முனைவர் இல.
பிரவின் பீற்றர் ஞானையா
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி
பிள்ளையன்மனை.
தூத்துக்குடி மாவட்டம்
ஒரு சமுதாயத்தின் பல தரப்பட்ட வளர்ச்சிகளும் நாகரிகமும் அந்தச் சமுதாயத்தின் முக்கிய அங்கமான மொழியின் ஆளுமையிலும் பாவனையிலும் தங்கியிருக்கின்றன. மொழி என்பது மனித உணர்வின் பன்முகத் தேவைகளைச் செயற்படுத்தும் தரகனாக வேலை செய்கிறது.
தரகன் என்பவன் ஒரு விடயத்தின் அடித்தளத்திலும் தொடர்புகளிலும் மாற்றங்களிலும் முக்கிய புள்ளியாகக் கருதப்படுபவன். அப்படியே மொழியும் மக்களின் சாதாரண அடிப்படைத் தேவைகள் தொடங்கி அம்மக்கள் வாழும் சமுதாயத்தின் கலை, கலாச்சார, அரசியல், பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பங்கெடுக்கின்றன.
இதற்கு இன்று உலகின் முக்கிய மொழியாகக் கருதப்படும் ஆங்கில மொழி உதாரணமாகும்.
பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை ஆங்கிலம் உலகிலுள்ள கணிசமான மக்களின் தொடர்பு மொழியாக இருப்பது மட்டுமன்றி தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாதத் தரகனாகவும் செயற்படுகிறது.
இந்த அணுகுமுறையில் மட்டுமன்றி,
தமிழ் மொழியின் கலாச்சார ஈடுபாடு, அரசியலில் தமிழுக்கு உள்ள இன்றைய ஆளுமையும் அதன் எதிர்கால இருப்பும் பற்றிப் பேசுவது தமிழ் ஆர்வலர்களால் தவிர்க்க முடியாத விடயமாகும். தமிழின் உயர்வுக்கும் வளர்ச்சிக்குமாக ஒன்றுபட்டு இணையும் சில அமைப்புகளின் முயற்சிகளாலும் தனிப்பட்டவர்களின் ஊக்கங்களாலும்,
தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றிய ஒரு ஆழமான சர்ச்சைகள் நடக்கின்றன. அந்த முயற்சிகளுக்கு,
நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தடைகள் வரும்போதும்,
மொழியில் ஆர்வம் கொண்டுள்ள புத்திஜீவிகளின் சிந்தனைக்கு இருட்டடிப்பு நடப்பதாலும் பல ஆக்கப்பூர்வமானப் படைப்புக்கள் வெளிவருவது,
கருத்தரங்கங்கள் நடைபெறுவது, புதிய சிந்தனைகள் துளிர்ப்பது, சிறந்தப் படைப்புக்கள் வெளிவருவது என்பனத் தடைபடுகின்றன என்பதையும் மனதிற் கொள்ளவேண்டும்.
ஒரு மொழி என்பது, ஒரு சமுதாயத்தின் உயிர்நாடியாக இருக்கும்போது, சில குறுகிய கால நலன்களுக்காக அந்த மொழியைக் குறிப்பிட்ட காரணத்திற்காக மட்டும் பாவனையில் கொண்டுவருவதால் அம்மொழி மக்களின் தேவையிலிருந்து தானாகவே மறைந்து விடும் என்பதற்கு,
ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த பல மொழிகள் இன்று மக்களுக்குத் தெரியாத சரித்திரமாகப் போனவை ஒரு சில சான்றுகளாகும்.
காலம் காலமாகப் பல அரசியற் சிந்தனையாளர்கள்,
சமுதாய மாற்றங்களுக்கானத் திட்டங்களைத் தங்கள் படைப்புக்கள் மூலம் மக்கள் மனதில் படைத்திருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் பல் விதமான அடக்கு முறைகளுக்கும்,
எதிரான ஆயதமாகச் செயற்பட்டவை.
சிந்தனையாளர்களின் பேனாக்களாகும். அவற்றின் தூய படைப்புக்கள் தமிழின் எதிர்காலம் பற்றி எழுதுவது இக்காலத்தின் மிகப்பெரியத் தேவையாகும்.
இன்று வலிமைபெருகிய சக்திகளான,
தொழில் விஞ்ஞான வளர்ச்சிகளாலும்,
தமிழ்பற்றிய பெருமை தெரியாத அறியாமையினாலும் தமிழ் ஒரு தேக்கநிலையை அடைவது தவிர்க்க முடியாது. வலிமையுள்ள ஆதிக்கச் சக்தி, தான் வெற்றி கொண்ட மக்களுக்குத் தங்கள் மொழி, கலாச்சாரத்தைத் திணிப்பதுபோல் (பழைய காலத்தில் இலத்தீன், சமஸ்கிருதம் என்பன இருந்ததுபோல், பதினைந்தாம் நூற்றாண்டுக்காலக் கட்டத்தில் ஸ்பானிஷ், போர்துக்கிஸ் மொழிகளும், நவீனக் காலத்தில் ஆங்கிலமும் இருக்கின்றன.
இன்றையக் காலகட்டத்தில் தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் பல சோதனைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது.
இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பல்லாயிரக்கணக்கான வருடங்களாகத் தமிழ்மொழி பல மாற்றங்களுக்கு முகம் கொடுத்தது போல, இன்னும் பல உத்வேகத்துடன் முகம் கொடுக்குமா என்பதை இக்கட்டுரை ஆராயவிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்து பாவனையிலிருக்கும் மொழிகளில் தமிழ் மொழி முன்னிடத்தை வகிக்கிறது.
பழைய மொழிகளான இலத்தின், சமஸ்கிருதம்,
பாலி போன்ற மொழிகள் காலக்கிரமத்தில் பழக்கத்திலில்லாத மொழிகளாக மாறிப் போய்கொண்டிருக்கும்போது தமிழ் மொழி ஒரு தனித்துவமான ஆளுமையான மொழியாக வளர்ந்து கொண்டிருக்கிறதா,
அல்லது தமிழ் மொழி என்பது ஒரு அரசியல் வலிமையான ஆயுதமாகக் கணிக்கப்படுகிறதா அல்லது, இன்றையக் காலக் கட்டத்தில், இணையத்தளத்தின் மூலமும், அத்துடனானப் பல்வேறு சமூகத் தொடர்புச் சாதனங்களாலும் தமிழின் பாவனையும் பதிய வடிவெடுத்துத் தன் வடிவைக் காலத்திற்கேற்றபடி மாற்றிக் கொள்கிறதா போன்றப் பல கேள்விகளுக்குப் பதில் தேடுவது இலகுவானக் காரியமல்ல.
அத்துடன் காலம் காலமாக மக்கள் இடம்பெயர்வதும் தங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் தொடர்ந்து வளர்ப்பதும் ஒரு மொழி, அதனுடைய பன்முகத்தன்மை வளர்ச்சியைக் காணும் ஒரு பரிமாண மாற்றமாகக் கருதப்படுகிறது.
இன்று உலகம் ஒரு சிறியக் கிராமமாக மாறிக் கொண்டிருக்கிறது.
தொழில் நிமித்தம், அரசியற் காரணங்கள்,
தொடரும் உள்நாட்டுப் பிரச்சினைகள் போன்றப் பல காரணிகளால் மக்கள் இடம்பெயர்கிறார்கள். ஆங்கிலம் மட்டும் என்ற ஒரே ஒரு மொழி மட்டும் பாவனையிலிருந்த லண்டன் போன்ற நகரத்தில் இன்று 330 மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.
தமிழ் மக்களும் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தேவைகளும் வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் இன்றியமையாத மொழியை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இன்று இந்தியாவில் அரசக் கரும மொழியாகவிருக்கும் இருபத்திரண்டு மொழிகளில் தமிழும் ஒரு மொழியாகும். 2004 ஆம் ஆண்டு அன்று இந்திய ஜனாதிபதியாக இருந்த அப்துல் காலம் அவர்களாலும், அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதியாலும் தமிழ் ஒரு செம்மொழி என்று பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் அறுபது கோடி மக்களாலும் ஒட்டுமொத்த உலகிலும் எழுபது கோடி மக்களாலும் தமிழ் பேசப்படுகின்றன.
தமிழ் மொழியிலிருந்து தழுவி வந்த (மலையாளம் போன்றத் திராவிட மொழிகள்) மொழியைப் பேசுபவர்களையும் ஒன்று சேர்த்தால் நூற்றுப் பத்துக்கோடிக்கு மேலாகலாம் என்று கணிக்கப்படுகிறது.
இந்தியாவிலும் இலங்கையிலும் பத்தொன்பது பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பீடங்கள் உள்ளன. அத்துடன் உலகின் பல முக்கிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா போன்றப் பல நாடுகளின் பல்கலைக்கழகங்களும் தமிழின் முதுமைக் கலாச்சாரத்தை ஆராய்கின்றன.
தமிழ் பேசும் மக்கள் இன்று உலகின் பல பகுதிகளிலும்
(கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேலான நாடுகளில்) வாழ்கிறார்கள். அத்துடன் தமிழ்நாடு,
பாண்டிச்சேரி,
இலங்கை,
மலேசியா,
சிங்கப்பூர்,
அந்தமான் தீவுகளில் தமிழ் உத்தியோக மொழியாகப் பாவிக்கப்படுகிறது.
தமிழ்மொழி இந்தியாவின் ஆதிக்குடிகளானத் திராவிட மக்கள் பேசிய முக்கிய மொழியாகும். தமிழரின் புராதன வரலாறானத் திராவிடம் பற்றிய ஆராய்ச்சிகள் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் மிகவும் முக்கியமாக ஆராயப்படுகிறது. இவை, தமிழின் புதிய பரிமாணத்தையுண்டாக்கும் காரணிகளாக அமைகின்றன.
இந்தியாவின் ஆதிக்குடிகளான திராவிட மக்கள், ஆரியரின் வருகையை (கிட்டத்தட்ட கி.மு.2000 வருடங்கள்) ஒட்டித் தென்பகுதிக்கு மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளிலும் சிதறி வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்நியர் வருகையால் மக்கள் இடம் பெயர்வது, அவர்களது கலாச்சாரம், மொழி என்பன வேறுபடுதல் அல்லது மாறுபடுதல், சேர்ந்து போதல், சோர்ந்து போதல் என்பன இன்றியமையாதன என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். உரோமரின் வருகையால்,
பிரித்தானியத் தீவின் பழைய கலாச்சாரமும் ஒழிக்கப்பட்டது.
ஸ்பானியாஜீன் ஆதிக்கத்தால் தென் அமெரிக்க ஆதிக் குடிகளான மாயன் இன மக்களின் மொழி, கலாச்சாரம் நிர்மூலமாக்கப்பட்டது.
போர்துக்கேயரால் வெனிசுவேலா போன்ற நாடுகளின் கலாச்சாரம் அழிக்கப்பட்டது. ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பால் ஆஸ்திரேலிய, அமெரிக்க, தாஸ்மேனிய, நியூசிலண்ட் நாடுகளின் ஆதிக்குடிமக்கள் வாழ்க்கைமுறையும் கலாச்சாரமும் உருக்குலைந்தன.
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக, இந்தியாவுக்கு வருகை தரும் அன்னியரால் சிதறிய இந்தியாவின் ஆதிமக்களான திராவிடரின் மொழிக் கலாச்சாரத்தில் பல்வேறு விதங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன.
காலக்கிரமத்தில்,
பற்பலக் காரணங்களால் எந்த மொழியிலும் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அதே போல் தமிழ் மொழியிலும் பல மாற்றங்கள்,
பிரிவுகள் ஏற்பட்டன. அறிஞர் கமில் ஷிவலபில் (17.9.1927 & -17.01.2009, திராவிடம்,
சமஸ்கிருதம் போன்றவற்றின் ஆதிமூலங்களை ஆராய்ந்தவர்) அவர்களின் கருத்துப்படி,
தமிழர்கள்,
கற்காலக் காலக்கட்டத்தில் (பத்தாயிரம் வருடங்களுக்கு முந்தையக் காலக் கட்டம்), அதாவது மனித இனம் கற்களால் ஆயுதம் செய்து தொழில் வளர்ச்சிபெற்ற
(நியொலித்திக்)
கட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்.
அதாவது,
மனித நாகரிகம் வளர்ந்த காலம் மத்திய தரைக்கடலை அண்டிய நாடுகளின் வளர்ச்சியும் கிட்டத்தட்ட இதேகாலக் கட்டமாகும். எனவே, தமிழின் மொழியின் ஆரம்ப வயது கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்கள் என்பது பெரும்பாலும் பொருத்தமாக இருக்கிறது.
இன்றைக்குக் கிட்டத்தட்ட 4 அல்லது 5 ஆயிரம் வருடங்களுக்கு முன் படிப்படியாக நடந்த அந்நியர்களின் வருகையால் பிளவுப்பட்ட திராவிட மக்கள், மூன்று பெரும் பிரிவானார்கள். அத்துடன் அவர்களின் ஆதித்திராவிட மொழியும் பல மாறுதல்களை எதிர்நோக்கியது. ஆதித் திராவிட மொழி, இன்றையக் காலக் கட்டத்தில் கிட்டத்தட்ட முப்பத்தைந்து சிறு பிரிவுகளாகக் கிடக்கின்றது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தென்பகுதித் திராவிட மொழிப்பிரிவுகள், தமிழ் மலையாளம்,
கொடகு,
கோடா,
ரோடா,
கன்னடா,
துலு என்று பேசப்படுகிறது.
மத்திய பகுதிக்குச் சென்ற திராவிடமொழி, தெலுங்கு, கோண்டி, கோண்டா,
பெங்கோ,
மன்டா,
குயி,
குவி,
கோலம்,
நாய்க்கி,
பார்ஜ்,
காட்பா,
என்று சொல்லப்படுகிறது. வடக்கில் பாஜீந்த திராவிட மொழி, குருக்,
மால்ரே,
பராஹயி என்று பிரிந்தனவாம்.
இப்பிரிவுகள் ஒரேயடியாக நடக்காமல் பற்பல கால கட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதலடைந்தன.
உதாரணமாக,
மலையாளம் ஒரு ஆளுமையான மொழியாக 13ம் நூற்றாண்டில் பாவனைக்கு வந்தது. திராவிட மக்களும் பற்பல பிரிவாகி பல தரப்பட்ட வாழ்க்கைமுறைகளையும் உள்வாங்கிக் கொண்டார்கள்.
நாடுநகர்நோக்கி வந்தவர்கள், கிராமத்திலேயே வாழ்பவர்கள்,
காடுகளை அண்டி வாழ்பவர்கள் என்று மூன்று பெரிய கலாச்சாரப் பிரிவு உருவெடுத்தது,
நாகரிகமும் அதை ஒட்டி வளர்ந்தது. தமிழ் நாகரிகம், எகிப்திய நாகரிக காலத்தில் வளர்ந்திருந்தது என்பதற்குத் தற்காலத்தில் கண்டெடுக்கப்படும் தொல்பொருட்கள் சாட்சியங்கள் சொல்கின்றன.
பண்டைத் தமிழரின் வாழ்வும் வரலாறும், தமிழர்கள் மூன்று சங்கங்களை வைத்துத் தமிழ் வளர்த்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
அறிஞர் ஷெலபிலவின் கூற்றுப்படி,
தமிழர்கள் அப்படி வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. பூம்புகார் நகர்
11000 வருடங்களுக்கு முன்னிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதேகால கட்டத்தில் உலகின் வேறு ஒரு பகுதியில் வாழ்ந்த அட்லாண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த அட்லாண்டிக் மக்களைக் கடற்கோள் அழித்துவிட்டதாக கிரேக்க அறிஞர் பிளாட்டோ எழுதியிருக்கிறார்.
அது பற்றிய ஆராய்ச்சிகள் இன்று மேற்கத்திய தொல்பொருள் வல்லுனர்களால் ஆராயப்படுகிறது.
இப்படியான தொன்மையான தமிழ் மொழி எதிர்காலத்தில் பாவனையற்ற மொழியாகி விடுமா அல்லது ஒட்டுமொத்தமாக அழிந்து விடுமா என்ற கேள்வி அங்குமிங்குமாக எழுப்பப்படுகிறது.
இன்று உலகில் கிட்டத்தட்ட ஆறாயிரத்துக்கும் மேலான மொழிகள் பேசப்படுகின்றன.
பெரும்பாலான மொழிகள் ஆப்பிரிக்காவின் பல்வகை மக்களாற் பேசப்படுகிறது. ஒரு மொழியின் அல்லது ஒட்டுமொத்தமாக இன்று பாவனையில் இருக்கும் பல மொழிகளின் மூலங்கள் பலவாக இருக்கலாம்.
மனித இனம் நாகரிகமடைந்து மொழி வளர்ச்சி பெற்ற காலத்தில் புழக்கத்திலிருந்த நாற்பதுக்கும் மேலான உலகின் ஆதி மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு குறிப்பிடுகிறது. அவற்றிற் சில மொழிகள் கமொஜீயன், எகிப்தியன்,
ஹிபுறு,
பினோசியன்,
அரமிக்
(இயேசு பேசிய மொழி) இந்தோ யூரோப்பியன், கிரேக்க மொழி,
பழைய பாரசீக மொழி, லத்தின்,
பழைய வடக்கு அரபு மொழி, பழைய தென்பகுதி அரபுமொழி, ஜெர்மானிக், முதிய சீன மொழி, பழைய தமிழ் மொழி என்பன சிலவாகும்.
ஆனால் திராவிட அறிஞர்கள் தமிழ் மொழி பழக்கத்திலிருந்த காலத்தை மிக மிகத் தொன்மையானதாகக் கருதுகிறார்கள்.
(50000 வருடங்கள்), தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தடையாயிருந்த சமஸ்கிருதம், கி.மு.2000 ஆண்டு
(இந்தியாவுக்கு ஆரியர் வருகை) கால கட்டத்தில் இந்து- ஐரோப்பிய மொழிகள் என்ற தொடர்பில் பாரசீக (ஈரான்)
நாடுவழியாகப்
(இந்தியாவுக்கு)
பரவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
தமிழ் மொழியின் வளர்ச்சியின் பல பரிமாணங்களை ஆராய்பவர்கள், கி.மு.300 தொடக்கம்,
கி.பி.
700 வரைக்குமுள்ள காலத்தை இலக்கியத் தமிழ்காலம் என்றும் கி.பி.700 தொடக்கம் 1600 வரையுள்ள கால கட்டத்தைப் பக்தித் தமிழ் காலக் கட்டமென்றும் 1600 தொடக்கம் இன்று வரை வளரும் தமிழைத் தூயதமிழ்காலம் என்றும் வரையறுக்கிறார்கள்.
இக்காலக் கட்டத்தில், தமிழ், இலக்கிய, பக்தி, படைப்புகளிலிருந்த சமஸ்கிருதத்தைக் களையப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன என்று தெரிகிறது.
தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றிப் பேசும்போது,
ஒவ்வொரு வினாடியும் அளவிடமுடியாத விதத்தில் வளர்ந்து வரும் தொழில் விஞ்ஞானத்தில் ஆங்கிலம், சீனம்,
ஜப்பான் போன்ற மொழிகள் முன்னிடம் வகிக்கின்றன.
அந்த நோக்கிற் பார்க்கும்போது தமிழ்மொழியின் வளர்ச்சியும் முன்னேற்றமும் எப்படி இருக்கும் என்பது தமிழார்வம் கொண்டவர்களின் கேள்வியாக இருக்கிறது.
இன்று பாவனையிலிருக்கும் மொழிகள் பல தடுக்க முடியாதளவு அழிந்து கொண்டிருக்கின்றன. 28 விகிதமான மொழிகள் கிட்டத்தட்ட நூறு மக்களால் மட்டும் பேசப்படுகிறது.
சில நாடுகளிலுள்ள சிறுபான்மை மக்களின் மொழிகளை, அந்நாட்டின் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பெரும்பான்மை அரசுகள் அழித்துக் கொண்டு வருகின்றன.
அத்துடன் இன்று, தமிழ் மொழிக்கு மட்டுமல்லாது பல மொழிகளுக்கும், அதிகளவில் முன்னேறிக் கொண்டு வரும் தொழில், விஞ்ஞான, ஊடகப் பெருக்கங்களுடன்நின்று பிடிக்க முடியுமா என்பதாகும். இன்றையக் காலக் கட்டத்தில் தொழிற்துறையில்,
உலகம் பரந்த விதத்தில் முன்னிற்பது ஆங்கில மொழியாகும். ஆனால் மக்களின் பாவனை மொழியுடன் ஒப்பிடும்போது மான்டரின்
(சீனா)
மொழியை
1025 கோடி மக்களும், ஸ்பானிய மொழியை 390
கோடி மக்களும் ஆங்கிலத்தை
328 கோடி மக்களும், ஹிந்தி மொழியை 405
கோடி மக்களும், அராபிய மொழியை 452
மக்களும்,
வங்காள மொழியை 250 கோடி மக்களும் பாவனைப்படுத்துகிறார்கள். அதில் தமிழ் மொழியைப் பேசுபவர்கள் ஒட்டுமொத்த உலகிலும் 74 கோடி இருக்கிறார்கள்.
தமிழின் எதிர்காலம் முச்சங்கம் வைத்து வளர்த்த தமிழ், இயல், இசை நாடகம் என்ற பெயரில் பன்முக வளர்ச்சியைக் கொண்ட தமிழின் எதிர்காலம் என்ன என்பது தான் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஒரு மொழி வளர, அந்த மொழிக்கு உரிமை கொண்டாடும் மக்கள் அதைப் பேச வேண்டும், படிக்க வேண்டும், பல கலைகள் மூலமும் பரப்ப வேண்டும்.
தமிழ் ஆதிகாலத்தில் அரசர்களின் உதவியுடன் வளர்க்கப்பட்டது.
புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்து பாடுவதன் மூலம் தமிழை வளர்த்தார்கள்.
அன்றைய ஆண் பெண் புலவர்களால் எழுதப்பட்ட அகநானூறு, புறநானூறு போன்றவற்றால் அன்றையச் சமுதாயத்தின் நிலையை இன்றைய மக்கள் அறியும் வழியைத் தந்திருக்கிறார்கள்.
திருவள்ளுவரின் திருக்குறள் அறப்பால், பொருட்பால்,
காமத்துப்பால் என்ற முப்பகுதிக் குறள்களால் தமிழர் கடைபிடித்த வாழ்வு நியதியை உலகுக்குக் காட்டியிருக்கிறார். தமிழ்நாட்டில் மக்களால் கடைப்பிடிக்கப்பட்ட மதங்களான சைவம், வைணவம்,
பௌத்தம்,
ஜைனம் என்ற பல மதத்தைச் சேர்ந்தவர்கள்,
பாகுபாடற்ற விதத்தில், தமிழைப் பல விதத்திலும் வளர்ந்திருக்கிறார்கள்.
சித்த வைத்தியமும், யோகாசனமும், பரதமும் தமிழர் கலைகள் இவற்றை எங்கள் மூதாதையர் அழகிய தமிழில் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
எழுத்து,
இலக்கணம்,
இலக்கியம்,
பக்தி,
பரதம்,
வைத்தியம்,
தத்துவம் என்ற பற்பலப் பிரிவுகளைக் கண்டது தமிழ் மொழி.
எழுத்துவடிவில் வளர்ந்த மொழிகள் வாய் மொழியாக வளர்க்கப்பட்டன. இலத்தீன், சமஸ்கிருதம் போன்றவையும் இப்படியே வளர்ந்தன. அத்துடன் மொழிகள் இசைமூலமும், நாடகங்கள், கிராமியப் பாடல்கள், நாட்டுக் கூத்துக்கள், கதாப்பிரசங்கங்கள் போன்றப் பல வழிகளாலும் வளர்க்கப்பட்டன.
தமிழின் பெருமை, சித்திரம், சிற்பங்களில் பதிக்கப்பட்டது.
இந்தியா மட்டுமல்ல, தமிழ்க்கலையின் பிரதிபலிப்புக்கள் அண்டைநாடுகள் பலவற்றிலும் தடம் பதித்திருக்கின்றன.
ஆனால் இன்று தமிழ் பிறந்த தமிழ்நாட்டில் தமிழுக்கு ஓர் ஆளுமையான இடம் கிடையாது. ஆளும் மொழியாகத் தமிழ்நாட்டில் இருந்தாலும் பெரும்பாலான தமிழ் மக்களின் கல்வி, தொழில் மொழியாக இருப்பது ஆங்கில மொழியாகும்.
தமிழ் மொழியைத் தமிழ் மக்களிடம் பரப்பும் முக்கியப் பாத்திரம் வகிக்கும் தமிழ் சினிமா, தமிழ் மொழியையோ அல்லது உண்மையானத் தமிழ்க்கலாச்சாரத் தத்துவங்களை முன்னெடுக்கின்றனவா அல்லது தமிழ்ச்சினிமா என்ற பெயரில் கிடைக்கும் ஆதாயத்தை முன்னெடுக்கிறதா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.
உலக விஞ்ஞான, தொழில் வளர்ச்சியின் உயிரோட்டமாக இருக்கும் ஆங்கிலமே, பல விதங்களிலும் வளர்ந்து சீன மொழி, அல்லது ஸ்பானிய மொழிக்குத் தாக்குப்பிடிக்க முடியாத காலமும் வரலாம். ஒரு காலத்தில் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் மேலாகப் பாவனையிலிருந்த எகிப்திய மொழி இன்று உருமாறியிருக்கிறது. அப்படியே மேற்குலக ஆளும் மொழிகளாகவிருந்த, இலத்தீன், கிரேக்கம்,
என்பனவும் இன்று ஆளுமையான மொழியாக இல்லை.
15ஆம் நூற்றாண்டில் அச்சுக் கூடங்கள் வரும் வரைக்கும் இன்று பாவனையிலிருக்கும் ஆங்கில மொழி, பல தரப்பட்ட பிராந்திய மொழிகளாகப் பிரிவுபட்டிருந்தது. லண்டனை மையப்படுத்திய ஆங்கில மொழியின் ஆதிக்கம் அச்சு மொழியேறிப் பிரபலமடைந்தது. அதுபோலவே, தமிழும் பல தரப்பட்ட பிராந்தியப் பேச்சு வழக்குகளைக் கொண்டிருந்தாலும்,
இயந்திரகால முன்னேற்றத்தால் தமிழும் பல தரப்பட்ட விதத்தில் வளர்ச்சியடைந்தது.
ஆதிகாலத்திலிருந்து,
இதிகாசங்களும்,
புராணங்களும் தமிழ், படித்தவர்களால் பொது மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டன. தமிழ், படித்தவர்களால் கோயில்களில் இதிகாசங்களும் புராணங்களும் கதாப்பிரசங்கங்களாகச் சொல்லப்பட்டன. கடந்த நூற்றாண்டில் நடந்த சினிமா வளர்ச்சியால் தமிழ்ப்படங்கள் இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்ட படங்களைத் தயாரித்துத் தமிழைச் சினிமாவுடன் இணைத்து விட்டார்கள். இன்று எழுத்து,
இயல்,
இசை,
நாடகத் தமிழைவிடச் சினிமாத் தமிழ்தான் மக்களிடம் பரவியிருக்கிறது. இந்த வளர்ச்சியால்,
செந்தமிழ் அருகிப்போய் ஆங்கிலம் கலந்த தமிழை இளம் சிறார்கள் பழகு தமிழாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த நூற்றாண்டில், அரசியற் காரணங்களால் பாரதியாரால் எழுச்சி பெற்ற புரட்சித்தமிழ் இன்று, பற்பல காரணிகளால் பலதரப்பட்ட விதமான பாவனைக்கு ஆளாகியிருக்கிறது.
இன்றையச் சமுதாயம் கிட்டத்தட்ட ஒரு வியாபாரச் சிந்தனையுள்ள சமுதாயமாக மாறிக் கொண்டிருக்கிறது.
கிழக்கு நாடுகளில் ஆழமாகப் பதிந்திருந்தப் பழைய பண்பாட்டுச் சிந்தனைகளை இன்றைய ஆதாயமுள்ள பொருளாதாரத்தின் அடிப்படையாக்குவது இன்றியமையாததாக மாற்றப்படுகிறது.
யோகாசனத்தை மேற்கு நாட்டார் உரிமை கொண்டாடுகிறார்கள்.
அதனால் மொழியும் அந்தப் பொருளாதார சிந்தனையை மீற முடியாதது என்பதற்கு இன்று பெரும்பாலான மக்களால் அணுகப்படும் ஆங்கிலக்கல்வியை உதாரணம் காட்டலாம்.
ஆங்கிலக்கல்வி என்பது விலை மதிப்பற்ற மூலதனமாக இருப்பதால் சிறு நாடுகளில் உள்ள படித்த இளைஞர் கூட்டம் அக்கல்வியை முன்னெடுக்கிறது. இந்தியாவில்,
திராவிடக் கட்சிகள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. இந்தியாவின் தெற்கு முனையில் முப்பெரும் கடல்களும் மோதிக் களிக்கும் கன்னியாகுமரியில் தமிழ்த் தெய்வப்புலவர் திருவள்ளுவர் தலைநிமிர்ந்து நிற்கிறார். தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய விடயமிது. இன்று கவியரசு வைரமுத்து போன்றோர் தமிழுக்குத் தங்கள் கவிதைகள் மூலம் உலகப் பெருமை சேர்க்கிறார்கள்.
கடந்த நூற்றாண்டில் பல பத்திரிகைகள் பல தரப்பட்ட விதமான மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்தன. பல தரப்பட்ட அரசியற் கருத்துக்கள், சமுதாயக் கருத்துக்கள்,
ஜனநாயக முறையில் பகிரங்கமாக எழுதப்பட்டன; விவாதிக்கப்பட்டன. இன்று பெரிய தொகையளவில் பத்திரிகைகள் வெளிவந்தாலும் அவற்றை வாங்கிப் படிப்பவர்கள் குறைவாகும்.
இன்று தமிழ் மட்டுமல்லாது,
எல்லா மொழிகளுமே புதிய அவதாரங்களை எடுக்க வேண்டியிருக்கிறது. இயல். இசை. நாடகத் தமிழ் என்று வளர்ந்த தமிழ் இன்று, இண்டர்நெட் தமிழ், பேஸ்புக் தமிழ், மொபைல் தமிழ், வீடியோத் தமிழ், சினிமாத் தமிழ், சீடித் தமிழ், விளம்பரப் பலகைத் தமிழ், என்ற பல அவதாரங்களை எடுத்திருக்கின்றன.
தமிழின் பாவனையும், உருவாக்கமும் அதிவேகமான முறையில் மாறிக்கொண்டு வருகின்றன. இவை தவிர்க்க முடியாத மாற்றங்களாகும்.
ஆனால் ஒரே ஒரு விடயம் மட்டும் மாறாமல் இருக்கும்.
அதாவது,
ஆய்வுத் தமிழின் ஆளுமை மாறாது அதை உணர்ந்தவர்கள் இன்று தமிழைப் பன்முக நோக்கில் ஆய்வு செய்கிறார்கள்.
எதிர்காலத்தில் தமிழின் நிலை என்னவாகவிருக்கும் என்ற கேள்விக்குப் பலர் பயப்படுவதுபோல் தமிழ் அழிந்துவிடப் போவதில்லை.
கடந்த பத்தாயிரம் வருடங்களாகக் கடற்கோள் தொடக்கம் எத்தனையோ அந்நியரின் தாக்கங்களுக்கு நின்று பிடித்த தமிழ் இன்று வளரும் புதிய தொழில் விருத்திகளாலோ விஞ்ஞான மாற்றங்களாலோ
அழிந்துவிடப் போவதில்லை. ஆனால் மற்ற மொழிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு வளரப் பல புதிய முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.
இன்று,
தமிழ் பற்றிய ஒரு புதிய உணர்வு உலகம் பரந்த தமிழர்களிடையே பரந்து காணப்படுகிறது.
பதிவுக்கு நன்றி..
பதிலளிநீக்குஅன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ ரறறர