எல்லா துறைகளிலும் கணினி வழிக்கல்வி பெரிதும் வலியுறுத்தப்படுகிறது.
கணினியின் பயனை வெறும் வார்த்தைகளால் மட்டுமே விவரிக்க முடியும் என்பது மலையை முடியால் அளப்பது போன்றதாகும். எந்தத் துறையில் கணினி தன் ஆதிக்கத்தைச் செலுத்தவில்லை என்று யாராலும் கூற முடியாது. எனினும் நாணயத்திற்கு உள்ள இரு பக்கங்களைப் போலக் கணினிக்கும் நன்மை, தீமை என்று இரு பக்கம் உள்ளது. என்பதை மறுக்கமுடியாது.
எனவே நன்மையை மட்டுமே நாடினால் எதுவுமே நன்மையாகத்தான் முடியும்.
எனக்கு இத்தனை நேரமும் இத்தனைத் தகவல்களையும் தந்தக் கணினிக்கும் இணையத்தளத்திற்கும் எத்தனைத் தடவை அடித்தாலும் சரி அழித்தாலும் சரி என்னோடு ஒத்தழைத்த விசைப்பலகைக்கும் பொத்தானுக்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
மென்பொருள் பயன்பாட்டின் மூலம் வளர்ந்து வரும் மாணவச் சமுயதாயத்திற்குப் பெரும் பயனைத் தரும் என்பதில் சிறிது கூட ஐயமில்லை என்று கூறி எனது கைகளுக்கும், நினைவாற்றலைப் பெருகச் செய்ததற்கும் மிகவும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅருமையாக உள்ளது
பதிலளிநீக்குவளருங்கள். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிகவும் நேர்த்தியான கருத்து. வாழ்த்துகள்
பதிலளிநீக்குபதிவுக்கு நன்றி..
பதிலளிநீக்குஅன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ பஸஸப