முனைவர் த.க.
ஜாஸ்மின்சுதா,
உதவிப் பேராசிரியர்,
தமிழியல் துறை,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி,
முன்னுரை
ஆதிகாலத்தில் மனிதன் சைகை மொழியாலேயே தன்னுடைய கருத்துக்களை உணர்ச்சிகளை வெளிப்படுத்தினான். அதன் பின்பு ஒலி எழுப்பப்பட்டு அந்த ஒலிக்கு வரிவடிவமும் கொடுக்கப்பட்டது.
முன்பு கதைகள் நிறைய சொல்லப்பட்டன. அவ்வாறு சொல்லப்படும் கதைகளில் வட்டார வழக்குச் சொற்கள் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அத்தகைய வட்டார வழக்குச் சொற்கள் தற்போதைய சிறுகதைகளிலும் சில எழுத்தாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்தகைய நிலை சிறுகதைகளில் எதிர்காலத்தில் நிலைத்திருக்குமா என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
மொழி அறிவு
மொழியைப் பற்றிப் பேசுவதும்,
மொழியைப் பற்றித் தெரிந்து கொள்வதும் வேறு. முந்தையது செய்திறன். பிந்தையது அறிதிறன் மொழியைப் பற்றிப் பேசும் போதும் எழுதும்போதும் பிழைகள் நேரலாம். எது பிழை, எது சரி என்று உணரும் திறமே அறிதிறன் அதனைப் பெறுவதே மொழி அறிவு
பேச்சுமொழி
பேச்சு வேறு, மொழி வேறு, பேச்சு என்பது தனியொருவன் அல்லது தனிப்பட்ட சிலருக்கு உரியது. மொழி என்பது மக்கள் கூட்டமொன்று கருத்துப் பரிமாற்றத்துக்காக ஏற்படுத்திக் கொண்ட ஓர் அமைப்பாகும். பேச்சு காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள், இனத்துக்கு இனம் வேறுபடும்.
ஆனால் மொழி வேறுபடுவதில்லை.
மொழி உயிர் வாழ்வதே பேச்சுமொழியால் தான் பேச்சுமொழியுடன் உள்ள தொடர்பு இல்லாமலாகிவிட்டால் பிறகு மொழி இறந்த மொழியாகிவிடும்.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மொழியின் நிலைமையைப் புரிந்து கொள்ள அக்காலக்கட்ட வாய் மொழியைப் பற்றியும்,
எழுத்து மொழியைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் மொழியும் இலக்கியங்களும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகின. அன்று வரை இருந்த செய்யுள் வடிவம் மாறி உரைநடை வடிவம் தமிழ்மொழிக்குக் கிடைத்ததும் இக்காலக் கட்டத்தில் தான்.
புதிய மாற்றங்களின் சிற்றலைகள் தமிழர் வாழ்வைத் தாக்கிய போது தமிழ் மொழியிலும் இயல்பாக வந்து கலந்த சொல்லாக்கங்களைப் போல் தற்கால கணினி யுகத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
சான்றாக இணையம், இணைய தளம் போன்ற சொற்களைக் கூறலாம்.
பழங்காலத்தில் மனிதன் கதைகளைச் சொல்லும் போது பிற மொழி கலப்பின்றி தான் பழகிய பேச்சு மொழியிலேயே கதைகளைச் சொல்லியிருக்கிறான். புராணங்களில் வருகின்ற கிளைக்கதைகளும் அவ்வாறே ஆனால் அனைத்தும் செய்யுள் வடிவில் அமைந்திருக்கின்றன.
மணி பிரவாள நடை புகுந்ததன் விளைவாகப் பிற மொழிச் சொற்கள் அதிகமாக இலக்கியங்களில் ஊடுருவத் தொடங்கின. காப்பியங்கள் முதல் தற்காலம் வரையிலான நாவல் போன்ற இலக்கியங்களிலும் இத்தன்மையை உணர முடிகிறது.
குறிப்பாக ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகள் சார்ந்த சொற்கள் புனை கதை இலக்கியங்களில் இழையோடுவதைக் காணலாம்.
இன்றைய இலக்கியப் படைப்பாளிகள் மொழி நடையில் செய்த மாற்றங்கள் பழகித் தேய்ந்த வார்த்தைகளை வேண்டுமென்றே ஒதுக்கிப் படைப்பின் ஓட்டத்திற்கேற்பத் தமிழ் மொழியில் நவீனப்படுத்தல் முயற்சிகளை மேற்கொண்டனர்.
தமிழ் பல்வேறு நாடுகள் மக்களுடன் ஊடுருவித் தன் தனித்தன்மையைப் பண்பாட்டை இந்நாள் வரைப் பேணிக்காத்து வருகின்றது. நவீன காலத்தில் தமிழ் மொழியில் நாள்தோறும் புதிய புதிய சொல்லாக்கங்கள் பொருளுக்கும், தொழிலுக்கும் ஆங்கிலம் போன்ற வெளிநாட்டு மொழி சார்ந்த கருத்துப் பரிவர்த்தனைக்கும் ஏற்ப உருவாகிக் கொண்டிருக்கின்றன.
புனைகதைகளில் வட்டார வழக்குச் சொற்களில் ஆதிக்கம்
ஒரு குறிப்பிட்ட வட்டார மக்களை மற்ற வட்டாரங்களில் வாழும் மக்களினின்று வேறுபடுத்திக் காட்டுகிறது. அவா;களது பேச்சுமொழி, பேசுவதைப் போல் எழுத வேண்டும் என்ற உணர்விலிருந்து தோன்றியது தான் வட்டார இலக்கியம் வட்டார வழக்குச் சொல், இலக்கியங்களைத் தஞ்சை வட்டாரம், கரிசல் வட்டாரம், கொங்கு வட்டாரம், குமரி வட்டாரம், நெல்லை வட்டாரம், என பல நிலைகளில் பிரிக்கலாம்.
பாமா,
பூமணி,
கி.
ராஜநாராயணன்,
போன்ற பல எழுத்தாளர்களின் புனைகதைகளில் வட்டார வழக்குச் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
தற்போதைய புனைகதைகளில் ஓர் இனம், ஒரு சமூதாயம், ஒரு தொழில், ஓர் இடம் சார்ந்த வட்டார வழக்குச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
‘ஆழி சூழ் உலகு’ நாவலில் பரதவர் குல மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் போது அவர்களது தொழில் சார்ந்த சொற்களைப் பயன்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது.
சான்றாக எத்தனங்கள், போட்டு, மடுப்பெட்டி, துவி, கானாக்காரான்,
மன்னாடி,
சாம்பாடிமார்,
சம்மாட்டி,
கம்மரக்காரர்,
வட்டக்காரர்,
கச்சான்,
மாசா விரலாம், வேளம், வாரிக்கல் போன்றப் பல சொற்களைப் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டலாம்.
புனைகதை எழுத்தாளர் குமார செல்லா குமரி மாவட்ட வட்டார வழக்குச் சொற்களை உட்படுத்தி புனைகதைகளை எழுதியுள்ளதைப் பார்க்கலாம்.
சான்றாக,
ஊட்டுப்புரை,
எடுத்தி,
எழுப்பம்,
கடக்குட்டி,
கடலம்,
காட்டுவாக்கன்,
கன்னாசு,
செணம்,
செங்கவடுக்கை,
சீனிச்சட்டி போன்ற சொற்களைச் சுட்டலாம்
இலக்கியத் தமிழையும், கருத்துப் பரிமாற்றத்தையும் வேறிட்டுப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அரசியல் பின்னணி,
கல்விப் பின்னணி, சமயப் பின்னணி, சாதியம்,
பெண்ணிலை பொருளாதாரச் சூழல், இலக்கியச் சூழல் ஆகியன தமிழ்ப் புத்திலக்கியங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தன. மேற்கூறிய கருத்தாக்கங்கள் இக்காலப் புனைகதைகளில் வெளிப்படுகின்றன.
வட்டார வழக்குச் சொற்கள் இலக்கியங்களினால் ஒரு வட்டாரத்தின் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றைப் பிறிதொரு வட்டாரத்தைச் சார்ந்த வாசகர்கள் அறிந்து கொள்ள உதவுகிறது. வட்டார வழக்கச் சொற்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில படைப்பாளர்கள் வட்டார வழக்குடன் படைப்புக்களைப் படைத்துத் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அத்தகையை படைப்பாளர்களின் படைப்புக்கள் வாயிலாக அறியப்படும் வட்டார வழக்குச் சொற்களைத் தொகுத்து அகராதி நூல்கள் தயாரிப்பதோடு
புனைகதைகளில் பதிவு செய்யப்படாத வழக்குச் சொற்களையும் கள ஆய்வு மூலம் கண்டுபிடித்து ஆவணப்படுத்தினால் வட்டாரம் சார்ந்த புனைகதைகளை படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் ஏதுவாக இருப்பதோடு பழமையைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி வளரும். தமிழை ஆட்சி மொழியாக்கி அறிவியல் மொழியாக்கி கல்வித் தமிழாக்கி, அலுவலகத் தமிழாகச் செயல்படுத்தும் நாள் தான் பிறமொழி கலப்பில்லாத ஒரு தனித்தமிழ் இலக்கியங்களை உருவாக்க முடியும் எனலாம்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு